தயாரிப்பு : E4 என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர் : சுரேஷ் செல்வராஜன்
இயக்கம் : கிரிஸ்சேய்யா
கதை : சந்தீப் ரெட்டி
ஒளிப்பதிவு : ரவி கே சந்திரன்
இசை : ரதன்
எடிட்டிங் : விவேக் ஹர்சன்
பாடல்கள் : தாமரை விவேக்
உடை அலங்காரம் : எகா லகானி
சண்டை பயிற்சி : மனோகர் வர்மா, நரேன்
நடிகர் நடிகைகள் : துருவ் விக்ரம், பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்பு தாசன்
நேரம் : 168 நிமிடங்கள் 28 நொடிகள்
அர்ஜூன் ரெட்டி படம் தமிழ் ரீமேக்குக்கு உரித்தானதா?
அர்ஜூன் ரெட்டி படம் தமிழ் ரீமேக்குக்கு உரித்தானதா? என்ற கேள்விக்கு பதில் தமிழ் ரீமேக்குக்கு உரித்தானது அல்ல என்பதே. ஒரு பெண்ணை பார்க்கிறான் நாயகன், பார்த்ததுமே காதல் கொள்கிறான், மிரட்டி மிரட்டியே காதலிக்க வைக்கிறான், முத்தம் கொடுக்கிறான், மேட்டர் செய்கிறான்… இது தான் ஹீரோயிசமாக இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளை காதலிக்க வற்புறுத்த கூடாது செக்ஸ் வைத்துக்கொள்ள வற்புறுத்த கூடாது போன்ற கருத்துக்களை தலயின் நோ மீன்ஸ் நோ வசனம் எடுத்துரைக்க அர்ஜூன் ரெட்டி படம் மிகவும் பிற்போக்குத் தனமான கருத்துக்களை ஹீரோயிசத்தையே காட்டி உள்ளது. அப்படி இருக்கையில் ஆதித்ய வர்மா படம் தமிழ் சினிமாவிற்கு தேவையற்றது என்பதே உண்மை. ஆனந்த விகடன் சினிமா விமர்சனத்தில் இந்தப் படத்தை கிழித்து தொங்க விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அவற்றில் எதற்கடி வலி தந்தாய், ஏன் என்னை பிரிந்தாய் பாடல்கள் மட்டுமே திரும்ப திரும்ப கேட்கும் ரகம். அர்ஜூன் ரெட்டி படத்திற்கு போட்ட இசையை அப்படியே போட்டு வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ரதன். இசையை மாற்றி இருக்கலாம் அல்லது இசையமைப்பாளரை மாற்றி இருக்கலாம்.
நிஜ வாழ்க்கையில் அர்ஜூன் ரெட்டி மாதிரி ஆதித்ய வர்மா மாதிரி ஒரு மாணவன் கல்லூரியில் பொறுக்கித் தனம் செய்தால் அவனுடைய டங்குவார் கிழிந்துவிடும் என்பதே உண்மை. ஆக இந்தப் படம் யதார்த்ததிலிருந்து முற்றிலுமாக விலகி நிற்கிறது. படம் முழுக்க செயற்கைத் தனம் தான். அதனால் துருவ் செய்யும் அத்தனை செயல்களும் கோமாளித்தனமாகவே தெரிகிறது, அவற்றில் சில காட்சிகள் சிரிப்பை வர வைக்கிறது அல்லது எரிச்சலை ஏற்படுத்துகிறது.
அப்பா விக்ரமை போலவே மகன் துருவ்வும் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக நன்றாக உழைத்துள்ளார். ஆனால் கதை தேர்வில் அப்பாவை போலவே கோட்டை விட்டதால் துருவ்வுக்கு முதல் படம் தோல்வி படமாகவே அமைந்துள்ளது. அர்ஜூன் ரெட்டியில் நடித்த விஜய தேவரகொண்டா கொஞ்சம் முதிர்ச்சியானவர் போல் தெரிந்ததால் அவருக்கு அந்தக் கதாபாத்திரம் நன்றாகப் பொருந்தியது. ஆனால் துருவ் விக்ரம் மிகவும் சின்ன பையன் போல் தெரிவதால் அவருக்கு அந்தக் கதாபாத்திரம் பொருந்தவே இல்லை. சின்ன பையன் செய்த டப்ஸ்மேஸ் போல் உள்ளது படம். துருவ்வின் உடல்மொழி, குரல் இரண்டும் அப்படியே அப்பாவை பிரதிபலிக்கிறது.
