சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் கதை தொகுப்பு தான் ” பொட்டல் கதைகள் ” புத்தகம்.
ஆதிகாலத்து உரல்,மாற்றம், இஞ்சியும் சுக்கும், ஆனைக் காலன், திருதிரு, துப்பாக்கி ரவைகள், பூ உதிர பிஞ்சுதிர, பாட்டியின் சமயோசிதம், விசாலம், பிச்சிப் பூ, இந்தத் தெய், அழகியும் ராட்சசனும், சுரணை, சீதை சாபம், பேராசை, கில்லாடி, பழி, தாசய்யா… என்னை… , தெரியாது மேடம், புத்தியுள்ள, அன்பான அறிவியல், மொட்டைப் பிராமணத்தி, துணியே சாப்பிடு, பழிகாரி, குருடு, கூந்தப் பிள்ளை, விதி, புளுந்தான், மறுபிறவி, ரகசியம், சித்திரக் குட்டி, வேலையை மறக்காதே, பூக்குருவி, பரிதாபம், கொழுக்கட்டை, ஆசை, கௌரவம், இனிக்கும் இரவு, ஊர்க்குருவி, கைலாசம் போனீரே, ஓணானும் நண்டும், அறிவு பெரிசு, பூ எனும் செல்லினம், அய்யோ எரியுதே, பலி, குருவி, குரங்குப் புத்தி, பேயாட்டம், நரிக்கதை, அன்பு என்று 50 கதைகளை கொண்ட தொகுப்பு.
தான் படித்தறிந்த நாட்டுப் புறக் கதைகளை மற்றவர்களிடம் இருந்து தெரிந்துகொண்ட நாட்டுப்புறக் கதைகளை இங்கே தொகுத்துள்ளார் எழுத்தாளர் பொன்னீலன். ஒவ்வொரு கதையும் படிப்பதற்கு எளிமையாகவும் சுவாரஸ்யமாவும் இருக்கிறது. 145 பக்கங்களே உடைய இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் இரண்டு நாட்களுக்குள் படித்து முடித்துவிடலாம்.
குழந்தைகளுக்கு படித்து சொல்வதற்கும் ஏற்ற வகையில் நிறைய நீதிக்கதைகளும் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
விலை : 75
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Be the first to comment on "பொன்னீலனின் பொட்டல் கதைகள் ஒரு பார்வை!"