இயக்குனர் சாந்தகுமாரின் அட்டகாசமான வசனங்கள்! – வியக்க வைக்கும் “மகாமுனி” இயக்குனர்!

மௌனகுரு, மகாமுனி என்ற இரண்டு அட்டகாசமான படங்களை இயக்கிய சாந்த குமாருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக அவருடைய வசனங்கள் என்றும் பேசப்படுபவை. அவருடைய இரண்டாம் படமான மகாமுனி பட வசனங்களை பற்றிப் பார்ப்போம். 

“ஒரு தடவ மெண்டல் ஹாஸ்பிட்டலுக்கு ட்ரீட்மென்ட் போய்ட்டா அவ்வளவுதான் தெரியுமா? சொந்தக்காரன்ல இருந்து ப்ரெண்ட்ஸ் வரைக்கும் பாக்குற பார்வையே சாகுற வரைக்கும் மாறிப்போயிரும் தெரியுமா? பழகுறவன்லா இவன் எப்படா கல்லெடுத்து அடிக்கப் போறாங்குற மாதிரியே பாப்பாங்க தெரியுமா? ஒதுக்கி ஒதுக்கி வாழ்க்கப்பூரா ஒதுக்கியே விட்ருவாங்கடா…” என்று மௌனகுரு படத்தில் வரும் இந்த வசனம் தான் இயக்குனர் சாந்தகுமார் மீதான மரியாதையை மேலும் அதிகமாக்கியது. அவருடைய எழுத்தை கூர்ந்து கவனிக்க வைத்தது.

அதே மௌன குரு படத்தில் படிச்சு முடிச்சதும் என்ன பண்ண போறிங்க என்று நாயகி கேட்க, “சைக்கிள்ல ரெண்டு வீல்லயும் காத்து இருக்கான்னு செக் பண்ணிட்டு இந்தியாவ சுத்தி வருவேன்” என்கிறார் நாயகன். இப்படி வசனம் எழுதிய இந்த இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படமான மகாமுனி படத்தை எப்படி பார்க்காமல் இருப்பது… ஆனால் முதல் தடவை பார்த்தபோது படம் அவ்வளவாக பிடிபடவில்லை. கிட்டத்தட்ட மூன்றுமுறை பார்த்தபிறகு தான் அந்தப் படம் சொல்லும் அழுத்தமான செய்தி புரிய ஆரம்பித்தது. சரி வாருங்கள்.  மகாமுனி வசனங்களைப் பாரப்போம்.

     1.வெட்டி சீன் போடுபவர்கள் பற்றி:

“அப்பா இவங்களாம் ரவுடியாப்பா…”

“நிஜ ரௌடி இருக்கற இடத்த காமிச்சுக்க மாட்டான்… இது சும்மா கப்பி… கொஞ்ச நேரம் நின்னு ஊள சவுண்டு விட்டுட்டு குடிச்ச டீக்கு காசு கொடுக்காம போயிடுவான்… அவ்வளவுதான்… 

பிரபா… எப்பவுமே இந்த மாதிரி சவுண்ட் விட்றவங்கள கண்ணுக்குள்ள பாக்க கூடாது… தெருநாய கண்ணுக்குள்ள உத்துப்பாத்தா பதட்டமாயி நம்மள பாத்து கொலைக்கும்ல… அதேமாதிரி தான் இந்த மாதிரி ஊள சவுண்ட் விட்றவங்கள உத்துப்பாத்தா தேவயில்லாம நம்மகூட வம்பு சண்டைக்கு வருவானுங்க…”  

  1. அரசியல்வாதிகள் பற்றி…

நிறைய பணத்தையும் அந்தப் பணத்துக்குப் பின்னாடி நிறைய வில்லங்கத்தையும் வச்சிருக்கறவனுக்கு நம்மூர்ல அரசியல் தான் சேஃப்டி…!

 “பேச்சு என் மூச்சு” என்று நினைக்கும் அரசியல்வாதி பேசும் வசனம்: 

வாங்கற மார்க்குக்கு ஏத்த மாதிரி தான்ம்மா அமௌண்ட்டே… அங்க இவ்வளவு வாங்குறான், இங்க இவ்வளவு கொடுக்குறான்னு நினைக்கவே கூடாது… எனக்கு எம்எல்ஏ சீட்டு தரப் போற தொகுதி வேற நீங்க… என் தொகுதி மக்களுக்கு உதவனுங்கறதுக்குதாமா என்னோட பொறப்பே… உங்க ஆசையோ ரொம்ப பெருசா இருக்கு… ஆனா பாப்பாவோட மார்க்கோ ரொம்ப கம்மியா இருக்கு… பணம் இல்லாதவன் எல்லாத்துக்கும் ஏங்கிச் சாவணுங்கறது அது அவன் தலைவிதி… அதை யாராலயும் எதுவும் பண்ண முடியாது… ஆனா பணத்தையும் வச்சிக்கிட்டு கஷ்டப்படுறாங்க பாருங்க… பாவம் அவங்க தலையெழுத்த மாத்தி எழுதறதுக்குத் தான் நாங்க இருக்கோம்… 

