பூனை நம்மை கடித்து விட்டால் உடனடியாக நாம் செய்ய வேண்டியவை என்னென்ன? பூனை கடிக்கும் ரேபிஸ்க்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

ஏதாவது ஒரு விலங்கினை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது உலகம் முழுக்க உள்ள மனிதர்களின் நற்பண்பாக இருக்கிறது. அந்த வகையில் மனிதர்கள் நாய்களை பூனைகளை வளர்த்து வருகின்றனர். அந்தப் பிராணிகள் மீது அளவில்லா அன்பு செலுத்துகின்றனர். அந்த பிராணிகளுக்கு முத்தம் கொடுப்பது பிராணிகளுடன் கட்டிப்பிடித்து உருண்டு விளையாடுவது என்று ஐந்தறிவு ஜீவன் என்ற பாகுபாடு ஏதும் இல்லாமல் சக மனிதனுடன் விளையாடுவது போல் விளையாடுகின்றனர் மக்கள். 

அந்த மாதிரியான செல்லப்பிராணிகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது போல் உணரும் மனிதர்களும் இருக்கிறார்கள்.  சொந்த வேலையை விட்டு விட்டு உடனடியாக பிராணிகள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அதனை குணமாக்க கூடிய மனிதர்களும் இருக்கிறார்கள். 

அந்த செல்ல பிராணிகள் இறந்துவிட்டால் மனிதர்களுக்கு என்ன மாதிரியான இறப்பு சம்பிரதாயங்கள் செய்வார்களோ அதேபோல அந்த நாய்க்கு சிறிய அளவில் இறுதி ஊர்வலம் நடத்தக்கூடிய மனிதர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக இளம்பெண்கள் சுட்டிப் பெண்கள் இவர்கள் எல்லாம் தங்களுடைய செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் ஓரிரு நாட்கள் சாப்பிடாமல் கூட வருந்தி இருக்கிறார்கள் என்பதும் உண்மையான தகவல்கள். 

அப்படி தன்னை செல்லப் பிராணியாக வளர்த்து வரும் அந்த வீட்டிலுள்ள உறுப்பினர்களிடம் அந்த செல்லப்பிராணிகள் எந்நேரமும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்பது தான் பதிலாக வரும்.  படுக்கையறையில் மலம் கழித்து வைப்பது சிறுநீர் கழிப்பது சோபாவில் சிறுநீர் கழிப்பது மலம் கழித்து வைப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் அந்த செல்லப்பிராணிகள் செய்து வருகின்றன. ஏதாவது சாப்பிட்டு விட்டு வந்து நடுவீட்டில் கக்கி வைக்கும் படுக்கை அறையில் கக்கி வைக்கும் சாமி அறையில் கக்கி வைக்கும் சமையலறையில் அதே வேலையை செய்து வைக்கும் என்று ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பதில் நிறைய பிரச்சினைகள் இருக்கவும் செய்கின்றன. 

செல்லப் பிராணிகளின் அந்த மாதிரியான பழக்கங்களை கூட நாம் மாற்றி விடலாம். ஆனால் அது எப்போது சீறிப்பாய்ந்து தனக்குள் இருக்கும் மிருகத்தை வெளியே கொண்டு வரும் என்பதுதான் யாராலயும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. 

முற்றிலும் எதிர்பாராத ஒரு நேரத்தில் அந்த செல்லப்பிராணிகள்  தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் அந்த மனிதர்கள் மீது நகங்களை பாய்ச்சுகிறது கீரி விடுகிறது. சில சமயங்கள் கடித்தும் வைத்துவிடுகிறது. பெரிய மனிதர்கள் அந்த மாதிரியான செல்லப் பிராணிகளின்  கடியை தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகள் அந்த செல்லப்பிராணிகளை தன்னுடைய சக தோழனாக நினைத்து கொண்டிருக்கையில் அவர்கள் அந்த பிராணிகளிடம் இருந்து கடிவாங்கும் போது அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு பயம் வந்து விடுகிறது. 

தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் பூனைகள் மீது யாருக்கும் பெரிதாக அக்கறை இருப்பதில்லை. அதேசமயம் எங்கு அது பாய்ந்து வந்து கடித்து விடுமோ என்கிற பயம் எல்லோருக்கும் உள்ளூர இருக்கிறது.  தெருவில் சுற்றித்திரியும் அந்த நான்கு கால விலங்குகளில் சில விலங்குகள் வெறிபிடித்த விலங்குகளாக இருக்கலாம். ரேபிஸ் வைரஸ் என்ற வைரஸின் தாக்குதலுக்கு ஆளான விலங்குகளாக இருக்கலாம். 

எழுத்தாளர் சரவணகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய  கன்னித்தீவு நாவலில் ஒரு பெண் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு அவள் வீட்டில் செல்லப்பிராணியாக வளரும் நாயின் முடி கூட காரணமாக இருக்கும் என்கிற ஒரு தகவலை குறிப்பிட்டு இருந்தார். அந்த தகவல் இங்கே, “அந்தப் பெண்ணின் பிறந்த வீட்டில் ஒரு நாய் வளர்த்திருக்கிறார்கள். உடல் நிறைய நீள்முடிகள் கொண்ட ஏதோ இனம். அப்பெண் அதனுடன் மிகுந்த வாஞ்சையாய் இருந்திருக்கிறாள். படுக்கையில் ஏறிப் படுத்துக் கொள்ளுமளவு உரிமையுடன் வீட்டில் வலம் வந்திருக்கிற‌து. அந்த நாயின் முடிகள் சுவாசிக்கையில் அவள் உடலுக்குள் போய் ரத்தத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அது தான் இப்போது கர்ப்பத் தடையாய் வந்திருக்கிறது.”. செல்லப் பிராணிகளின் பற்கள், நகங்கள் மட்டும் நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. அவைகளின் முடிகள் கூட நம்மை பாதிக்கின்றன. குறிப்பாக பூனையின் முடிகள் குழந்தைகளின் சுவாசப்பாதை நெருங்கும்போது,  அவர்கள் ஆஸ்துமா என்கிற நோய்க்கு அடிமையாகி விடுகிறார்கள். 

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு நாய் கடியால் இறப்பவர்கள் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள். சாதா நாய்கள் வீட்டு நாய்கள் கடித்தால் எந்த பிரச்சனையும் இல்லை. மொச நாய் கடித்தால் தான் பிரச்சினை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் எந்த நாயாக இருந்தாலும் அது கடித்தால் பிரச்சினைதான். காரணம் நாயாக இருந்தாலும் சரி பூனையாக இருந்தாலும் சரி. அவை வீட்டில் மட்டுமே எப்போதும் இருப்பதில்லை. வெளியே இருக்கும் சில நாய்களுடன் பழகும் போது அல்லது சண்டை போடும்போது அந்த நாயின் நகங்கள் எச்சில் போன்றவை அந்த நாய்களுக்கும் தொற்றிக் கொள்கின்றன. அப்போது இந்த நாய்க்கு அதாவது வீட்டு நாய்க்கு வீட்டு பூனைக்கு தொற்று இருக்கிறதா என்பதை நம்மால் கண்டறிய முடியாது.  அப்படிப்பட்ட சூழலில் எந்த பிராணி கடித்தாலும் நாம் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நமக்கு நல்லது. 

