தமிழகத்தில் மாதாமாதம் ஒரு எலக்சன் நடந்தால் எப்படி இருக்கும்…! ஒரு சின்ன கற்பனை.

What happens if election is conducted every month in Tamil Nadu

தமிழகத்தில் மாதாமாதம் ஒரு எலக்சன் நடந்தால் எப்படி இருக்கும்…! ஒரு சின்ன கற்பனை. அதெப்படி மாதம் ஒரு எலக்சன் நடத்த முடியும், அப்படியே எலக்சன் நடத்தினாலும் மக்களுக்கு பணம் கொடுக்க காலங்காலமாக சிறப்பாக ஆட்சி செய்து ஏழையாக வாழ்ந்து வரும் இந்த அப்பாவி அரசியல்வாதிகள்  எங்கே போவார்கள்? என்ற வக்கனை கேள்விகளை இங்கே புகுத்தி பார்க்கக்கூடாது. தேர்தலுக்குப்பின் அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு திடீரென உயர்வது எப்படி என்று உச்ச நீதிமன்றமே விளாசியுள்ளதால் இதுபோன்ற கேள்விகளை தவிர்த்திடுங்கள். எதாவாது ஒரு குடோனில் ஒரு நூற்றாண்டுக்கு தேவையான பணம் இருக்கும் என்ற உண்மையை கஷ்டப்பட்டு கற்பனை செய்து கொண்டு இதை படியுங்கள்.

குடிகாரர்கள் குதூகலம்

தமிழக அரசை வாழ வைத்துக்கொண்டிருக்கும் குடிகாரர்கள் தினமும் குடித்து தள்ளுவார்கள். ஊரெங்கும் டாஸ்மாக் முளைத்துக்கிடக்கும். வீட்டுக்கொரு டாஸ்மாக் அமைப்போம் என்ற திட்டத்தை வரவேற்பார்கள். காலை, முன்காலை, பின்காலை, மண்டைய பொழக்கும் மதியம், மாலை, நட்டநடு ராத்திரி, விடியற்காலை என்று இருபத்தி நாளு மணிநேரமும் நான்ஸ்டாப்பாக குடித்து ரகளை செய்வார்கள்.  குடித்துவிட்டு போதையில் எந்தக்கட்சிக்காரன் வாங்கித்தந்தான் என்று தெரியாமல் எல்லா கட்சிக்கும் ஓட்டுகேட்டு திரிவார்கள். குடிபோதையில் பொதுஇடங்களில் வேட்டி விலகியதுகூட தெரியாமல் விரித்தபடி படுத்துக்கிடப்பார்கள். குடித்துக்கொண்டே இருப்பதால் அவர்களுடைய சிறுநீரகம் நன்றாக செயல்பட்டு அவர்களை அடிக்கடி மூத்திரம் பெய்ய வைக்கும். அவர்களும் பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், காலேஜ், கோவில், லைப்ரரி என்று எதற்கும் வித்தியாசம் தெரியாமல் எந்த சுவத்தை கண்டாலும் கரண்டு கம்பத்தை கண்ட சொறிநாய் போல சொய்யென்று மூத்திரம் பெய்து தூய்மை இந்தியாவை உருவாக்குவார்கள். அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது என்று செய்தி வந்தால் அப்பாடா நான் குடிச்சிருக்கேன் அதனால நான் பிளட் கொடுக்கமாட்டேனே என்று பெருமையாக தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள். முக்கியமாக ஆண்மையை இழப்பார்கள் என்பதால் மக்கள்தொகை பெருகாது. ஆகமொத்தத்தில் குடிகாரர்களின் வாழ்நாள் முழுவதும் குதூகலமாகவே இருக்கும்.

தாய்குலம்

ஜட்டி கூட போட தெரியாத குட்டி பாப்பா முதல் ஒரு அடிகூட குச்சி உதவி இல்லாமல் நடக்க முடியாத கிழவி வரை அத்தனை பொம்பளைங்களும் வீட்டில் அத்தனை தட்டுக்களிலும் மஞ்சள் சுண்ணாம்பை கலந்து எவன் வேட்பாளர் எவன் அல்லக்கை என்று தெரியாமல் வெள்ளை காஷ்ட்யூமில் எவன் வந்து வணக்கம் வைத்தாலும் அவனுக்கு ஆரத்தி எடுத்து தட்டுக்கு நூறு ஐந்நூறு சம்பாதிப்பார்கள். வீட்டிலிருந்தபடியே ஒருநாளைக்கு ஐநூறு ஆயிரம் சம்பாதிப்பது எப்படி என்ற ஆன்லைன் ஜாப் விளம்பரங்களை இளக்காரமாக பார்ப்பார்கள். ஆரத்தி எடுக்க மஞ்சள் சுண்ணாம்பு தேவை என்பதால் அவற்றின் உற்பத்தி பெருகும். தினமும் பொதுக்கூட்டத்திற்கு கலந்துகொள்ள லாரி, டெம்போ, மினி ஆட்டோ, மாட்டு வண்டி, மீன்பாடி வண்டி, சவ ஊர்தி வண்டி என்று எல்லாவாற்றிலும் வெக்கமில்லாமல் தொத்திக்கொண்டு சேச்சேவென கண்டதையும் வாய்கிழிய கிழிய பேசிப்பேசி  நட்பை வட்டாரத்தை பெருக்கிக்கொள்வார்கள். அந்தக்கூட்டங்களுக்கு தலைக்கு நூறு முதல் ஐநூறு வரை பேரம்பேசி வாங்கிக்கொள்வார்கள். கூட்டங்களில் இருந்து தண்ணீர் பாக்கெட்டை திருடி சேலைக்குள் போட்டு மூட்டைகட்டி வீட்டிற்கு எடுத்து வருவார்கள். ஆதலால் குழாய் அடி சண்டை இருக்காது. தினமும் ஒரு இலவச சேலை பெற்றுக்கொண்டு புருசனை தாளிக்காமல் இருப்பார்கள். கட்சிக்காரர்கள் பிரியாணி தந்துவிடுவார்கள் என்பதால் சமையல் பிரச்சினை இருக்கவே இருக்காது.