சரி பாப்பா நாளைக்கு வெள்ள கோட்டுப் போட்டுக்கிட்டு மெடிக்கல் காலேஜுக்குப் போகும்போது நீங்க வாசல்ல நின்னு டாட்டா காட்டப் போறது உறுதி…

  1. பசியைப் பற்றி: 

“உன்னால மட்டும் எப்படிண்ணா சுடுகாட்டுல உக்காந்துட்டு பொண வாடைலயும் திங்க முடியுது?” 

“சின்ன வயசுல நான் இருந்த சிறுவர் ஜெயில் சுடுகாட்டுக்குப் பக்கத்துல இருந்துச்சு… எங்க சாப்பாடு நேரத்துல பொணம் எரியுற வாடை அப்பப்ப காத்துல பயங்கரமா வரும்… வாந்தி எடுக்காம சாப்பாட கீழ கொட்டாம சாப்புட்டு முடிக்கறவன் தான் வீரன்னு ஒரு போட்டியே நடக்கும்… நான்லாம் அந்த வீரன்ங்க லிஸ்ட்ல இருந்தவன் பாத்துக்க… பயங்கரமான பசிதான் எல்லாத்தயும் சகிச்சுக்க கத்துக் குடுத்துச்சு…”

  1. சமூகத்தில் நிலவும் ஜாதி ஏற்றத்தாழ்வுப் பற்றி:  

எல்லோரும் செஞ்சிட்டு இருக்கிற வேலைய வச்சுத்தான ஜாதிங்கர ஒன்னே உருவாச்சு… வேலைல என்ன சின்ன வேலை பெரிய வேலை… செய்ற வேலைக்கு நேர்மையா இருக்குறோமா இல்லையாங்கறதுல தான விஷியமே இருக்கு… எல்லையில செத்துப்போற போர்வீரனுக்கு ராஜ மரியாதை கொடுக்கிற இந்த சமுதாயம், அதே சமுதாயம் போட்ற மலக்குழிக்குள்ள சுத்தம் பண்ண இறங்கி செத்துப்போறவன கண்டுக்கறதே இல்ல… ரெண்டு பேருமே ஒன்னுதான?

சீமைக்கருவேல மரத்த ஒழிக்கனும்… சாதியும் இந்த பிளாஸ்டிக் மாதிரியே அழிக்க முடியாத ஒன்னா இருக்கு… அதான் சாதியையும் ரீசைக்கிள் பண்ண முடியுமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்… 

 

  1. மாணவர் மீதான ஆசிரியர் வன்முறை பற்றி: 

“நேத்து உன் மகன் ஸ்கூல்ல இருந்து வரும்போது காய்ச்சலோட தான் வந்தான்… அத மொத நீ தெரிஞ்சுக்கு…” 

“காய்ச்சலா… ஏன் திடீர்னு… என்ன விஜி கண்ணு பக்கத்துல இப்படி அடிபட்டு ரத்தம்லாம் கசிஞ்சிருக்கு…”

“காய்ச்சலே அதால தான… கேளு உன் புள்ளைகிட்ட நீயே கேளு… டேய் சொல்றா” 

“எப்படி அடிபட்டுச்சு பிரபா…” 

“மிஸ் அடிச்சுட்டாங்கப்பா…” 

“மிஸ் அடிச்சுட்டாங்களா… இப்படி ரத்தம் வர மாதிரி அடிச்சிருக்காங்க… நீ என்னப்பா பண்ண… எதுக்கு அடிச்சாங்க…”

“மிஸ் கீப் கொய்ட் டோன்ட் டால்க்குனு சொல்லிட்டு வெளிய போனாங்களா மத்த பசங்களாம் பேசிட்டு இருந்தாங்க… மிஸ் குடுகுடுனு கம்பு எடுத்துட்டு வந்து ஏன் பேய் மாதிரி கத்துறிங்கனு பட்டுபட்டுனு அடிச்சுட்டாங்கப்பா…” 

“போலீஸ்காரன் கூட்டத்துல புகுந்து லத்தி சார்ஜ் பண்ற மாதிரி ஒரு கம்ப தூக்கிட்டு வந்து அடிச்சிருக்கா…” 