இப்போதெல்லாம் நாயைவிட பூனையை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை தான் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம், பூனை வளர்த்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்று ஒரு சிலர் கூறி வருகிறார்கள். அவர்கள் சொல்வதை நம்பி கொண்டு  இப்போது பெரும்பாலான மக்கள் நாய்களை விட பூனைகளைத் தான் அதிகம் வளர்க்கிறார்கள்.  அதுமட்டுமன்றி நாய் வளர்த்தால், கதவு திறந்து விட்டால் போதும் அது சாலையில் செல்பவர்களின் பின்னாடியே குலைத்துக் கொண்டே போகும். சாலையில் வருபவர்களை கடிப்பதற்கு தாவும்.  வீட்டிற்கு வருபவர்களை வீட்டிற்குள் விடவே விடாது. அவர்களின் காலைச் சுற்றி சுற்றி கடிப்பது போல் குலைத்துக் கொண்டிருக்கும். இந்த மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் வரக்கூடாது. ஆனால் வீட்டில் ஒரு செல்லப் பிராணி இருக்க வேண்டும் என்பதற்காக ஜாதகம் பார்த்தெல்லாம் கூட என்ன வகையான பூனையை வாங்கவேண்டும் என்று யோசித்து பூனை வாங்கி வளர்க்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். 

அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு நாய் கடியை விட பூனை கடியால் பாதிக்கப்படுபவர்கள் தான் அதிகம். அவர்கள் தான் அதிக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ரேபிஸ் வைரஸ் என்ற விலங்குகளை தாக்கும் இந்த வைரஸ் பெரும்பாலும் நாயை மட்டும் பாதிப்பதில்லை. பூனை, எலி, குரங்கு, ஆடு என்று எல்லா விலங்குகளையும் பாதிப்பதாக ஆய்வு சொல்கிறது. இந்தியாவில் கூட பூனை கடித்ததால் ரேபிஸ் வைரஸ் வந்து ஒரு மனிதர் இறந்து போயிருக்கிறார். ஆதலால் பூனை, ஆடு போன்ற விலங்குகள் எதுவாக இருந்தாலும் சரி, அவை கடித்துவிட்டால் அலட்சியம் காட்டவேண்டாம். நாய் கடித்தால் மட்டும் தான் பிரச்சனை வரும் பூனையால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சிலர் சொல்வார்கள். ஆனால் பூனையாலும் பிரச்சனைகள் வரும். 

வேந்தர் டிவியில் மூலிகை மருத்துவம் பற்றிய குறிப்புகள் சொல்லும் பாரம்பரிய மருத்துவர் கே எஸ் முருகன் பூனை கடியைப் பற்றியும் அதனால் உண்டாகும் விளைவு பற்றியும் அதற்குத் தீர்வாக அமையும் மூலிகை மருத்துவம் பற்றியும்

அவர்கள் சொன்ன வரிகள் இங்கே: 

பூனை கடி, எலி கடிக்கு மூலிகை மருத்துவம்: 

விவசாயம் செய்பவர்கள் தங்களுடைய விவசாய நேரத்திலேயே சிறியதாக ஒரு வீடு கட்டி அங்கேயே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு வயல்வெளிகளில் தொந்தரவு இருக்கும் அவர்கள் இரவு நேரத்தில் வெளியில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் போதோ அல்லது வீட்டிற்குள் போய் படுத்து தூங்கிக்கொண்டு இருக்குபோது அவர்களுக்கு அதிகம் இருக்கும். அப்போது அந்த எலிகள் அவர்களை கடித்துவிட்டால் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

உடம்பு முழுக்க தேம்பல் வருவது உடம்பு முழுக்க ஊறல் எடுப்பது அரிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டு அதன் மூலமாக துர்நாற்றத்துடன் கூடிய நீர் வெளியேறும். குளிர் காய்ச்சல் ரணஜன்னி போன்ற நோய்கள் எல்லாம் ஏற்படும். முடிந்தவரை வளர்ப்புப் பிராணிகள் வளர்க்காமல் இருப்பது நல்லது ஏனென்றால் வளர்ப்புப் பிராணிகள் குறிப்பாக பூனையின் முடிகள் கீழே உதிர்ந்து அவை குழந்தைகளின் நாசிக்குள் போகும்போது வீசிங் போன்ற ஒவ்வாமை நோய்கள் ஏற்படுகின்றன. 