ஹீரோயினை தவிர படத்தில் வரும் அத்தனை பெண்களும் அழகாக இருக்கிறார்கள். பிரியா ஆனந்தை மெயின் ஹீரோயினாக போட்டுவிட்டு பனிதா சந்துவை செகண்ட் ஹீரோயினாக போட்டிருக்கலாம். ஹீரோவின் நண்பராக அன்புதாசன் நடித்துள்ளார், நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார்… 3 படத்தில் தனுசுக்கு நண்பராக நடித்த போட்டோகிராபர் செந்திலை நினைவூட்டுகிறார் அன்புதாசன். ஆதித்ய வர்மாவின் அப்பாவாக கருத்தம்மா ராஜா நடித்துள்ளார்… ஹீரோயினின் அப்பாவாக ரஜினிமுருகன் கீர்த்தி சுரேஷ் அப்பா நடித்துள்ளார்… இரண்டு அப்பாக்களுமே நன்றாக நடித்துள்ளனர். பாட்டியாக நடித்தவர் நன்றாக நடித்துள்ளார்.
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கின்றது. படத்திற்குப் பக்க பலம் என்று கூட சொல்லலாம். எடிட்டிங் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம், கடந்த காலம் நிகழ்காலம் இரண்டும் மாறிமாறி வரும் காட்சிகள் பி அண்ட் சி ரசிகர்களுக்கு புரியுமா என்பது சந்தேகமே. என்னடா இவன் சரியான கிறுக்கு கூதியா இருக்கான்… விடாம முத்தம் கொடுக்குறான்… தண்ணி அடிக்குறான்… சரியான சைக்கோ போல… என்று ஏ , பி அண்ட் சி ரசிகர்கள் திட்டித் தீர்க்கிறார்கள். படமும் அந்த லட்சணத்தில் தான் இருக்கிறது. அது மட்டுமின்றி படத்தின் நேரம் கூட ரசிகர்களை வதைக்கிறது. டூயட் காட்சிகள், கத்தி பேசும் வில்லன்கள் இல்லாதது ஆறுதல்.
” சிகரெட் பிடிக்கிறது எங்க அப்பாவுக்குத் தெரியாது… ஆனா கேட்டா பொய் சொல்ல மாட்டேன்… “, ” உன்ன பெத்தாங்களா இல்ல நீயா எகிறி குதிச்சு வந்தியா… “, ” நாம சந்தோசமா இல்லாத உலகத்துல யாருமே சந்தோசமா இருக்க கூடாது… “, ” காசு தரவா… இல்லடா வேணும்னா பிச்சை எடுத்துக்குறோம்… “, ” நீ சுவாசிக்கற ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்… “, ” உங்கப்பன்ட்ட சொல்லு நான் உனக்கும் முத்தம் கொடுத்தேன்னு… “, ” அரேன்ஜ் மேரேஜ்ல லவ் இருக்கா… “, ” லைப்ல ஒரு வாட்டி பெல் அடிக்கும்… அதோட எல்லாத்தையும் நிறுத்தனும்… ” , ” நாம விரும்புற ஆளு இறந்துபோறது வேற… பிரிஞ்சு போறது வேற… ” போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.
திமிர் பிடித்த பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு இந்தப் படம் பிடிக்கலாம். மற்றவர்கள் பார்வையில் வ்வாக் தான்.
இயக்குனர் பாலாவை நிராகரித்தது ஏன்?
தண்ணி தம் மேட்டர் என்று திரும்ப திரும்ப பார்த்த காட்சிகள் வந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை மணி நேரத்திற்கு மேல் பார்ப்பது என்றால் சற்று சிரமமாகவே இருந்தது. படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களில் பாதி பேர் போதும்டா சாமி என்று கிளைமேக்ஸ் வருவதற்கு முன்பே எழுந்துசென்றனர். இதை உணர்ந்து பாலா இரண்டு மணி நேர படமாக எடுத்திருந்தார். ஆனால் அவருடைய படத்தை குப்பையில் போட்டுவிட்டு குப்பை படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள் அறிவாளிகள். இந்த அறிவாளிகளிடமிருந்து பாலா தப்பித்தார் என்பதே உண்மை. ஆர்யா, விஷால், அதர்வா, விக்ரம், சூர்யா, விஷால் என்று இந்த நடிகர்களின் சினிமா வாழ்க்கையில் பார்த்தால் அதில் இயக்குனர் பாலா எடுத்த படங்கள் தான் தனித்து தெரிகின்றன. கண்றாவி படத்தை எடுத்து வைத்துவிட்டு ஆஹோ ஓஹோ என்று கொண்டாடி கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். விஜய்க்கு ஒரு எஸ்ஏசி, சிம்புவுக்கு ஒரு டிஆர் போல மகனுக்கு எதிரியாக மாறிவிடாதீர்கள் சியான்.
Be the first to comment on "ஆதித்ய வர்மா தமிழ் சமூகத்துக்கே கேடு! – ஆதித்ய வர்மா விமர்சனம்"