பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள்! – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்?

Must watchable movies for Parents

பிள்ளை வளர்ப்பு என்பதைப் பற்றி இன்னமும் சில பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அதை எதோ ஒரு தொந்தரவுக்கு உரிய செயலாகவே பார்க்கின்றனர். அப்படிபட்ட பெற்றோர்கள் எல்லாம் கண்டிப்பாக கீழ்வரும் திரைப்படங்களை ஒருமுறையாவது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

1.Big daddy

நகைச்சுவை திரைப்படம் இது. நண்பனின் பிள்ளையை தன் பிள்ளை என்று தத்தெடுத்து வளர்க்கிறான் நாயகன். மற்ற அப்பாக்களைப் போல் இல்லாமல் நாயகனோ சிறுவனை அவன் இஷ்டத்துக்கு விட்டு இளம் வயதிலயே ரூல்ஸை திணித்து கொடுமை படுத்தாமல் வளர்க்கிறான். இது பின்னாளில் கோர்ட் வரை செல்லக்கூடிய பிரச்சினையாக மாறுகிறது. கோர்ட்டில் இடம்பெறும் காட்சிகள் ஒவ்வொன்றும் கருத்து மிகுந்தவை. 7ஜி ரெயின்போ காலணி, திருடா திருடி, வேலையில்லா பட்டதாரி, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் இடம்பெறும் அப்பாக்களை  போல இந்தப் படத்திலும் ஒரு அப்பா வருகிறார். அவரை திருத்துகிறான் மகன். எப்படி திருத்துகிறான் என்பது தான் ட்விஸ்ட்.

2.Persuit of happiness

லட்யமும் முக்கியம் அதே சமயம் பிள்ளையும் முக்கியம். பிள்ளை பெற்ற பிறகு எங்கே போய் லட்சியத்தை அடைவது என்று மனம் தளர்த்து கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு சகித்து வாழும் ஒவ்வொரு பெற்றோரும் இந்தப் படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். இதே படத்தின் சாயலில் சமீபதில் சமுத்திரக்கனியின் ஆண் தேவதை படம் வெளியானது என்பது குறிப்பிடத் தக்கது.

3.Goal

லட்சியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத பாமர அப்பா மகனின் லட்சியத்துக்கு தடை விதிக்கிறார். அப்பாவை விட்டு வெளியேறி தன் திறமையை நம்பி தன் லட்சியத்தை நிறைவேற்ற போராடுகிறான். அப்பா உயிரோடு இருக்கும்போதே பிரபலமாகிறான். மகன் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டான் என்ற மனநிறைவில் அப்பா உயிரிழக்கிறார். அப்பாவின் இறுதி சடங்கா? அல்லது தன்னுடைய லட்சியமா? என்ற நேரத்தில் நாயகன் எதை தீர்மானிக்கிறான் இறுதியில் தன்னுடைய லட்சியத்தை அடைந்தானா என்பதே கதை.

4.நண்பன் & ஜீவா

எல்லோரும் அறிந்ததே. ஆடுகளம் நரேன் மற்றும் போட்டோகிராபர் ஸ்ரீகாந்த் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சியை நாம் அவ்வளவு எளிதில் மறக்கப் போவதில்லை. விஜய் டிவி பார்ப்பவர்கள் திருந்தினார்களா என்பது தான் கேள்விக்குறி. விஷ்ணு விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ஜீவா. அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்காத கிரிக்கெட்டில் சாதிக்கிறார் நாயகன். அப்பாவின் முகத்தில் பெருமிதம் பொங்குகிறது.

5.எம்மகன்

நான் லா அந்தக் காலத்துல எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா, பொம்பள ஷோக்கு கேக்குதா என்று எதற்கெடுத்தாலும் மகனை திட்டிக்கொண்டே இருக்கும் மூக்கு பொடைப்பான நாசரின் குணாதிசியங்கள் தான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அப்பாக்களிடம் காணப்படுகிறது.