செல்லப்பிராணிகள் கடித்து விட்டால் அதன் நச்சுக்கள் நாளடைவில் உடல் முழுக்கப் பரவி அது நிறைய பக்க விளைவுகளை உருவாக்கும். ஆதலால் இந்தப் பூனைக் அறிக்கையை கீழ்காய்நெல்லி எனப்படும் கீழாநெல்லியை பயன்படுத்தலாம்.  கீழாநெல்லி உடன் கொம்பு மஞ்சள் எனப்படும் மஞ்சளை, ஓமம், நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி தைலமாக தயாரித்து அந்த இடத்தில் தடவ வேண்டும். 

இந்த மாதிரி மூலிகை மருத்துவம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தயவு செய்து அரசு மருத்துவமனையில் ஒரு ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.  அதைத் தொடர்ந்து நம்மை சீறிப் பாய்ந்து கடித்த அந்த பூனையை, எதற்கும் ஒருமுறை பிராணிகள் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதன் தன்மை மாறி விட்டதை விளக்கி, அதற்கான மருத்துவத்தைச் செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். படித்தவர்கள், பணக்காரர்கள் இவர்கள் எல்லாம் ஒரு பிராணியை வளர்ப்பதற்கு முன் அதைப் பற்றிய முழு தகவல்களையும்… எப்படி எப்படி வளர்க்க வேண்டும்… என்பது பற்றியும் அதற்கான மருத்துவங்கள், எவ்வளவு கால இடைவெளிக்குள் முறையாக செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டு தான் வளர்க்கிறார்கள். ஆனால் படித்திருந்தும் சிந்திப்பதற்கு கூட நேரமில்லாமல் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கும் மக்கள் இது குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. பூனை கடி தானே இது என்ன செய்யப் போகிறது என்று அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். பூனை கடித்து விட்டதால் என்ன ஆகப் போகிறது என்று இந்த சாமானிய மக்கள் அலட்சியமாக இருக்கும் போது பாதிப்புக் அவர்களுக்கு மட்டும் இருப்பதில்லை. வெறித்தனமாக மாறிவிட்ட பூனை மீண்டும் மீண்டும் மற்றவர்கள் மீது பாயத் தொடங்கும். குறிப்பாக குழந்தைகள் மீது அடிக்கடி பாயத் தொடங்கும்.  அப்பொழுது,  நாம் எதிர்பாராத பிரச்சினைகளையும் எதிர்பாராத மருத்துவச் செலவுகளையும் சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகி விடும். நாய் கடித்துவிட்டால் நீங்கள் எப்படி பதறி அடித்து விரைந்து போய் உங்களுக்கு ஊசி போட்டுக்கொண்டு நாய்க்கும் மருத்துவம் பார்ப்பீர்களோ, அதே மாதிரி இனி வரும் காலங்களில் நீங்கள் பூனைக்கும் செய்ய வேண்டியது இருக்கும். 

Related Articles

#4Yearsofbbvip – ரகுவரன வில்லனா தா... கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்கு சென்று கொண்டாடி தீர்த்த படம் விஐபி. தனுஷை பிடிக்காத ரசிகர்கள...
நீங்க சினிமாவில் கேமரா மேன் ஆக வேண்டுமா?... Technical DetailsClose up - காமிரா கிட்டத்தில் பார்ப்பது Close shot - கொஞ்சம் விலகிப் பார்ப்பது Two shot - இரண்டு தலைகள் Three Shot...
துப்பாக்கிக்கு இரை! – தரமணி படம் ப... கன்னியாகுமரி மீனவர்கள் தற்போது ஓகி புயலுக்கு இரையாகிப்போனதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத சுயநலம் பிடித்த மனிதர்களாகிய நாம் நம்முடைய பாவங்கள் கழிய பு...
டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான த... இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ...

Be the first to comment on "பூனை நம்மை கடித்து விட்டால் உடனடியாக நாம் செய்ய வேண்டியவை என்னென்ன? பூனை கடிக்கும் ரேபிஸ்க்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?"

Leave a comment

Your email address will not be published.


*