ஜூலை 23 – காப்பான் பிறந்தநாள்! – காப்பான் திரைப்படம் பற்றிய சில தகவல்கள்!

Some information about the Kaappaan movie!
  1. காப்பான் படம் நடிகர் சூர்யாவும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்தும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் அயன், மாற்றான் படங்களில் இணைந்து பணியாற்றினர்.
  2. நடிகர் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம். இதற்கு முன் கஜினிகாந்த் படத்தில் சந்தோஷ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள்.
  3. நடிகர் சூர்யாவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்து நடிக்கும் முதல் படம். இந்தப் படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சான் நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
  4. கெட்ட விஷயங்களைப் பண்றவன் கெட்டவனும் இல்லை. எறும்புக்கு கூட தீங்கு நினைக்காமல் இருப்பவன் நல்லவனும் அல்ல. காப்பான் பேசப்போற விசயம் இது தான். சூர்யாவை நீங்க நல்லவர்னு நினைச்சா ஒரு சீன்ல வில்லனா தெரிவார். வில்லன்னு நினைச்சா அப்படியும் இருக்க மாட்டார். அதே மாதிரி தான் படத்துல நடிச்சிருக்கற மோகன்லால் ஆர்யா சாயிஷான்னு எல்லா கேரக்டர்களுக்கும் இரட்டை முகம்.
  5. கே வி ஆனந்த் ஒளிப்பதிவாளராக முதல் இரண்டு படங்கள் மோகன்லால் நடித்த படங்களே.
  6. பொம்மன் இரானி முதல் முறையாக தமிழ்ப் படத்தில் நடித்து உள்ளார்.
  7. பெண்களை இழிவுபடுத்துவது மாதிரியான வசனங்கள் காட்சிகள் இந்தப் படத்தில் இல்லை. ஹீரோயின் உடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளும் இந்தப் படத்தில் இல்லை.
  8. சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்திற்கு கே வி ஆனந்த் தான் ஒளிப்பதிவாளர்.
  9. கஷ்டமான ஒரு ஸ்டன்ட் காட்சியை ஏழு டேக் எடுத்து தான் ஓகே பண்ணினார்கள்.
  10. ஆர்யா கதாபாத்திரத்துக்கு முதலில் அல்லு அர்ஜூனின் தம்பி அல்லு சிரிஸ் தான் கமிட் ஆகியிருந்தார். லண்டன்ல சூட்டிங் என்பதால் விசா பிரச்சினையால் முடியாமல் போனது. ஆர்யாவிடம் லண்டனுக்கான ஐந்து வருட விசா இருந்ததால் அவசரமான சூழலில் ஆர்யா நடிக்க ஒப்புக் கொண்டார்.
  11. இரட்டை எழுத்தாளர்களான சுபாவுடன் அயன், மாற்றான் என தொடர்ந்து காப்பானில் பணியாற்றி வருகிறார் கே. வி. ஆனந்த். அதே போல தொடர்ந்து தனக்குப் பிடித்தமான ஹாரிஸ் ஜெயராஜூடன் பணியாற்றி உள்ளார்.
  12. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 2.O படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்க வேண்டிய கே. வி. ஆனந்த் சூர்யாவுக்காக அதை தவிர்த்து காப்பான் படத்தை இயக்கி உள்ளார்.

 

Related Articles

மூணாறு – தென்னகத்தின் காஷ்மீர்... மூணாறு, கேரள மாநிலத்தில் உள்ள அழகான மலைவாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் இருக்கும் இடம். மலையேறுதலுக்கும ஒரு அற்புதமான படம். இயற...
பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ... யார் இந்த PADMAN? நம்நாட்டில் வெறும் 12% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். 88 சதவீத பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்...
அறம் திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் "அறம்". அந்தப் படம் ரிலீசான சமயத்தில் அந்தப் படத்தின் வசனங்கள் மிகப் பெரிய அளவில் கவனம் பெற...
பல விருதுகள் வென்ற மூடர்கூடம் பட வசனங்கள... * வாழ்க்கையோட பெரும்பாலான விடியல் வழக்கமானதாவே இருக்கு... முழிச்சோம், குளிச்சோம், சாப்டோம், உழைச்சோம், உறங்குனோம்னு சக்கரம் சுத்திட்டு இருக்கு... இந்த...

Be the first to comment on "ஜூலை 23 – காப்பான் பிறந்தநாள்! – காப்பான் திரைப்படம் பற்றிய சில தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*