6.தங்கமீன்கள் & பசங்க 2 & அப்பா & டோனி & சந்தோஷ் சுப்ரமணியம்

குழந்தைய குழந்தையா இருக்க வுடுங்க… மெச்சூரிட்டிங்குற பேருல அவள சாகடிக்காதீங்க என்று வலியுறுத்திய படம். எந்தப் பள்ளியில் பிள்ளைகளின் குழந்தை தனத்துக்கு சுதந்திரம் கிடைக்குதோ அந்தப் பள்ளியில் படிக்க வையுங்கள். ஆம்பள பையன்னா இன்ஜினியரிங் பொம்பள புள்ளன்னா டாக்டர் என்று தங்களுடைய கனவுகளை பிள்ளைகள் மீது திணித்து பிள்ளைகளை பொம்மை போல் நடத்தாதீர்கள் என்று வலியுறுத்திய படங்களை பெற்றோர்கள் நிச்சயம் ஒருமுறையாவது பார்க்க வேண்டும்.

7.ஹரிதாஸ்

மத்த பையன் மாதிரி உங்க பையன் இல்ல… அவன் கொஞ்சம் ஒருமாதிரி என்று எல்லோ ஆசிரியர்களும் உறவினர்களும் சொல்ல என் பையனை வெற்றிமகனாக மாற்றிக் காட்டுவேன் என்று சபதமெடுக்கிறார். இறுதியில் மகன் என்ன ஆனான் என்பதே கதை. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடைய பெற்றோர்களுக்கு இந்தப் படம் மாமருந்து.

8.விஸ்வாசம் & கனா & தங்கல் & இறுதிச்சுற்று & ஜக் தே இந்தியா & எதிர்நீச்சல்

விளையாட்டுத் துறையில் பெண்கள் அதிகம் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்திய படங்கள். பொட்டப் புள்ளய வயசுக்கு வந்ததும் பட்டுனு கட்டிக் கொடுக்கறத வுட்டுப்புட்டு வயசுக்கு வந்தப் புள்ளய அரைக்கால் டவுசர் போட்டுக்கிட்டு விளையாட வுட்றாம் பாரு… இவன்லா அப்பனா… என்று சொந்த பந்தங்கள் வாட்டி எடுத்தாலும் மகளோட லட்சியமே முக்கியம் என்று மகளுக்கு உறுதுணையாக இருக்கும் அப்பாக்கள் குருக்கள் நிறைந்திருக்கும் படங்கள்.

இத்தனை படங்கள் பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது. இதில் பல படங்களை சன் டிவி, கே டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களில் திரும்ப திரும்ப பார்த்திருந்தாலும் பெற்றோர்கள் திருந்துவதில்லை.

Related Articles

அன்பை பகிர்வோம் ! – மீம் கிரியேட்ட... சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவைப் பற்றி தி இந்து நடுப்பக்கத்தில் கட்டுரை எழுதி இருந்தார் நடிகர் சூர்ய...
ஆளப்போவது யார்? தேர்தல் முடிவுகள் ஒரு பா... நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் :வேலூர் மாவட்டத்தில் தேர்தல் ரத்து, புதுச்சேரி தனி தொகுதி ஆகிய காரணங்களால் இரண்டு தொகுதிகளை விடுத்து மீதி 3...
இதய நோய்களும் அதற்கான நவீன சிகிச்சைகளும்... இதயம் காக்கும் புதிய சிகிச்சைகள்! ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் நாள் ' உலக இதய விழிப்புணர்வு நாள்'  எனக் கொண்டாடி வருகிறோம். காரணம் நம் உயிருக்கு பாது...
மார்ச் 8 – 5 years of நிமிர்ந்து ந... * "சிலையும் நீயே சிற்பியும் நீயே, உன்னை நீ சரிசெய்துகொள்... உலகம் தானாக சரியாகி விடும்... " * " ஒழுக்கம், உண்மை, நேர்மை, பெரியவங்கள மதிக்...

Be the first to comment on "பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள்! – பிள்ளைகள் பொம்மைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் எப்போது உணர்வார்கள்?"

Leave a comment

Your email address will not be published.


*