சாலையெங்கும் சலசலப்பு

தினமும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் செலவு பார்த்துக்கொள்வார்கள் என்பதால் இன்றைய  பெட்ரோல் டீசல் விலையை டென்சனோடு பார்க்க அவசியமில்லை. மினி ஆட்டோ, குட்டியானை, டெம்போ, லாரி ஓட்டுநர்களுக்கு அன்றாடம் அதிக சம்பளம் பெறுவார்கள். ஆடு மாடுகளை ஏத்திச்செல்வதற்கு பதிலாக மனிதர்களை ஏத்திச்செல்வதில் அவர்கள் திருப்தி அடைவார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் விளக்கெண்ணைகள் புறப்பட்டு வாகன ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஓசி பெட்ரோலில் ஊர் சுத்துவார்கள். சாலையெங்கும் சலசலப்பாகவே இருக்கும். நோ டிராபிக் போலீஸ் டென்சன். நோ ஒரிஜினல் லைசன்ஸ் டென்சன். நோ ஹெல்மெட் டென்சன். போலீஸ்காரர்கள் எல்லாம் அரசியல்வாதிகளை பேணிப்பாதுகாக்கும் பணியில் கட்டாயப்படுத்தபடுவதால் பொதுமக்களுக்கு இந்த சுதந்திரம். அந்த வாகன ஊர்வலத்தில் 

யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஆக்சிடன்ட் ஆவார்கள் என்பதால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள்  தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருப்பார்கள்.

லாபமடையும் தொழில்கள்

தினமும் பிரியாணி என்பதால் ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என்று புரூடாவுட்டு புளிசோறு செய்து தந்தாலும் நம்மாட்கள் நாக்கைச் சுழட்டி திண்பார்கள் என்பதால் பிரியாணி கடைக்காரர்கள் லாபம் அடைவார்கள். சிக்கன், மட்டன், முட்டைகள் நல்ல வியாபாரம் ஆகும். கூட்டங்களுக்கு பந்தல் போடுவது, லைட் போடுவது, நாற்காலிகள் ரெடி பண்ணுவது, மைக்செட் ரெடி பண்ணுவது போன்ற தொழில்கள் லாபமடையும். மேலும் பொதுக்கழிப்பிடம் முதல் சுடுகாடு வரை கொடி பறக்கவிட்டு, போஸ்டர் ஒட்டி, பிளெக்ஸ், அரசு பொதுசுவர்களில் அரசியல் விளம்பர பெயிண்ட் அடிக்கும் தொழில்கள் லாபமடையும். மேலும் ட்ரம்ப்ஸ் அடிப்பவர்கள், சினிமா நடிகர் நடிகைகளின் சாயல் ஆர்டிஸ்டுகள் நன்றாக பிழைப்பார்கள்.  நியூஸ்சேனல்கள் டிஆர்பியை ஏத்திக்கொண்டு நன்றாக பிழைப்பார்கள். மீம் கிரியேட்டர்ஸ் இடைவிடாமல் தீனி கிடைக்கும் என்பதால் எப்போதும் வேலையாகவே இருப்பார்கள். ஆதலால் அவர்களை வேலைவெட்டி இல்லாதவன்னு யாரும் சொல்லமுடியாது. 

குறிப்பாக மழைக்குகூட பள்ளிகூட பக்கம் ஓதுங்காதவர்கள் ஓட்டுப்போடவாவது பள்ளிக்கூட பக்கம் ஓதுங்குவார்கள். இப்படி மாதாமாதம் எலக்சன் நடந்து எக்கசக்க பணம் கிடைத்தால் வேலையில்லா பட்டதாரிகள் கூட வேலை கிடைக்கவில்லையே என்று விரக்தியடையமாட்டார்கள்.

Related Articles

பாகுபலி நாயகனின் “சாஹோ” படம்... படம் ரிலீசான அடுத்த நொடிகளில் இருந்து இந்தப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டு இருந்தாலும்  பாகுபலி நாயகனின் படம் என்பதால் இந்தப் படம் நல்...
ஜி.வி.பிரகாஷ்குமார் – நா.முத்துக்க... இசையமைப்பாளர் ஜிவி சிறுவயது மற்றும் குடும்பப் பின்னணி போன்றவற்றை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. கிட்டத்தட்ட சினிமா ரசிகர்கள் அத்தனை பேருக்கும்...
மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரச... மெண்டலுங்கப்பா... எல்லாருமே மெண்டலுங்கப்பா... என்ற மொட்டை ராஜேந்திரனின் வசனத்தைப் போல தமிழகத்தில் நாளுக்கு நாள் மெண்டல்கள் அதிகரித்து வருகிறார்கள். பண...
எந்தெந்த படத்துக்கு தேசிய விருது எதிர்பா... 1. மேற்குத் தொடர்ச்சி மலை 2017ல் சென்சார் வாங்கிய படம். !அந்த வருடமே தேசிய விருது தேர்வுக்கும் சென்றது. ஆனால் படம் ஒரு விருதையும் பெறவில்லை. ரிலீசான ...

Be the first to comment on "தமிழகத்தில் மாதாமாதம் ஒரு எலக்சன் நடந்தால் எப்படி இருக்கும்…! ஒரு சின்ன கற்பனை."

Leave a comment

Your email address will not be published.


*