ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே! – பேட்ட விமர்சனம்!

petta movi review

நடிகர் நடிகைகள் : ரஜினி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, ராம்தாஸ், விஜய்சேதுபதி, சசி குமார், சிம்ரன், திரிஷா மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தோஸ்துகள்…

எழுத்து இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்

இசை : அனிருத்

ஒளிப்பதிவு : திருநாவுக்கரசு

தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்

ஒரு ஊர்ல பேட்ட வேலன் என்ற சாமி இருந்துச்சாம்… அந்தக் கோவில்ல அனாதையா ஒரு குழந்தை இருந்துச்சாம்… அந்தக் ” குழந்தை ” தான் பின்னாளில் சாமிப் பெயரான பேட்ட வேலன் என்ற ஊரைக் காக்கும் காவலனாக மாறுகிறது. பேட்ட என்ற தலைப்பிற்கு இதுதான் பெயர்க்காரணம்.

எடுத்ததும் நாலு பேரை அடித்து துவைத்துவிட்டு சந்திரமுகி ஸ்டைலில் வாகனம் ஒன்றின் பின்பகுதியில் கால் மேல் கால் போட்டபடி அறிமுகமாகிறார் காளி எனும் ரஜினி. இடைவேளை வரை காளியாக இருக்கும் இதே ரஜினி தான் இடைவேளைக்குப் பிறகு பேட்ட வேலனாக வலம் வருகிறார்.

மந்திரியின் சிபாரிசுடன் ஹாஸ்டல் வார்டனாக சேர்கிறார் காளி. பணக் கார பசங்க எனும் வானரக் கூட்டங்கள் நிறைந்த ஹாஸ்டலில் மெஸ் சாப்பாடு கான்ட்ராக்ட், கேண்டீன் காண்ட்ராக்ட் பிடித்திருக்கும் நரேனை, நரேனின் பையனான பாபி சிம்ஹாவை அடித்து வெளுத்து தன் வழிக்கு கொண்டு வருகிறார்.

இன்னொரு பக்கம் காளியிடம் தங்களது காதலுக்கு தூதுபோக நாடும் மேகா ஆகாசும் அவரது லவ்வரும், அவர்களுக்கு உதவ போன இடத்தில் காளிக்கு கிடைத்த காதலி சிம்ரன்… இப்படி படத்தின் முதல் பாதி காதல், காமெடி, மாஸ் பைட் சீன் என்று தாறுமாறு தக்காளிச் சோறு ரகம்.

இடைவேளியில் அறிமுகமாகிறார்கள் சிங்காரம் (நவாசுதீன் சித்திக்), மாலிக் (சசி குமார்), இயக்குனர் மகேந்திரன் போன்றோர். இதற்குப் பிறகு வந்த காட்சிகள் ஒவ்வொன்றும் கபாலியை, காலாவை மீண்டும் எடுத்து வைத்தது போல இருந்தது.

இந்து முஸ்லிம் திருமணத்தின் போது கலவரம் ( காலா & பேட்ட ) , ரௌடியாக வளர்ந்து நிற்பவனை மகன் என சொல்லுதல் ( கபாலி தன்ஷிகா & பேட்ட விஜய் சேதுபதி ), பூங்கொடியின் மகன்டா நீ ( கபாலி கலையரசன் & பேட்ட அன்வர் ), ராமாயணத்துல இருந்து சில வரிகள் ( காலா – வில்லன் ராமனிடம் வீழ்ந்த ராவணனாக & பேட்ட – வாலியை சூழ்ச்சியால் ஏமாற்றிய ராமனாக ) இப்படி பல காட்சிகள் கபாலியையும் காலாவையும் நினைவூட்டுகிறது. ஆக பேட்ட கபாலியை தாண்டவில்லை. பாட்ஷா பாட்ஷா தான்! கபாலியை நெருங்க முடியாத பேட்ட எந்த விதத்திலும் பாட்ஷாவை நெருங்க கூட இல்லை.

பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, சசி குமார், இயக்குனர் மகேந்திரன் போன்றோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். அனிருத் இசையில் இளமை திரும்புதே, ஊலாலா பாடல் கேட்கும் ரகம். பின்னணி இசை வழக்கம் போல காதை கிழிக்கிறது. இன்னும் ஒரு சில இடங்களில் முத்து, படையப்பா படத்தில் இடம்பெற்றிருந்த பின்னணி இசையை கலந்துகட்டி ஒலிக்க விட்டிருந்தார். திருவின் ஒளிப்பதிவு அழகு! பிரமிப்பு! – முதல் பாதியில் மட்டும்! இரண்டாம் பாதியில் ஓவர் லைட்டிங்!  எடிட்டிங் தான் படத்தை ஓரளவுக்கு காப்பாற்றுகிறது.

அப்படி இருந்தும் இரண்டாம் பாதியில் ரசிகர்கள் நெளிய ஆரம்பிக்க, கிளைமேக்ஸில் ட்விஸ்ட் என்ற பெயரில் நெளிந்தவர்களை நோகடித்து அனுப்புகிறார் இயக்குனர். டுவிஸ்ட்டில் படத்தின் ஒட்டுமொத்த பலமும் நொறுங்கி விடுகிறது. கொஞ்சம் கூட அறவுணர்வு இல்லாத காட்சி அது.

மனிதன் என்பவன் தெய்வமாகிறான்… பாடலோடு தொடங்கும் மார்கெட் பைட் சீன்…

மலர்ந்தும் மலராத பாடலோடு துவங்கும் டார்ச்லைட் பைட் சீன்… பேக் கிக் ஷாட்… பாத்ரூம் பைட் சீன் ( ஜிகிர்தண்டா தாக்கம் )…

பேட்ட வேலன் எண்ட்ரி சீன்… போன்ற இடங்களில் ரசிகர்களின் விசில் சத்தம் காதை கிழித்தது. ஸ்டண்ட் மாஸ்டர் மாஸ் காட்டிவிட்டார். அதிலும் நெருப்பை பற்றி வைத்து அந்த வெளிச்சத்தில் நின்ஜா சுத்தும் காட்சிக்கு தியேட்டரே அதிர்ந்துவிட்டது.

Our world today political என்ற புத்தகம் இனி அதிக அளவில் விற்பனை ஆனாலும் ஆகலாம். ஆம் கபாலியில் ( என் தந்தை பாலைய்யா ), காலாவில் ( இராவண காவியம், டேனியல் படைப்புகள் ) , பேட்ட படத்தில் ( Our world today political) புத்தகங்களை ரஜினி படிப்பது போல காட்சி அமைந்துள்ளது.

“இங்க படிக்கறது பூரா வானரக்கூட்டம்…”,

“சீனியர புகழ்ந்து பாடுங்க… பாபி டான்ஸ்…”,

“சீனியர்ஸ் புதுசா லந்தவங்கள அன்பா வாழ்த்தி வரவேறுங்க பாப்போம்…”,

“வயிறு நிறைஞ்சா தான் புத்தி வேலை செய்யும்…”,

“சோத்துல கை வச்சிருக்காங்க இல்ல…”,

“இத்தன வருசமா நம்ம இடல்யி தின்ன நன்றிகூட இல்ல…”,

“மிசா 109 – பயம் இல்ல சூதானம்…”,

“பிரியாணி ஹீலர் இல்ல பிரானிக் ஹீலர்…”,

“போய்த்தொலையறேன்… என் கருமம்…”,

“ஐயஐய இது நல்லா இருக்கே…”,

“உன்னை ஒன்று கேட்பேன்…”,

“அன்குள்னு மட்டும் கூப்டாதா எதோ இடிக்குது…”,

“பூஞ்சோலை நர்சரி சீன்..”,

“கடந்து போறதுதானே வாழ்க்கை…”,

“என்ன காளி சார் யார்கிட்ட… உன் மாமியார்கிட்ட…”,

“வாட்சப் பேஸ்புக்னு லவ் பண்ணிட்டு பத்தரமா வீட்டுக்குப் போய் சேருங்க…”,

“பிப்ரவரி 14 இந்துத்துவா திருமண கட்டாயம்…”,

“வாடா புரொபசர்…”,

“டெரர் பாய்ஸ்சு…”

“சிங்கார தோட்டம் மணல்கொள்ளை…”,

“மகேந்திரன் மரணம்… “,

“புரூஸ்லி கராத்தே பள்ளி…”,

“எழுதி வச்சாக்குடா… பேப்புர் போனா கொண்டுவரலயே…”,

“பாடும் பறவை இன்னிசைக் குழு… வைபவ் ரஜினி ஆட்டம்…”,

“இந்து முஸ்லிம் திருமணத்தின் போது சண்டை…”

