அவ்வை சண்முகி
இயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார்
நடிகர்கள்: கமல்(அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டர்), மீனா, ஜெமினி கணேசன், மணிவண்ணன்(முதலியார்), (பெரும்பாலான கமல் படங்களில் இருக்கும் நாகேஷ், நாசர், வையாபுரி, டெல்லி கணேஷ்,… போன்றோர் இந்தப் படத்திலும் உள்ளனர்.)
கதை: விவாகரத்து வாங்கிய மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காக மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு அவள் வீட்டுக்குப் பெண் வேடமிட்டு சென்று வாழ்க்கையைப் பெறுவது.
அவ்வை சண்முகி font styleம் தேவர்மகன் font styleம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி. அதில் சிவாஜி, இதில் ஜெமினி. இரண்டு காதல் மன்னர்கள் இணைந்த படம் விவாகரத்துடன் தொடங்குகிறது. மகள் கண்ணாடி வெளியே நிற்க, மாப்பிள்ளையிடம் சிரித்து பேசுவதுபோல் வெளியே போடா என்று ஜெமினி சொல்லும் காட்சி செம. மாப்பிள்ளைக்கு வராத தட்சணை கொடுக்கிறார். ( இதே போல் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் காட்சி உள்ளது. ) ” பிள்ளையார் எங்க போவது…” ” இது பிள்ளையார் இல்ல… கணபதி… இந்திபட ஷூட்டிங்… ” நுணுக்கமான வசனம். குழந்தை கண் முன்னே பெற்றோர் விவாகரத்து ( அழகு குட்டி செல்லம் படத்தில் இதேபோல் காட்சி உள்ளது. ) “சம்பளமே இன்ஸ்டால்மென்ட்ல தான் வருது… ” ” நீ ரொம்ப மாறிட்ட…” ” ஆனா நீங்க ரொம்ப நாளா கொஞ்சம் கூட மாறல அதான் பிரச்சினை… ” போன்ற வசனங்கள் செம. சண்டை போட்டு பிரிய இருக்கும் தம்பதியினர் டிவியில் ஓடும் ஜோடிப் பொருத்தம்( முதியவர்கள் ) நிகழ்ச்சியை பார்ப்பது போல் பல படங்களில் காட்சிகள் வந்து உள்ளது. “ஆத்துல இல்ல வீட்டுல… ” ” என்ன பெரிய டைரக்டர்… அசோக் லெய்லேண்ட், டிவிஎஸ் டைரக்டரா… சாதாரண சினிமா டைரக்டர் தான… ” போன்ற வசனங்கள் செம. விவாகரத்து வழங்கியதற்கு ஒரு கூட்டம் கை தட்டுகிறது. சாமி கோயிலில் சாமியிடம் கேட்காமல் அப்பாவிடம் கேட்கிறாள் மகள். ” குட் பிரைடே… ” ” ஔவையார் போல் ஆக வேண்டுமென்று வேண்டிக்கொள்வது, கல்யாணமாகலனா டைவர்ஸ்ஸும் ஆகாது போன்ற மகள் பேசும் வசனங்கள் செம. கமல் மீது காதல் கொண்ட இன்னொரு நாயகி இருக்கிறாள். ஆனால் அவளுக்கு கமல் நோ சொல்கிறார். (அன்பே சிவம், இந்தியன், அவ்வை சண்முகி, தேவர் மகன்).மகளை தன்னுடன் இழுத்துச் செல்ல வீட்டு பின்பக்க கேட்டில் ஏற அது திறந்து இருக்கிறது. அவர் நடுகேட்டில் தொங்கிக்கொண்டிருக்கிறார்.(இதேபோல் பல காமெடி படங்களில் காட்சிகள் வந்து உள்ளது. ) பிச்சைக்காரர்கள் மீது அதீத அன்பு போல கமலுக்கு. அவ்வை சண்முகி, காதலா காதலா, பேசும்படம் போன்ற படங்களில் பிச்சைக்காரர்கள் பற்றிய காட்சிகள் வைத்து உள்ளார். சண்முகியை காதலிக்கும் மணிவண்ணன் கதாபாத்திரம் தான் ரெமோ படத்தில் வந்த யோகிபாபு கதாபாத்திரம். “சென்ட் வாசம் தூக்கலா இருக்கே… குளிக்காம வந்துட்டியோன்னு கேட்டேன்…” “கல்லா போதாதா கஜானா கேட்குது””பேச்சுவார்த்தை நடக்கும்போது வன்முறை கூடாது” “அவிங்க அப்பா பணக்காரர், எங்கப்பா ஏழை ஆச்சே… ” வசனம் செம. நகைக்கடையில் (இந்திக்காரன் கடையில் சோலிக்கே பீச்சாக்காஹே பாடல் ஒலிக்கிறது. தங்க