இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி உள்ள படம் கீ. பல மாதங்களுக்கு முன்பே ரிலீசாகி இருக்க வேண்டிய படம். தற்போது வெளியாகி பிஎஸ் மித்ரனின் இரும்புத்திரை (ஹேக்கிங் என்பதை கதைக்கரு) போலவே நல்ல கவனத்தை பெற்றுள்ளது.
ஒரு பொண்ண நீங்க எங்க வேணாலும் தொடலாம்… ஆனா அதுக்கு முன்னாடி அவ மனச தொட்ருக்கனும்…
இந்தக் காலத்து பசங்களுக்கு அம்மா அப்பா பத்து வயசு வரைக்கும் தான் தேவப்பட்றாங்க… ஆனா எல்லா வயசுக்கும் தேவப்பட்றவங்க நண்பன்… நான் அப்பாவா இருக்கறதவிட நண்பனா இருக்க ஆசைப்பட்றேன்…
வெர்ஜினிட்டுங்ஙறது பொண்ணுங்களுக்கு மட்டும்தானா… ஆம்பளைங்களாம் செனை மாடு மாதிரி யாருகூடவேனா…
ஒரே ஒரு துளி கஷ்டம் வந்தாலும் அத உனக்கு தெரியாமலே தாங்கிக்க உங்கப்பா நான் இருக்கேன்…
வீட்டுல இன்டர்நெட் இருந்தா நாம மட்டும் உலகத்த பார்க்குறோம்னு அர்த்தம் இல்ல… உலகம் நம்மளயும் பாக்குதுன்னும் அர்த்தம்…
ஒரு அறிவாளி எப்ப தெரியுமா முட்டாள் ஆவான்… தன்னை தானே அறிவாளின்னு நினைச்சுக்கும் போது… வாய்க்கும் வயித்துக்கும் நடுவுல நெறைய கேப் இருக்கு. அது பணத்தால மட்டும்தான் நிரம்பும்… போன்ற வசனங்கள்
கைதட்டலைப் பெறுகின்றன.
பேஸ்மேக்கர் ஹேக்கிங் வியப்புக்குரிய காட்சி. உங்கப்பாவ பாத்ததும் என்று நாயகி சொன்னதும் ஆர்ஜே பாலாஜி சிந்துசமவெளி என்று கமெண்ட் அடிக்க தியேட்டரில் கலகல. துறுத்தல் இல்லாத பின்னணி இசை. சில இடங்களில் சிலிர்க்க வைக்கிறது. பாடல்கள் சுமார்.
அப்பா மகன் சென்டிமென்ட் சிரிக்கவும் வைக்கிறது கண்கலங்கவும் வைக்கிறது.
அனு தற்கொலைக்கு முன் காணும் பிரமைக் காட்சிகள் திகிலாக இருந்தன. பல நடிகர்கள் இருந்தாலும் படம் முழுவதையும் ஜீவாவே தாங்கி பிடித்துள்ளார். ஆர்ஜேபாலாஜி வரும் இடமெல்லாம் கலகலப்புக்கு பஞ்சமில்லை. த்ரில்லர் படம் விரும்பி பார்ப்பவர்களூக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். மற்றவர்களுக்கு ஒரு சில காட்சிகள் புரிவது கடினம்.அதை இயக்குனர் செய்திருந்தால் இந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.
Be the first to comment on "ஜீவாவின் கீ படம் எப்படி இருக்கு?"