“குர்ஆன் முன்னாடி தாலிகட்டுதல்…”

“ஒட்டுக்கேட்டயாடா நாதாரி… அவன் அவன் செயலுக்கு அவஅவன்தான் அனுபவிக்கனும்…”

“நல்லவானா இரு… ரொம்ப நல்லவானா இருக்காத…”

“எதிர்பார்த்தது போலவே தேங்காய்ல பாம்…”

“கல்யாண மண்டபத்தில் நடிப்பில் மாஸ் காட்டிய நவாசுதீன் சித்தீக்…”

“ரயிலில் பிரசவம் பார்க்கும் திருநங்கை – தளபதி சீன்…”

“நீ லவ்வுக்காக எவ்வளவு பிரச்சினை ஆனாலும் இழூப்ப.,. உன் ரத்தம் அப்படி…”

“நாம எழுந்த நிக்கறது தான் நாம கொடுக்கற முதல் அடி…”

“உயிர் போனா தான் தாலிகட்ட முடியாது… மூனு விரல் போனா தாலி கட்டலாம்… “

“கலப்படமே இல்லாத அக்மார்க் ஐட்டக்காரன்…”

“உலகத்துல எந்த மூலைக்கப் போனாலும் உதவுறதுக்கு ஒரு தமிழன் இருப்பான்ல.,.”

“போன்பேசும்போது சத்தம் கேட்காதபடி நைசாக தக்காளி நறுக்குவது…”

“வயிறு நிறைய சாப்ட்றோம்… சம்பவத்துல இறங்கறோம்…”

“என் அனுபவத்துல சொல்றேன்… தம் உடம்பக்கு நல்லது இல்ல…”

“எலி வளைல வந்து மாட்டுன புலிக்குட்டி…”

“ரஜினியைப் பார்த்து விஜே சொல்லும் மாஸ்…”

“துப்பாக்கி தோட்டா தெறிக்க சிகரெட் பிடிக்கும் விஜே…”

“பழிவாங்குவதற்காகவே உன்ன பலியாடா வளத்துருப்பான்… சொந்தப்பையன் மாதிரி அன்பா வளத்துருக்க மாட்டான்…”

“ராமாயணத்துல வாலின்னு ஒருத்தன் இருந்தான்… “

இப்படி படம் முழுக்க கைதட்டல் பெற வேண்டுமென்று சின்ன காமெடி வசனங்கள், பன்ச் வசனங்கள், திடீர் திருப்பங்கள், ரஜினியின் குறும்புகள் போன்றவை இடம்பெறுகின்றன. அவை ஓரளவுக்கு நல்ல பலனையும் தருகின்றன.

இரண்டாம் பாதியை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு எடுத்திருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும். கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டால் ஓகே ரக படம் என்ற பெயரை சம்பாதிக்கிறது.

காளி ஆட்டம் – செம ஜாலி & மரண மாஸ்…

பேட்ட ஆட்டம் – கொஞ்சம் தடுமாற்றம்…

Related Articles

சிரியாவில் என்ன நடக்கிறது?... சமூக ஊடகங்களைக் கடந்த ஒரு வாரமாக ஆக்கிரமித்து இருப்பது சிரியா உள்நாட்டுப் போர் குறித்த செய்திகள் தான். கொத்து கொத்தாக குழந்தைகளும், பெரியவர்களும் கொன்...
ஜெயலலிதாவும் ரம்யா கிருஷ்ணனும்! – ... ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் எனக்கு நடிக்க வேண்டும் போல் இருக்கிறது என்று பல நடிகைகள் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். ...
சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்... சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல் பற்றிய விவாதம் இப்போது நடந்து வருகிறது. இது மக்களுக்கான திட்டம் மக்கள...
பிச்சிப் பூ நாவல் விமர்சனம்!... எழுத்தாளர் பொன்னீலன் 80 ஆண்டுகளை கடந்துள்ளார், எழுத்துலகில் 55 ஆண்டுகளை கடந்துள்ளார். பல நூல்கள் அவர் எழுதியிருக்க அவருடைய பிச்சிப் பூ என்ற நாவலை (75 ...

Be the first to comment on "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவல இல்லே! – பேட்ட விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*