கடையில் நின்றுகொண்டு “என்னப்பா ஒரே தங்கமா இருக்கு” என்ற வசனம் செம நக்கல். நகையின் அளவு 2மில்லி என்று சொல்கிறான் குடிகாரன். குடத்தை சுமந்துகொண்டு வரும் பெண்ணிடம் குழாய்ல தண்ணி வரல என்று சொல்வது செம கலாய். ரூமுக்குள் ஒழிந்து கொண்டு குரல் மாற்றிப் பேசுவது பல படங்களில் வந்து உள்ளது. அப்பா மகள் (காளைமாடு – கன்னுக்குட்டி) காம்பினேசன் செம. தெய்வத்திருமகள் மற்றும் தங்கமீன்கள், என்னை அறிந்தால்… போன்ற படங்களுக்கு முன்னோடி. வேல வேல பாடலில் கமலின் புகழ்பாடும்படி பாடல் வரிகள் உள்ளது. ” புரொஃபசன்… ” ” அப்ப நா ஹாப்பியா… ” ” ஆம்பளயான் பொண்டாட்டி விவாகரத்து பண்ணலாம் தப்பு இல்ல… ஆனா அம்மா அப்பா தப்பு பண்ணக்கூடாது… ” ” அழுவுறியா… சிரிக்குறியா… ” அழுவுறியா… ” “அப்ப சரி… ” போன்ற வசனங்கள் செம. திட்டுவது போல் கெஞ்சி கொஞ்சி வேலைக்காரியை வெளியே விரட்டுகிறார் டெல்லி கணேஷ் ( இது போல காட்சிகள் வடிவேலு காமெடி ஒன்று உள்ளது. ) கனல் கண்ணனுடன் அவ்வை சண்முகி சண்டை போடுகிறார். இதே போல் முதியவரை வம்பு இழுக்கும் காட்சி பவர் பாண்டி படத்தில் உள்ளது. )
“எங்களை யாரும் அசைக்க முடியாது ” என்று வசனம் பேசிய அரசியல்வாதியின் மேடையை காரோடு தூக்கிட்டு போகும் காட்சி செம. ஊமையாக நடித்து வேலைக்காரனாக நாசர் சேர்கிறார். இதேபோல் கமலின் உயர்ந்த உள்ளம் படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார். ருக்கு ருக்கு பாடல் வரிகள் செம. ” பூசல்கள் வந்தால் dont be angry… பொறுமையை காத்தால் வாழ்க்கை ஜாங்கிரி… அன்பு 50, 60 ஆனாலும் மலரும்” எந்த வயதானாலும் வாழ்க்கைக்கு துணை வேண்டும் என்பதை உணர்த்தும் வரிகள் குறிப்பிடத்தக்கவை.
அவ்வை சண்முகி அடிக்கடி பின்புறத்தை சொரிவது நகைப்புக்கு உரியது. டெல்லி கணேஷை தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பது கிரி வடிவேலு காமெடிக்கு முன்னோடியாக உள்ளது. “பேச்சு குளறுமே தவிர பேச்சு மாறாது” என்ற வசனம் செம. “Ball is in ur court” என்று ஜெமினி சொல்ல கமல் ஜாக்கெட்டை மூடும் காட்சி நக்கல். மீனாவின் தொடையை பார்க்கும் கமலை “வாழ்வு” தான் என்று மகள் கலாய்க்கும் காட்சி செம. சட்டம் படத்தில் சரத்பாபு கடிதம் படித்து கமலின் மனதை புரிந்துகொள்வார். இந்தப் படத்தில் டிவி பேட்டி. கோர்ட்டிலும் சரி, டிவி பேட்டியிலும் சரி, மீனாவை குழந்தை என்றே குறிப்பிடுவார் கமல். நாகேஷ், டெல்லி கணேஷ், மணிவண்ணன், நாசர் நால்வரும் சிரிப்புக்குப் பஞ்சம் இல்லாமல் செய்கிறார்கள். காலுக்கு சேவிங் செய்துவிட்டு கண்ணாடி காட்டும் நாகேஷ், ” நான் முஸ்லிம் தான்… ஆனா சத்யமா ஊமைங்க… ” என்று நாசர் அதிகமாக சிரிக்க வைக்கிறார்கள். மாடுகளை வெட்டுவது குறித்து இரண்டு இடங்களில் வசனங்கள் உள்ளது. இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தப் படத்திலும் ” சட்டம் கல்யாணத்த பிரிக்கலாம்… ஆனா காதல பிரிக்க முடியாது… ” என்ற வசனம் உள்ளது. கணவனை புரிந்துகொள்ளாமல் வீம்பாக அப்பா வீட்டுக்கு நாயகி செல்கிறாள். (இதேபோல் காட்சிகள் அப்பா படத்தில் உள்ளது)
Be the first to comment on "கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் -3 – அவ்வை சண்முகி ஒரு பார்வை!"