எந்தெந்த படத்துக்கு தேசிய விருது எதிர்பார்த்தீங்க?

For which movies did you expect the National Awards

1. மேற்குத் தொடர்ச்சி மலை

2017ல் சென்சார் வாங்கிய படம். !அந்த வருடமே தேசிய விருது தேர்வுக்கும் சென்றது. ஆனால் படம் ஒரு விருதையும் பெறவில்லை. ரிலீசான போதோ பலத்த ஆதரவையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் எதுவும் பலிக்கவில்லை. இந்தப் படத்தின் ஆனந்த விகடன் மதிப்பெண் 60. 2018ல் வெளிவந்த படங்களிலயே அதிக மதிப்பெண் வாங்கிய படம் இதுவே. 60 மதிப்பெண்! 

2. பரியேறும் பெருமாள்

இயக்குனர் ராமின் உதவி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய படம். இந்தப் படத்திற்கு கிடைத்த ஆதரவு குறித்து சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பல தேசிய விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்க இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நிறைவேற வில்லை. ஆனந்த விகடனில் 58 மதிப்பெண்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. 

3. பேரன்பு

தங்கமீன்கள் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குனர் ராமின் நான்காவது படம் பேரன்பு. தங்கமீன்கள் சாதனா இந்தப் படத்தில் வெகு சிறப்பாக நடித்திருப்பார். அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது இன்னொரு முறை கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நிறைவேறவில்லை. இந்தப் படத்திற்கான ஆனந்த விகடன் மதிப்பெண் 56 ! 

4. சூப்பர் டீலக்ஸ்

ஆரண்ய காண்டம் என்ற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் இரண்டாவது படம். மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. அந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் தந்த மதிப்பெண் 50!

5. வடசென்னை

11 தேசிய விருதுகளை வென்ற தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்த படம். இந்தப் படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான, சிறந்த இயக்கத்துக்கான, சிறந்த நடிப்புக்கான, சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் ஒரு விருது கூட கிடைக்கவில்லை என்பது தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரிய ஏமாற்றமே. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் தந்த மதிப்பெண் 50! 

6. 2. O

இந்தியாவிலயே மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம். சிறந்த கிராபிக்ஸ் எபக்ட், சிறந்த சண்டைக்காட்சி போன்ற பிரிவுகளில் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் எதுவும் நிறைவேறவில்லை. 

இதேபோல சர்வம் தாள மயம், 96, நெடுநல்வாடை, மெஹந்தி சர்க்கஸ், ராட்சசன், கனா போன்ற படங்களுக்கும் தேசிய விருது எதிர்பார்க்கப்பட்டது. ஆக மொத்தத்தில் இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே.

Related Articles

காதும்மாவை விரும்பியவர்களுக்கு கோலமாவு க... இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அனிருத்தின் இசையில் வெளியாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா. நயன்தாராவுக்கு தோழியாக...
இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கி... இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்...
பிரபஞ்சனின் மயிலிறகு குட்டி போட்டது புத்... புத்தகம் : மயிலிறகு குட்டி போட்டதுவகை : கட்டுரைத் தொடர் (புதிய தலைமுறை)ஆசிரியர் பற்றி...இயற்பெயர் : சாரங்கபாணி வைத்திலிங்கம்பிறந்த இடம...
கவியரசு கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யமான சில... முத்தையா என்ற இயற்பெயருடைய கண்ணதாசன் பத்திரிக்கைகளிலும் தமிழ்ப்படங்களிலும் எழுதிய இனிய தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேல் இருக்கும...

Be the first to comment on "எந்தெந்த படத்துக்கு தேசிய விருது எதிர்பார்த்தீங்க?"

Leave a comment

Your email address will not be published.


*