17 Years of துள்ளுவதோ இளமை

17 years of Thulluvadho Ilamai

நடிகர் தனுஷ் அறிமுகமான படம். முதல் படமே A  சர்டிபிகேட் படம். ரிலீசாகி இன்றோடு ( மே 10, 2019 ) 17 வருடங்கள் ஆகிறது. இன்று தனுஷ் அடைந்திருக்கும் உயரமோ வியப்புக்குரியது. தனுஷைப் போலவே இயக்குனர் செல்வராகவனும் அடைந்திருக்கும் உயரம் வியப்புக்குரியது. தம்பி நடிப்பில் கெட்டிக்காரன், அண்ணன் இயக்கத்தில் கெட்டிக்காரன் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்கள் இந்த சகோதரர்கள்.

திரைக்கதை வசனம் இரண்டையும் செல்வராகவன் எழுத கதை எழுதி இயக்கியிருந்தார் இயக்குனர் கஸ்தூரி ராஜா. படம் வெளியானது 2002ம் ஆண்டு. ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இதை அடுத்து 2003 ம் ஆண்டு வெளியான ஷங்கரின் பாய்ஸ் படமும் இதே மாதிரியான கதைக்களத்தை கொண்டிருந்ததால் பாய்ஸ் படமும் எதிர்ப்பை சந்தித்தது.

டீன் ஏஜ் என்றாலே அது துள்ளிப்பாயும் பருவம். அப்படிப்பட்ட பருவத்தில் இருக்கும் மாணவ மாணவிகளின் மேல் பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் எப்படிபட்ட விதிகளை திணித்து அடக்கப் பார்க்கிறார்கள் அந்த விதிமுறைகள் மாணவ மாணவிகளை எந்த நிலைமைக்கு கொண்டு போனது என்பதே மையக்கதை. துள்ளுவதோ இளமை மற்றும் பாய்ஸ் இரண்டு படங்களிலுமே மாணவ மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இரண்டு படங்களிலுமே பெற்றோருக்கு அறிவுரை சொல்கிறார்கள். துள்ளுவதோ இளமை படத்தில் மாணவ மாணவிகளுக்கு உறுதுணையாக இருப்பவர் ரமேஷ் கண்ணா.பாய்ஸ் படத்தில் விவேக்.

வீடே சமூகத்தின் முதல் பள்ளிக்கூடம் என்பதை சொல்கிறது துள்ளுவதோ இளமை படம். நாயகனின் அப்பா மீனவனாக இருக்கிறார். பையன் முன்பு செக்ஸ், பீடி பிடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். நாயகியின் அப்பா மகளை போன் பேச விடாமல் எந்நேரமும் சந்தேகமாகவே பேசிக்கொண்டு இருக்கிறார். இன்னொரு மாணவனின் அப்பாவோ மகன் முன்பே மனைவியை ஒதுக்கி வேலைக்காரியுடன் குடும்பம் நடத்துகிறார். இன்னொரு மாணவியின் அப்பா அம்மாவோ மகளை தனியே விட்டுவிட்டு துபாயில் சொத்து சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி தப்பெல்லாம் பெற்றோர்கள் மீது இருக்க பிள்ளைகளை மட்டும் எந்நேரமும் கண்டிப்பது ஏன்? என்ற  வினாவை எழுகிறது இந்தப் படம்.

படத்தின் இன்னொரு பலம் யுவனின் இசை. நான்கிற்கும் மேற்பட்ட பாடல்கள் இருந்தாலும் அத்தனை பாடல்களும் பட்டிதொட்டி ஹிட். நெருப்பு கூத்தடிக்குது பாடல் இன்றும் பல ஆடலும் பாடலும் மேடைகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 17 வருடங்களுக்கு முன் இந்தப் படம் வெளியாகியுள்ளது. அப்போதே படத்தில் காண்டம் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது ஐய ச்சி என்று முகம் சுளித்தவர்கள் இன்று இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள். செல்வராகவன் படத்திற்கு இது வழக்கமாக நடப்பது தானே.

Related Articles

காதலை தாண்டி “காதலும் கடந்து போகும... சூதுகவ்வும் என்ற தனது முதல் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி.  அவர் சில வருடங்கள் கழித்து ...
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு யுபிஎஸ்சி ... கடந்த ஞாயிற்றுக்கிழமை 12000க்கும்  மேற்பட்ட யுபிஎஸ்சி தேர்வர்கள் தங்களுக்கான முதல்நிலை தேர்வுகளை விஜயவாடா நகரில் ஒதுக்கப்பட்டிருந்த 27 தேர்வு  மையங்கள...
தோழர் வெங்கடேசனை மிஸ் பண்ணாதீங்க! –... போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று பஸ்ஸை காணோம் என்று புகார் தருகிறார் நாயகன். பிளாஸ்பேக் விரிகிறது. லட்சுமி சோடா பேக்டரி நடத்தி வரும் முதலாளி நாயகனின் கதை ச...
மொய் வாங்க விருந்து வைக்கலாம், பரீட்சைக்... இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்பவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதைப் ப...

Be the first to comment on "17 Years of துள்ளுவதோ இளமை"

Leave a comment

Your email address will not be published.


*