படைப்பாளிகள் கலைஞர்கள் இவர்களெல்லாம் தங்கள் உடல் நலனில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும்? இளம் படைப்பாளிகள் கலைஞர்கள் எல்லாம் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!

How much attention should creators and artists pay to their physical well-being_

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா அளவில் ஏன் உலக சினிமா அளவில் கூட மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் பிரபலமான அல்லது மக்களுக்கு மிகவும் பிடித்து போன பிரபலம் ஆகாத சரியான சம்பளம் வாங்காத சின்ன சின்ன கலைஞர்கள்,  நடிகர்கள்,  நடிகைகள், இதர தொழில்நுட்ப கலைஞர்கள் போன்றோர் ஏதாவது ஒரு நோயால் தாக்கப்பட்டு  தீவிரமடைந்து மரணமடைகிறார்கள் அல்லது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது சுற்றியிருக்கும் மனிதர்களால் வஞ்சிக்கப்பட்டு விஷம் வைத்து கொள்ளப்படுகிறார்கள்.  அல்லது விபத்தில் மரணம் அடைகிறார்கள். நகைச்சுவை நடிகை ஷோபனா சிக்கன்குனியா மற்றும் ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டு பட வாய்ப்பு கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார். பசி, முள்ளும் மலரும் போன்ற படங்களில் நடித்த ஷோபா  தற்கொலை செய்து கொண்டார்.  அதேபோல இந்திய அளவில் பிரபலமான  விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். அவள் ஒரு தொடர்கதை, முள்ளும் மலரும்  பட புகழ் ஜெயலட்சுமி என்கிற நடிகையும் தற்கொலை செய்து கொண்டார். நடிகை சிம்ரனின் தங்கையான மோனல் என்கிற நடிகை  தற்கொலை செய்து கொண்டார். அதேபோல சத்யராஜுடன்  சவுண்ட் பார்ட்டி என்கிற படத்தில் நடித்த பிரதீஷா தற்கொலை செய்து கொண்டார். குணால், சாய் பிரசாத், திவ்யா பாரதி போன்றவர்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கெல்லாம் காரணம் மன அழுத்தம் என்கிறார்கள். இந்த மன அழுத்தம் என்கிற விஷயம் தற்கொலைகளுக்கு மட்டும் தான் காரணமாக இருக்கிறதா? இல்லை கண்டிப்பாக அது பல நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. அப்படி மன அழுத்தம் காரணமாக தனக்கு வந்திருக்கும் நோயை சரியாக கவனிக்காமல் அல்லது  மன அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு வரும்  அளவுக்கு உடலை பராமரிக்காமல்  இருப்பதால் அவர்கள் எதிர் பாராத சமயம் உடல் முற்றிலும் வலுவிழந்து செயலிழந்து மருத்துவமனைக்குத்  தூக்கிச் செல்லப் படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் படைப்பாளிகளும் கலைஞர்களும் உடல் மீது இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றும் இனி நாம் பிழைக்க முடியாது என்கிற நிலை வந்துவிட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்றும் வருந்தி அந்த வருத்தத்திலேயே உயிரை விட்டு விடுகின்றனர். 

