4 years of எனக்குள் ஒருவன் – மார்ச் 6

4 years of Enakkul Oruvan

இயக்குனர் பிரசாத் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் என்ற ரீமேக் திரைப்படம் வெளியாகி இன்றோடு ( மார்ச் 6, 2015 ) நான்கு வருடங்கள் ஆகப் போகிறது. ஆனாலும் துரையண்ண தியேட்டருல விளக்கு பிடிக்கும் வேலை செய்யும் விக்கியை,  அவன் காதலை அவன் சிரிப்பை அவன் அழுகையை ஏக்கத்தை எல்லாம் எதோ நேற்று தியேட்டர்ல பாத்து வந்தது போல இருக்கிறது. ஆனால் அதற்குள் நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.

தியேட்டருல வேல செய்யும் அப்பாவி விக்கி தூக்கம் வராமல் தவிக்கிறான். தூக்கம் வர வைக்க என்னால் முடியும் என்று அவனை ஒருவன் எங்கோ அழைத்துச் செல்கிறான். அங்கு அவனுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையை கனவில் வாழும் வாய்ப்பை தரக்கூடிய லூசியா மாத்திரை வழங்கப் படுகிறது. அவன் கனவுலகத்தில் பாதி நிஜ உலகில் மீதி என்று இரண்டு விதமான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறான். படம் பார்க்கும் பார்வையாளர்களோ இந்த வாழ்க்கை தான் நிஜ வாழ்க்கை இது கனவுலக வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்க கிளைமேக்ஸில் ஒரு டுவிஸ்ட். அப்போது Your small life is someone else’s big dream… என்று முடிகிறது இந்த அழகான படம்.

சேரனின் தவமாய் தவமிருந்து, சர்ஜூனின் லட்சுமி குறும்படம் போன்றவற்றில் நிகழ்கால வாழ்க்கையை ப்ளாக் & ஒயிட்டிலும்  நடந்து முடிந்த வாழ்க்கையை கலரிலும் காட்டியிருப்பார்கள். அதே போல இந்தப் படத்திலும் கனவுலக வாழ்க்கையை கலரிலும், நிகழ்கால வாழ்க்கையை பிளாக் ஒயிட்டிலும் காட்டி பார்வையாளர்களுக்கு குழப்பத்தை அளிக்காமல் தெளிவாக சென்று டுவிஸ்ட்டில் முடிகிறது.

நடிகர் சித்தார்த் தியேட்டரு விக்கி நடிகர் விக்னேஷ் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதே போலவே துணைக் கதாபாத்திரங்களும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய படம். குறிப்பாக ஆடுகளம் நரேன் அட்டகாசம் செய்திருப்பார். நடிகர் விக்னேஷைப் பார்த்து நமக்கு எந்த வித ஈர்ப்பும் ஏற்பட வில்லை என்றாலும் தியேட்டரு விக்கி நம்மை வெகுவாக கவர்கிறார். பெண் பார்க்க போன இடத்தில் ” தியேட்டருல விளக்கு புடிக்குறேன்… ” என்று செய்யும் தொழிலை மறைக்காமல் வெளிப்படையாக சொல்வதாகட்டும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள போன இடத்தில் fuck என்ற கெட்டவார்த்தையை கற்றுக்கொண்டு வந்து அதே வார்த்தையால் காதலியை திட்டுவதாகட்டும்… தியேட்டரு விக்கி குணா கமலை நினைவூட்டி நம் மனதை வெகுவாக கவர்கிறான்.

இந்தப் படத்தின் இன்னொரு நாயகன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

” பிரபலமாகவே பிறந்த ஆளடா… புதிய பாதையை திறக்கிறேன்… “

“நானாக நான் இருந்தேன்… ஏன்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு…  தானா வந்த கணக்கு தலைகீழா இருக்கு… “

” பூ அவிழும் பொழுதில்… ஓராயிரம் கனா… ஓர் கனவின் வழியில்… அதே நிலா… ” என்று மூன்று அற்புதமான பாடல்களை தந்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.  

நடிகர் சித்தார்த்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும் இந்த அழகான படத்தை ஒருமுறையாவது பார்த்து விடுங்கள்.

Related Articles

கமல் – கலையும் கலைசார்ந்த இடமும் &... சட்டம்நடிப்பு : கமல்(போலீஸ்), சரத்பாபு(வக்கீல்), மாதவி(interior decration), ஒய்.ஜி. மகேந்திரன், மனோரமா மற்றும் பலர்.இயக்கம்: கே.விஜயன்இசை:...
ZEE5 தளத்தில் வெளியான சிகை, களவு திரைப்ப... சிகை:  மதயானைக் கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரையும் அந்தப் படத்தில் இடம்பெற்ற கோன கொ...
ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வ... எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க... இது எப்படி இருக்கு? எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குற...
இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கி... இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்...

Be the first to comment on "4 years of எனக்குள் ஒருவன் – மார்ச் 6"

Leave a comment

Your email address will not be published.


*