“நீ பேசிட்டு இருந்தியாப்பா…”

“நான் பேசாம ட்ராயிங் தான்பா பண்ணிட்டு இருந்தேன்…” 

“இத பாத்தாங்களா… என்ன சொன்னாங்க…”

“அடிச்சா என்ன செத்தா போயிரப் போறனு சொன்னாங்கப்பா…”

“நீ வர லேட் ஆயிருந்துச்சுனா நானே கிளம்பி போயி ஸ்கூல் பிரேயர்ல வச்சு எல்லார் முன்னாடியும் அவ உச்சந்தலைலயே செருப்ப கழட்டி அடிக்கலாம்னு தான் இருந்தேன்…”

“ஆளப்பாரு… எல்லாரு முன்னாடியும் செருப்ப கழட்டி அடிக்குறாளாம்… எல்லார் முன்னாடியும் அடிச்சா இதுக்கு சரியா போயிடுமா…. முட்டா கிறுக்கி…” 

ஸ்கூல் ஹெட்மாஸ்டரிடம்…

சார் எங்க வீட்டுல கூட பையன அடிக்காம திட்டாம சொல்லிக் கொடுத்துதான் வளத்தனும்னு வொய்ப்கிட்டலாம் பேசி புரிய வச்சிருக்கேன் சார்… ஆனா இங்க உங்க கிளாஸ் டீச்சர் என்னென்னா? கோவம் வந்தா கண்ணுல சிக்குறவங்களயெல்லாம் சாத்துலாங்கற மாதிரி அவிங்களுக்கே தெரியாம பசங்களுக்கு தப்பான விஷயங்கள் சொல்லித் தராங்க… அந்த டீச்சர் அவிங்க சொந்த வாழ்க்கைய சந்தோசமே இல்லாம எதோ எரிச்சல் வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்கனு நினைக்குறேன்… 

“ரொம்ப சாரிங்க… அந்த டீச்சருக்குப் பதிலா நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன்…” 

“ஐயோ நான் மன்னிப்பு கேட்க வைக்கனும்லாம் வரல சார்… இன்னொன்னு இப்படி ரத்தம் வர மாதிரி அடிச்சிட்டு அதுக்குப் பதிலா மன்னீப்புக் கேட்டா அது சரியாவும் வராது சார்… இன்னொரு வாட்டி இதுமாதிரி நடக்காம பாத்துக்குங்க சார்… அது போதும்… இந்த ஸ்கூல்ல இருக்கற டீச்சருங்க எல்லாம் அன்பு சொல்லித் தரலனா கூட பரவால… கோபத்த சொல்லித்தராம பாத்துக்குங்க சார்…” 

  1. விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்கள் மனநிலைப் பற்றி…

சொல்லிக் குடுக்கறவங்களுக்கே இப்படிண்ணா… பசங்க தான் சார் ரொம்ப பாவம், சந்தைல எடை கூட்டி காட்டனும்னு வலுக்கட்டாயமா தண்ணி குடிக்க வச்சு ஆடுங்க மாதிரி முழிக்குறாங்க சார்…! 

  1. மாணவர்களுக்குள் நிலவும் சாதி பாகுபாடு பற்றி…

என்னைய்யா இது படிக்குற வயசுல பேஸ்புக் வீடியோல ஜாதி சண்டை போட்டுட்டு இருக்கிங்க… ஜாதிய பத்தி எந்தப் புரிதலும் கிடையாது, வீரம்னா என்னானு தெரியாத இந்த வயசுல சண்ட போடுறிங்களா… 

வீரம்னா என்னானு முதல்ல புரிஞ்சுக்கோங்க… இப்ப நான் கிளாஸ்ல டெஸ்ட் வைக்குறேன்ல நேர்மையா படிச்சவன் தலைய நிமிந்தே பாக்காம கொஸ்ட்டின் என்னானு தெரிஞ்சுகிட்டு விறுவிறுனு எழுத ஆரம்பிச்சுருவான் அவன்தான் வீரன்… ஒன்னுமே படிக்காதவன் நம்ம என்ன எழுதுனாலும் பெயில் ஆயிடுவோம்னு தெரிஞ்சு பேர மட்டும் எழுதி பேப்பர மடிச்சு கொடுத்துருவான்… அவன்தான் கோழை… இந்த அரைகுறையா படிச்சிட்டு பிட்ட வச்சுக்கிட்டு அடுத்தவன் பேப்பர எட்டிப் பார்த்து பாஸ் ஆகிறலாம்னு நினைக்கறவன் தான் பாசாங்குகாரன்… தனக்கு எதுவுமே தெரியாதுனே சொல்லி ஒத்துக்குற கோழைக்கிட்ட இருக்கற நேர்மை அந்தப் பாசாங்குத்தனம் பண்றவங்ககிட்ட இல்ல… உண்மைய ஒத்துக்கறதுனாலயே கோழை வீரன்னா மாறுதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு… ஆனா தன்னை நேர்மையானவனா காட்டிக்க நெனைக்குற பாசாங்குகாரன் ராஜ தந்திரம்ன்ற பேர்ல தன்னை சுத்தி இருக்குற எல்லோரையும் ஏமாத்திட்டு இருப்பான்… தான் உட்பட… நேர்மையா இருக்க முடியாம சூழ்ச்சி பண்றவங்க தான் அது ராஜ தந்திரம்னு சொல்லிக்குவாங்க… களவாணித்தனத்துல என்னய்யா ராஜ களவாணித்தனம்… இந்த மூணு மனுசனுங்களும் எல்லா சாதிலயும் இருக்குறானுங்க… 

