குற்ற உணர்ச்சியால் வாடிய நாயகர்கள் பற்றி ஒரு பார்வை!

The actors who felt guilt!

நாட்டாமை படத்தில் நாட்டாமை தவறான தீர்ப்பு சொல்லிவிட்டதால் உண்மை தெரிந்த அந்த இடத்திலயே குற்ற உணர்வால் அதிர்ச்சி தாங்காமல் உயிரை விடுவார். அது போல தாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த தவறால் யாரோ ஒருவருக்கோ அல்லது மிக நெருங்கியவருக்கோ துன்பம் நேர்ந்தது என்று குற்ற உணர்ச்சியால் வாடிய நாயகர்கள் பற்றி இங்கு பார்ப்போம். 

குற்ற உணர்வை பற்றி எழுத்தாளர்களின் வரிகள் : 

  1. எதை தொலைத்தாலும் மீட்டுவிடலாம். குற்றவுணர்வைத் தொலைத்து விட்டால் எந்த ராட்சதக் கை வந்தாலும் மீட்டெடுக்க முடியாது. – சரவணன் சந்திரன்
  2. ஒரு சமூகம் எதை வேண்டுமானாலும் உதறி விடலாம். அடிப்படை அறம் சார்ந்த குற்றவுணர்வை மட்டும் உதறிவிடக் கூடாது. – ந. முருகேச பாண்டியன்

வேலையில்லா பட்டதாரி : 

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் மாபெரும் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக ” அம்மா அம்மா நீ எங்க அம்மா ” என்ற பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. தன்னுடைய அம்மா நெஞ்சுவலி தாங்காமல் ரகுவரனுக்கு போன் செய்வார். ஆனால் ரகு அதை தவிர்ப்பார். அவர் அப்படி செய்ததால் யாருடைய உதவியும் கிடைக்காததால் ரகுவின் அம்மா இறந்து போவார். அம்மாவின் மரணத்துக்கு நான் தான் காரணம் என்று ரகு குற்ற உணர்வோடு வாழ்ந்து ஒரு கட்டத்தில் வெடித்து அழுவான். 

செவன் பவுண்ட்ஸ் : 

காரில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கவன குறைவால் ஏழு பேரின் மரணத்துக்கு காரணமாகிறார் நாயகன். குற்ற உணர்வால் தினம் தினம் வாடுகிறார். அவருக்கு வாழ்க்கையின் மீது இருந்த ஆர்வம் குறைகிறது. ஏழு பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்த நான் ஏழு பேர் உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்து தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டு உடல் உறுப்புகளை தானம் செய்து ஏழு பேரின் வாழ்வுக்கு காரணமாகிறார் நாயகன். தி பர்ஸ்யூட் ஆப் ஹேப்பினஸ் படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கி உள்ள படம்.  முடிந்த வரை இந்தப் படத்தை ஒரு முறையாவது பாருங்கள். 

மாவீரன் கிட்டு : 

கிட்டுவின் மீது வழக்குப் பதிவு செய்து அவனை எப்படியாவது கலக்டராக்க விடாமல் தடுப்பதை நோக்கமாக கொண்டிருந்த உயர்சாதிக்காரர்களிடம் இருந்து கிட்டுவை காப்பாற்ற கிட்டுவை ஒளித்து வைத்திருப்பார்கள் சின்ராசு குழுவினர். கிட்டுவை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை சொன்னால் பணம் தருகிறேன் என உயர்சாதிக் காரர்கள் சூரியிடம் பணத்தாசை காட்ட சூரி ஒரு நிமிடம் பணத்துக்கு, ஆசை படுவார். அதை எண்ணி வருத்தப்பட்டு சின்ராசு குழுவில் இருக்க தகுதி இல்லை என குற்ற உணர்வால் வாடி அந்தக் குழுவில் இருந்து விலகுவார் சூரி.  இந்தக் காட்சியை பார்த்த பிறகு சூரி மீதும் இயக்குனர் சுசூந்திரன் மீது பெரிய அளவில் மரியாதை உருவாகும். மாவீரன் கிட்டு படத்தில் உள்ள பெஸ்ட் சீன்களில் இதுவும் ஒன்று. 