 அந்த வகையில் மிகக்குறைந்த வயதில் உயிரைப் பறிகொடுத்த படைப்பாளிகள்,  எவ்வளவு வயது ஆனாலும் தன்னுடைய உடலை திடமானதாக வைத்துக் கொள்ளும் படைப்பாளிகள் பற்றி பார்ப்போம். மிகக்குறைந்த வயதில் நோய் முற்றிப்போய் உயிரிழந்து தமிழக மக்கள் ஒட்டு மொத்த பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் நா. முத்துக்குமார். யாரும் எதிர்பார்க்காத இறப்பு இது. பல ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு மஞ்சள் காமாலை நோய் இருக்கிறது என்பது நா. முத்துக்குமாருக்கு தெரியவந்திருக்கிறது.  அப்படி இருந்தும்  இந்த நோய் நம்மை ஒன்றும் செய்யாது பெரிய அளவில் பாதிக்காது அதற்குள் ஒரு குறிப்பிட்ட நேரம் எடுத்து இந்த நோய்க்கு சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அலட்சியமாகவும் காலத்தை தாமதப்படுத்தி கொண்டிருந்திருக்கிறார் என்று சிலர் சொல்கின்றனர். நா. முத்துக்குமார் அலட்சியமாக இருப்பவர் அல்ல அவர் எதிர்பாராத தருணத்தில் இந்த நோய் முற்றிப்போய் அவரை மரணத்திற்கு ஆளாக்கி உள்ளது என்கின்றனர் சிலர். எது எப்படியோ நா முத்துக்குமார் முடிந்தவரை தன்னுடைய உடல் மீது இன்னும் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்தி இருக்கலாம். அவருக்கு ஆதவன் என்கிற ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். மிக இளம் வயதில் அவர்களை தவிக்க விட்டு சென்ற நா. முத்துக்குமார் மீது கோபம் வருகிறது தானே?  அவருடைய இறுதிச்சடங்கு இருக்கிறது பஞ்சா பல நபர்கள் நா முத்துக்குமார் அவருடைய உடல் மீது இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், இவ்வளவு இளம் வயதில் இறந்து போய் தன்னுடைய ரசிகர்களை துன்பத்தில் ஆழ்த்தி இருக்க கூடாது என்று வருத்தம் தெரிவித்தனர். அதேசமயம் நா முத்துக்குமார் மரணம் குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர் நா முத்துக்குமார் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் அவரிடம் அந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவிற்கு பணம் செய்த இல்லாமலா இருந்திருக்கும்  என்பதுதான் அந்தக் கேள்வி. ஒரு விதத்தில் இது நியாயமான கேள்வி தான் நாம் முத்துக்குமாருக்கு பண வசதி குறைவாக இருந்ததால் அப்படியே இருந்திருந்தாலும் நா முத்துக்குமார் எத்தனை மனிதர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்திருக்கிறார் எத்தனை உள்ளங்களை தன்னுடைய அழகான தமிழ் வரிகளால் கவர்ந்திருக்கிறார் இப்படி இருக்கையில் அவருடைய நோய்க்கு சிகிச்சை பார்க்க தமிழகத்தில் எத்தனையோ மருத்துவர்கள் இலவசமாக சிகிச்சை செய்ய தயாராக கூட இருந்திருப்பார்கள்.  அப்படி இருந்தும் நா முத்துக்குமார் தன் உடலில் இருக்கும் ஒரு நாயைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்து எழுதுகிறார் என்றால் என்ன அர்த்தம்? அவர் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்திருக்கிறார் என்று அர்த்தம்? எதற்கு அவ்வளவு ஓட்டம் அவ்வளவு உழைப்பு, அவ்வளவு மன உளைச்சல்கள்  என்று கேட்கத் தோன்றுகிறது. ஓரளவுக்கு புகழ்ச்சியும் பணவசதியும் வந்த பிறகு குறிப்பிட்ட சில காலங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு தன்னுடைய உடலை பரிசுத்தமாக குணப்படுத்திக் கொண்டு மீண்டும் தன்னுடைய துறையில்  அவர்தான் வெற்றிகரமான படைப்பாளியாக வலம் வந்திருக்கலாம். ஆனால் நா முத்துக்குமார் அதை செய்யத் தவறிவிட்டார்.  அவருடைய மகனையும் மகளையும் தவிக்க விட்டது போல அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களை தவிக்க விட்டு சென்று விட்டார். 