  1. இயற்கை விவசாயம் பற்றி…

ஆர்கானிக் ஃபார்மிங் தான் பண்றிங்களா? உரம் போட்டு மருந்தடிச்சா நிறைய நல்ல விளைச்சல் கிடைக்கும்னு தான் கெமிக்கல்ஸ புரோமோட் பண்ணாங்க… ஆனா இயற்கை விவசாயம் பண்றதால விளைச்சல் ரொம்ப கம்மியாதான் கிடைக்குமோ…

புழு, பூச்சி, காக்கா குருவிங்களாம் சாப்பிட கூடாதுனு கெமிக்கல கலந்து விளையறது எல்லாத்தையும் நாம மட்டுமே சாப்டுட்டு இருந்தோம்… இயற்கை விவசாயத்துல காக்கா குருவி, வயல் எலி, முயலுக்குனு முப்பது பர்சென்டு எங்களுக்கு 70 பர்சென்டுனு பகிர்ந்து சாப்பிட்டுக்குறோம்… அவ்வளவுதான்… 

  1. ஆங்கில மொழிப்பற்றி…

“விசாகப்பட்டினம் போய்ட்டா நம்ம பிரபா என்ன தெலுங்குலயா படிப்பான்… “

“இங்கிலீஷ் மீடியம்டி… அதான் இந்தியா பூரா இங்கிலீஷ் மீடியமா தான இருக்கு…”

“பாத்தியா பாத்தியா நான் தான் பிரபாவ இங்கிலீஷ் மீடியம் சேக்கலாம்னு சொன்னேன்… நீ தமிழ் மீடியம் சேக்கலாம்னு சொன்ன… இப்ப பாரு வேற மாநிலத்துக்குப் போனா கூட எந்தப் பிரச்சினையும் இல்லாம இங்கிலீஷ் மீடியத்துலயே படிக்கலாம்…”

“இதுல என்ன பெருமை… கடைசியா வெள்ளக்காரன் நம்மள அடிமையாக்கி வச்சதால இந்தியா பூரா இங்கிலீஸ் மீடியமா இருக்குது… இப்படி யோசிச்சு பாரு… நம்ம கத்தியும் கம்பும் வச்சிருந்தப்ப குரங்கெல்லாம் துப்பாக்கியும் பீரங்கியும் எடுத்துட்டு வந்து நம்மள புடிச்சு அடிமையாக்கி ஆண்டு இருந்துச்சுன்னா… இந்தியா பூரா கொரங்கு மீடியமா தான் இருந்திருக்கும்… மூஞ்சில களிம்பு பூசிக்கிட்டு வெள்ளக்காரன் மாதிரி ஆகணும்னு இப்ப எல்லாரும் அலைஞ்சிட்டு இருக்கற மாதிரி ஆப்ரேசன் பண்ணி குரங்கு மூஞ்சி மாதிரி மாத்திக்க அலைஞ்சிட்டு இருந்திருப்பாங்க…”

  1. சித்திர குப்தன் பற்றி… 

யாரு பொணம்டா ரொம்ப நேரமா நின்னு எரிஞ்சிட்டு இருக்கு… 

எதோ லவ் பெயிலியர் கேஸாம்… நேத்து அவன் கணக்க சித்திரகுப்தன் முடிச்சிட்டான்… 

சித்திரகுப்தனோட கணக்குங்கறது அது இல்லடா… அவன் வேல மனுசங்களோட கணக்க முடிக்கிறதும் இல்ல… ஒருத்தன் பொறந்ததுல இருந்து சாகற வரைக்கும் எந்த மாதிரி வாழ்க்கை வாழ்ந்தாங்கறத வச்சுத்தான் அவன் சந்ததி செத்தவனோட நல்லது கெட்டது எல்லாத்தையும் தூக்கி சுமக்க வேண்டி இருக்கும்… அவன் சந்ததி நல்லத சுமக்கப் போகுதா? இல்ல கெட்டத சுமக்கப் போகுதாங்கறதுதான் சித்திரகுப்தம் கணக்கு… 

