கலைஞர் கருணாநிதி எழுதிய பராசக்தி திரைப்பட வசனங்கள்!

Parasakthi movie dialogues written by Kalaignar Karunanidhi

சமீபத்தில் நடந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பராசக்தி படம் திரையிடப்பட்டது. பல ஆண்டுகள் ஆனாலும் பேசக்கூடிய வியக்ககூடிய படமாக இருக்கும் இந்தப் படத்தின்

மூலக்கதை – M.S. பாலசுந்தரம் எழுத

திரைக்கதை வசனம் – மு. கருணாநிதி எழுதியுள்ளார். சில வசனங்கள் இங்கே :

வசனங்கள்:

  1. கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது? சொந்த நாட்டிலே வாழ முடியாமல் அயல்நாட்டிற்குச் சென்று வாழும் மக்கள் அழுது அழுது சேர்த்த கண்ணீரால் தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.

 

  1. மதராசுல மனுசன் மிருகமா தான் இருக்கான்… முதுகெலும்பு ஒடிய மூட்டை வண்டி இழுக்கிறானே… குதிரைக்குப் பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்சா இழுத்து கூனிப்போயிருக்கிறானே… நாயைப் போல சுருண்டு நடைபாதையில் குடும்பத்தோடு தூங்குகிறானே… அந்த நல்லவனை நாதியற்றவனை நாலுகால் பிராணியாய் மாற்றப்பட்ட மனிதனை சொன்னேன்… சென்னை புனிதமான நகரம்… இங்கே மனிதன் மிருகம்…

 

  1. பைத்தியக்கார உலகம்… இந்த உலகத்தில் ஏமாற்றுக்காரன் தான் பிழைக்க முடியும்… வயிற்றுக்கு இல்லாமல் வாடும்போது ஒரு பழத்தை எடுத்தேன்… அதற்குப் பரிசு அடி உதை. பைத்தியக்காரன் ஒரு சீப்பு பழத்தை திருடுகிறான்… உலகம் அவனுக்குப் பயப்படுகிறது…

 

  1. பெரிய மனுசன் வீட்டு அந்தப்புரத்துல தொழிலாளி மொதலாளி பிரச்சினைக்கு இடமே கிடையாது…

 

  1. ஏழைக்குப் பிரசாதம் கேக்குதா…

 

  1. உஷ்ன்னா ஓடுற பசங்க இப்ப உதைக்கற அளவுக்கு வந்துட்டாங்களா…

 

  1. இரக்கமற்ற மனுச சாதிய பகுத்தறிவாளர்னு சொல்றது தப்பு தான்…

 

  1. பிச்சைக்காரனாய் திரிந்தாய் வெட்கமில்லை… திருடனாக மாறினாய் அப்போதும் வெட்கமில்லை ஆனால் உன் ஏமாற்றத்தை வெளியில் சொல்ல வெட்கப்பட்டிருக்கிறாய்… வேடிக்கையான மனிதன்!

 

  1. சமுதாயமே பிச்சைக்கார மடம் தான் ஆனால் அதில் நீ திருவோடு இல்லாத பரதேசி… சமுதாயம் பைத்தியக்கார விடுதிதான் ஆனால் அதில் நீ கல்லெறிய தெரியாத பைத்தியம்… சமுதாயம் திருடர் குகை தான் ஆனால் அதில் நீ கண்ணுக்குள் பிடிக்கத் தெரியாத திருடன்…

Related Articles

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தி... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல...
காப்பான் அடுத்த அயனா அல்லது அடுத்த அஞ்சா... அயன், மாற்றான் படங்களை தந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. அந்த எதிர்பார்ப்பை காப்பான் படம் சமன் செ...
போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவிலேயே குழந்... போக்குவரத்து நெரிசல், பயணம் செய்பவர்கள் எவரும் விரும்பாதா ஒன்று. போக்குவரத்து நெரிசலில் சிக்குவது என்பது அன்றைய ஒட்டுமொத்த நாளையே பதற்றம் நிறைந்த ஒன்...
எளிதில் மறக்க முடியாத பத்தாம் வகுப்பு சச... இன்று கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் அவர்களின் பிறந்த நாள். சமூக வலை தளங்கள் முழுக்க சச்சினின் போட்டோக்கள் உலாவி வருகிறது. அத்துடன்...

Be the first to comment on "கலைஞர் கருணாநிதி எழுதிய பராசக்தி திரைப்பட வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*