அயோக்யா : 

ஏகப்பட்ட தகடுதத்தம் வேலை செய்து போலீஸ் வேலையில் சேர்வார் விஷால். போலீஸ் வேலையை ஒழுங்காக செய்யாமல் ரவுடிகளுக்குத் துணையாக போவார். இவர் இப்படி இருக்க இவருடைய அலட்சியத்தால் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உயிர் இழக்கிறார். அந்தப் பெண்ணின் இறப்பிற்கு நான் தான் காரணம் என வருந்தி செய்யாத குற்றத்தை தான் செய்ததாக ஒப்புக் கொண்டு மரண தண்டனையை தானாக கேட்டு வாங்கி உயிர் இழப்பார் விஷால். கண்ணை கலங்க வைக்கும் காட்சி அது. விஷால் நடிப்பில் வெளியான படங்களிலயே மிகச் சிறந்த படம் பாண்டிய நாடு. அந்தப் படத்தை அடுத்து விஷாலின் நல்ல படம் என்றால் அது அயோக்யா தான். 

அரவான் : 

மாத்தூருக்குப் பலியாளாக அரவான் ஆதி தேர்ந்தெடுக்கப்படுவார். நான் எப்படி இந்த வலையில் சிக்கினேன் என்பதை விசாரித்து கேள்வி எழுப்பி குற்றவாளியை கண்டுபிடிப்பான் சின்னா (ஆதி). சரியாக பலி கொடுக்கும் நாளன்று அருவியில் இருந்து குதித்து பாறை இடுக்கில் சிக்கி கொள்ள ஆதிக்குப் பதிலாக அவருடைய நண்பர் பலிக்கு ஆளாவார். தன்னால் தானே தன் நண்பன் பலிக்கு ஆளானான் என எண்ணி தன்னை தானே மாய்த்துக் கொள்வான் சின்னா (ஆதி). வசந்த பாலன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் நன்றாக இருந்த போதிலும் ஏனோ ஓடவில்லை. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்கள்  ரிலீசான சமயத்தில் நன்கு ஓடவில்லை. ஆனால் இப்போது கொண்டாடப் படுகிறது. அது போல வசந்த பாலனின் அரவான், காவியத் தலைவன் போன்ற படங்களும் எதிர்காலத்தில் கொண்டாடப்படும். 

அவர் இயக்கிய காவியத் தலைவன் படத்திலும் இதே போன்று குற்ற உணர்வால் வாடி ஆற்றுக்குள் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்வார் பிரித்வி ராஜ். அரவான், காவியத் தலைவன் போன்ற படங்களுக்காக வசந்த பாலனுக்கு தேசிய விருதோ மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

ஒரு மனிதனுக்கு தான் செய்த தவறுகளின் மன உறுத்தலும் குற்ற உணர்வும் இருந்தே ஆக வேண்டும் என்பதை இந்தப் படக் காட்சிகள் உணர்த்துகின்றன. 

Related Articles

K – 13 படம் எப்படி இருக்கு?... இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் K-13. நாயகன் திரைப்பட இயக்குனர், நாயகி எழுத்தாளர்(காட்சிப் பிழை என்ற புத்தகம் எழுதியுள்ளா...
கொள்ளையடிக்கும் போட்டித்தேர்வு பயிற்சி ம... தமிழகத்தில் பால்வாடி முதல் பட்டப்படிப்பு வரை அத்தனையும்  வியாபாரம் தான். பஸ் கண்டக்டர் டிக்கெட்டை தருவது போல பணத்தை வாங்கிக்கொண்டு சர்வ சாதாரணமாக டிகி...
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி, கட்டுரை ... இந்த மாதிரி இணையதளங்களை நம்பி சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்கள் இளைஞிகள் எல்லாம் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. அவர்களெல்லாம் இந்த பக்கம் எட்டி...
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் அதை எப்படி ... அல்சர் முதலில் எப்படி ஏற்படுகிறது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளில் ஏற்படும் அமிலத்தன்மையின் அதிகமான செயல்பாடுகளால் அல்சர் ஏற்படுகிறது என்று கூறுகி...

Be the first to comment on "குற்ற உணர்ச்சியால் வாடிய நாயகர்கள் பற்றி ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*