- முதலில் கள்ளச் சாவிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதில் எத்தனை வகைகள் உள்ளன எந்த மாதிரியான பூட்டுகளுக்கு எந்த மாதிரியான சாவிகளை போட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
- மோப்ப நாய், கை ரேகை நிபுணர்கள், உயரதிகாரிகள், தொழில்நுட்ப புலனாய்வாளர்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். விசாரணை நடத்த எந்த ஏரியாவுக்கு எந்தெந்த அதிகாரிகள் வருவார்கள் அவர்கள் என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுவார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
- திருடப் போகும் இடத்தை நன்கு நோட்டமிட வேண்டும். வீட்டில் நாய் உள்ளதா, வீட்டு காம்பவுண்டு சுவரை எளிதில் தாண்ட முடியுமா, வீட்டில் எத்தனை ஆண்கள் பெண்கள் உள்ளனர், அவர்களில் எத்தனை பேர் பலசாலி௧ளாக உள்ளனர், எத்தனை பேர் பகலில் வேலைக்குச் செல்கின்றனர் எத்தனை பேர் இரவில் வேலைக்குச் செல்கிறார்கள், வீட்டைப் பூட்டினால் சாவியை கையோடு எடுத்துச் செல்கிறார்களா அல்லது பாத்ரூம், ஜன்னல், மீட்டர் பாக்ஸ், காம்பவுண்டு லைட்டு போன்ற இடங்களில் மறைத்து வைக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
- பிடித்து இழுத்தால் எளிதில் கழண்டுவிட முடியாத முகமூடிகளை அணிய வேண்டும். அதேபோல கட்டாயம் திருடு ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும்.
- நடந்தால் காலடிச்சத்தம் எழுப்பக் கூடிய செருப்புகளை (பெல்ட் செருப்புகள் பொருத்தமாக இருக்கும்) ஷூக்களை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் கட்டாயம் காலணி அணிய வேண்டியது அவசியம். முள்ளோ கண்ணாடியோ ஏறிவிட்டால் அவ்வளவு தான். நன்கு தெரிந்த இடமென்றால் வெறுங்காலில் நடக்கலாம். ஆனால் சத்தம் வராதபடி எதையும் மிதிக்காமல் பூனை போல் நுனிபாதத்தில் நடந்துசெல்ல வேண்டும்.
- கொசுக்கடிகளை எறும்புக்கடிகளை தாங்ககூடிய சக்தி இருக்க வேண்டும். அல்லது அவை கடிக்காமல் இருப்பதற்கு சில மருந்துகளை உடலில் பூசிக்கொள்ள வேண்டும். யாராவது பிடித்து இழுத்தால் உடனே வழுக்கிக்கொண்டு வரும்படியான வழவழப்பான திரவத்தை உடலில் பூசிக்கொள்வது நல்லது.
- திருமணமோ சாவோ நிகழ்ந்த வீடுகளில் நுழைவது பாதுகாப்பானது. பகல்நேர வேலைகளின் களைப்பில் எல்லோரும் தன்னை மறந்து தூங்குவார்கள். ஆட்கள் குறைவாக இருக்கும் வீடுகளை விடவும் அதிகமாக இருக்கும் வீடுகள் தான் திருடுவதற்கு உகந்த இடம். ஆட்கள் அதிகமாக இருக்கும் வீடுகளில் சத்தம் கேட்டால் மற்றவர்கள் வேறு அறைகளிலுள்ள யாராவது ஒன்றுக்குப்போக எழுந்திருக்கலாம் என்று நினைத்துக்கொள்வார்கள். எழுந்திருக்காமல் இருப்பதற்கு இப்படி ஏதாவது காரணங்களை மனம் கண்டுபிடித்துவிடும்.
- சுவரை துளைத்து மறுபக்கம் போய் திருடுவது என்றால் கைக்கு வாட்டமான ஒரு அடி நீளம் கம்பி மட்டுமே வைத்திருக்க வேண்டும். கம்பியின் ஒருமுனை கூர்மையாகவும் மறுமுனை பறந்ததாகவும் இருக்க வேண்டும்.
- வாசல் கதவு பூட்டு தாழ்ப்பாள் இரண்டையும் உடையதா, உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருக்கிறதா போன்றவற்றை பரிசோதிக்க வேண்டும். நகைக்கடை, ஜவுளிக்கடை, ஒயின்ஷாப் போன்ற இடத்திற்கெல்லாம் திருடச் சென்றால் அங்கே மலம்கழித்து விட்டு வரவும். அப்போதுதான் மோப்ப நாய் தனது சக்தியை இழக்கும். திருடன் சென்ற பாதையை கண்டறிய நாய் திணறும்.
- திருடப் போன இடத்தில் பெட்ரூமை அடுத்து சமையலறையிலும் ஒரு கண் இருக்க வேண்டும். அடுத்ததாக சாமி படங்களின் பின்பக்கம், மெத்தையின் அடிப்பக்கம் போன்ற இடங்களில் தேடிப்பார்க்கவும். பின்னிரவு இரண்டு மணி முதல் மூன்றரை மணி நேரம் வரை தான் திருடுவதற்கான சரியான நேரம். அப்போதுதான் வீட்டில் உள்ளவர்கள் அயர்ந்து தூங்குவார்கள்.
இங்கே மிக குறைவான டிப்ஸ்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல திருடனின் யுக்திகள் தெரிந்தால் திருடனிமிருந்து நாம் ஜாக்கிரதையாக இருக்க முடியும்.
Be the first to comment on "திருடனாகுவது எப்படி? இதோ சில டிப்ஸ்! திருடனின் யுக்திகள் தெரிந்தால் தான் திருடனிடமிருந்து தப்ப முடியும்!"