இதைப் போலத்தான் நடிகர் சுகாந்த் சிங் அவர்களின் தற்கொலை செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை நொறுக்கி போட்டது. இந்திய அளவில் புகழ்பெற்ற தோனியின் வரலாற்று படத்தில் நடித்த நிழல் தோனியான சுஷாந்த் சிங்கின் இறப்பு  வாழ்க்கை மீது இருந்த நம்பிக்கையை சிதைத்துவிட்டு சென்றது. அதுபோல ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதை வென்ற நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் நிழல் மனிதரான வடிவேல் பாலாஜி அவர்கள் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு மூளையில் நோய் இருந்ததால்  சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்று சிலர் சொல்கின்றனர். இன்னும் சிலர் அவருக்கு மாரடைப்பு வந்தது, அதனால் அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்கின்றனர். இப்படி செய்திகள் வந்துகொண்டே இருக்க சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வடிவேல் பாலாஜி போன்ற கலைஞர்களுக்கு அவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் டிவி சேனல்கள் சரியான சம்பளம் தருவதில்லை அவர்களை வைத்து சம்பாதிக்கிறார்களே தவிர கலைஞர்களை கண்டுகொள்வதில்லை, விஜய் டிவி நினைத்திருந்தால் வடிவேல் பாலாஜியை காப்பாற்றி இருக்கலாம் என்று  தங்கள் ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர். வடிவேல் பாலாஜி தீவிரமான உழைப்பாளி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவர் பிணவறையில் ஊழியராக இருந்து படிப்படியாக  வளர்ந்து விஜய் டிவி மூலமாக பிரபலம் அடைவதற்கு ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்து உள்ளார். அதற்கு இடையில் அவருக்குத் திருமணமாகிக் குழந்தைகள் என்று குடும்பம் உண்டாக, அவர் இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட வடிவேல் பாலாஜி துணை நடிகர் என்கிற பிரிவில் வருவதால்,  அவருக்கு நிலையான வருமானம் வருவதில்லை என்று சொல்கின்றனர். ஆனால் அவர் விஜய் டிவி புகழ் காமெடி நடிகர் என்கிற அடையாளத்தோடு கிராமப்புறங்களில் சென்று நிகழ்ச்சி நடத்தி வெளிநாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சி நடத்தி நிறைய பணம் சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால் மருத்துவமனை சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் சொல்கின்றனர். 

அதேபோல நடிகர் சந்தானம் அவர்களின் நண்பருமான, வாலிப ராஜா படத்தின் ஹீரோவுமான, மக்களின் மனம் வென்ற மருத்துவருமான சேதுராமன் அவர்கள் மாரடைப்பால் மிக இளம் வயதில் மரணம் அடைந்தார். மருத்துவரே மாரடைப்பு நோயால் மரணம் அடைகிறார் என்றால் என்ன அர்த்தம், அதற்குப் பேர் விதி என்று அர்த்தமா? அல்லது தொடர் மன அழுத்தம் என்று அர்த்தமா? தங்களுடைய ஒரு உடல்நலனில் அவர் கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தமா? இல்லை அதற்கெல்லாம் நேரம் கிடைக்கவில்லை என்று அர்த்தமா? இப்படி இளம் வயதில் மரணமடைந்த கலைஞர்கள், படைப்பாளிகள் இந்த மூவருக்குமே மிக இளம் வயது மகன்கள் மகள்கள் இருக்கிறார்கள். தன் மகன்களின் மகள்களின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்  என்பதை நினைக்கும் போது இந்த மூன்று பேர் மீதும் கோபம் வருகிறது தானே? கொஞ்சம் நேரம் எடுத்து உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது தானே? 

“அப்பா” படத்தில் சமுத்திரக்கனி ஒரு வசனம் வைத்திருப்பார்.  தன்னுடைய தாத்தாவைப் பார்த்து பேரன் தாத்தா உனக்கு “நாட்டு உடம்பு” தாத்தா என்று சொல்லும் வசனம் தான் அது. “நாட்டுப் உடம்பு” என்கிற வார்த்தை தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளியான மற்றும் சிறந்த நடிகரான வேல ராமமூர்த்திக்கு மட்டும் பொருந்துவதில்லை. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பெரும் படைப்பாளியான இயக்குனர் பாரதிராஜா, தமிழ் சினிமாவின்  மிக முக்கியமான இசையமைப்பாளரான இளையராஜா, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பாடலாசிரியர் வைரமுத்து இந்த மூன்று பேரும் “நாட்டு உடல்” கொண்ட மனிதர்கள்தான். 