  1. கடவுள் பற்றி…

எங்கே உன் கடவுள் கட்டுரைல இல்லாத ஒன்ன இருக்கற மாதிரி நம்ப வைக்கப்பட்ட ஒரு பெரிய பொய் தான் கடவுள்னு சொல்லி முடிக்கிறேன்… கடவுள் பத்தி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும்… என்னோட புரிதல்ல இருந்து வேணா சொல்றேன் உங்களுக்குப் புரியுதான்னு பாருங்க… நாமெல்லாம் மிருகமா இருந்தப்ப உணவும் இனப்பெருக்கமும் மட்டுமே தேவையா இருந்துச்சு… அதுல கொஞ்ச மிருகங்க சிந்திக்க ஆரம்பீச்சிடுச்சு… அப்படிப்பட்ட மிருகங்களுக்கு மனுசங்கனு பின்னால பேரு வச்சுக்கிட்டாங்க… அந்த மனுசனுக்கு மிருகங்ககிட்ட இல்லாத பேராசை, பொறாமை, போட்டி, வஞ்சகம்னு நிறைய குணங்கள் சேர்ந்துருச்சு… மனுசங்களோட மனசும் நிம்மதி இழந்துருச்சு… அப்பதான் ஏன்டா நிம்மதியே இல்லனு உக்காந்து அமைதியா யோசிக்க தான் கோவில்கள கட்டி வச்சாங்க… உக்காந்து ஒழுக்கமா யோசிச்சவங்க நிம்மதிய கெடுக்கற தேவையில்லாத குணங்கள விட்டுட்டு கடவுள் நிலைய அடைஞ்சாங்க… அந்தக் கடவுள் நிலை அடைஞ்சவங்க கொடுத்துட்டு போன சிலபஸ் தான் திருமந்திரம், திருக்குறள், பகவத்கீதை, குர்ஆன், தம்மபதம், பைபிள்னு எல்லாம்… அந்த சிலபஸ உண்மையா புரிஞ்சிட்டவங்க கடவுளோட மனநிலைய அடைய முடிஞ்சிது… இப்ப நீங்க ப்ரூஸ்லி ஆகணும்னா ப்ரூஸ்லி மாதிரி டெய்லி பயிற்சி பண்ணிங்கனா ஒருநாள் நீங்க ப்ரூஸ்லீ ஆக முடியும்… சும்மா ஃபோட்டோ வச்சு தொட்டுக்கும்பிட்டு தீபாராதனை காட்டினிங்கன்னா நீங்க ப்ரூஸ்லி ஆகிட முடியாது… 

இப்போது சொல்லுங்கள் இந்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்தானே… அடுத்த படம் இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து எடுக்கப் போகிறாரோ… வெயிட்டிங் சாந்த குமார்…

 

Related Articles

சட்டக்கல்லூரியில் படித்து டாக்டர் ஆகணும்... Pariyerum Perumal (2018) - IMDB Rating - 9.6/10 எல்லா ஊரிலும் கூட்டம் அதிகம் கூடாத ஒரு தியேட்டர் இருக்கும். காரணம் அந்த தியேட்டர்களில் மட்டும் தான் ந...
உங்கள் வீட்டு மின் சாதனங்களுடன் பேசும் வ... இணையதள சந்தையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளக் கூகுள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நுகர்வோர் சாதனங்களுடன் கூகுள...
ரவுடிகளை பிடிக்க போலீஸ்க்கு உதவிய மலையம்... பூந்தமல்லி அருகே நேற்று இரவு எட்டு மணி அளவில் வினு என்ற ரவுடியின் பிறந்தநாள் விழாவிற்காக ஒன்றுகூடிய 120 ரவுடிகளில் 72 பேரை போலீஸ் கொத்தாக கைது செய்துள...
நண்பர்களோடு பார்க்க வேண்டிய படம்! –... இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குனர் கரு பழனியப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நட்பே துணை.மீசைய ...

Be the first to comment on "இயக்குனர் சாந்தகுமாரின் அட்டகாசமான வசனங்கள்! – வியக்க வைக்கும் “மகாமுனி” இயக்குனர்!"

Leave a comment

Your email address will not be published.


*