மூவருமே மண் சார்ந்த படைப்பாளிகள். பாரதிராஜா தன் சினிமா பயணத்தில் எத்தனை படங்களை இயக்கி, திரையுலகில் எத்தனை படங்கள் விருதுகள் வென்றிருக்கின்றன.  அத்தனைப் அழிவுகளுக்கும் அத்தனை மனிதர்களுக்கும் அவர் எவ்வளவு உழைப்பை போட்டிருப்பார், ஆனால் அவர் இன்றுவரை  கம்பீர நடையோடு பல இடங்களுக்கு பயணம் செய்கிறார், குறிப்பாக இளைஞர்களுக்கு முன்னோடியாக நின்று தமிழக மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராடுகிறார்.  அதேபோல இளையராஜாவை எடுத்துக் கொள்வோம். அவர்  ஆயிரத்துக்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  அப்படி என்றால் அவர் தன் வாழ்நாளில் எவ்வளவு நாட்கள் எவ்வளவு நேரங்கள் படைத்திருப்பார் எவ்வளவு சிந்தனைகள் சிந்தித்திருப்பார். அத்தனை இருந்தாலும் தன்னுடைய உடல் நிலையை கவனித்துக் கொள்வதில் அவர் சரியாக இருக்கிறார். அதே போல பாடலாசிரியர் வைரமுத்து எடுத்துக் கொள்வோம்.  தமிழ்பட உலகில் அதிக தேசிய விருதுகள் வென்ற படைப்பாளி என்கிற பெருமை வைரமுத்துவுக்கு உண்டு.  அத்தனை விருதுகள் வென்ற வைரமுத்து எத்தனை பாடல்கள் எழுதி இருப்பார் எத்தனை பாடல்களுக்காக நிறைய உழைத்திருப்பார், எவ்வளவு மன அழுத்தங்களை சந்தித்திருப்பார். அப்படி இருந்தும் அவர் தன் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவதால் இன்று வரை பல இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடிய நபராக இருந்து வருகிறார். இவர்கள் போல நிறைய சாதிக்க நினைப்பவர்கள், தொடர்ந்து உழைப்பதோடு மட்டுமல்லாமல் உடல் நலனிலும் முறையான கவனத்தை செலுத்த வேண்டும்.

Related Articles

டிஜி யாத்ரா – ஆதார் எண் இணைப்பு மூ... வரும் 2018ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து ஆதார் என் இணைத்த விமானப் பயணங்கள் என்னும் திட்டம் கொண்டு வர பட உள்ளது. விமான டிக்கெட்டுகளில் ஆதார் எண் இணைப...
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் க... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தச் சீசனில் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. இரண்டு ஆண்டுத் தடை காலத்துக்குப் பிறகு அண...
வங்கி நெருக்கடிகளுக்குத் தீர்வு காண ஹைதி... ஹைதிராபாத் தற்போது அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வாஸ்து படி இருக்க வேண்டும் என்பதற்காக அரசு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வாஸ்...
அர்ஜூன் ரெட்டியை ஓரங்கட்டிய எனை நோக்கி ப... தயாரிப்பு : எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் & ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்ரிலீஸ் : வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் ஐசரி கணேஷ்எழுத்து இயக்கம் : கௌதம் வாசுதே...

Be the first to comment on "படைப்பாளிகள் கலைஞர்கள் இவர்களெல்லாம் தங்கள் உடல் நலனில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும்? இளம் படைப்பாளிகள் கலைஞர்கள் எல்லாம் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*