- பாத்ரூம்லயே பாக்ஸிங் பண்ணா யாரு மேன் உன்ன நம்புவா… ஸ்டேஜ்ல வந்து பாக்ஸிங் பண்ணு…
- “யாருக்காக ஆடுற…”
“சார்பட்டா பரம்பரைக்காக ஆடுறேன் வாத்தியாரே…”
“மொத அடி உன்தா இருக்கனும் புரியுதா..,”
- பாக்ஸிங்ல ஒருத்தன் ரவுடியா போயி செத்து போனான்னா எல்லாரும் அப்படியே போயிடுவாங்களான்ன…
- உன் ஆட்டம் ஆடு…
- வாத்தியார் பத்தி தப்பா பேசினு இருக்கானுங்க… என்னா மாதிரி ஆளு அவரு… நேத்தூ வந்த பசங்க… அவருக்கு தெரியாதா யாரு ஆடுவாங்க ஆட மாட்டாங்கன்னு… அவரு ஆட்டம் இன்னை வரைக்கும் என் கண்ணு முன்னாடியே நிக்கிது… எங்கள மாதிரி பரம்பர பசங்களக்கு பாக்ஸிங் மேல ஒரு வெறி இருக்குதுனா அது வாத்தியார் ஆட்டம் பாத்ததுதால தான்… இவனுங்க என்னடான்னா அவர வாயிக்கு வந்த மாதிரி பேசினு இருக்கானுங்க..,
- அவங்கிட்ட அடி வாங்கி தோத்துருக்கோம்… அவன் ஆயிரம் பேசுவான்… கேட்டு தான் ஆகணும்… நல்லா மண்டைல ஏத்திக்கோ… அவன அடிச்சிட்டு ஸ்டேஜ்ல நீயும் பேசு…
- குத்து சண்டைங்கறது தவம் மாதிரி…
- “பொண்டாட்டினு ஒருத்தி வந்தா தன்னால அடங்குவான்…”
“அடங்கித்தான ஆவனும்…”
- நீ உனக்கான வழிய கண்டுபிடிச்சிட்ட கபிலா… இனி அப்படியே போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்…
- துரை என்ன நம்பி ஒத்துக்கு… ஆட்டம்னா என்னனு பாப்ப… கபிலன் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கு…
- டேய் வேம்புலி உன்ன அடிச்சு நான் காலி பண்றேன் டா…
- வேம்புலியையே அடிக்கற அளவுக்கு உன்ட்ட ஆட்டம் இருக்கலாம்… ஆனா அதுக்காகலாம் ரோஸ்ச அடிச்சர முடியாது… மெட்ராஸ்ல இருக்கற பாக்சிங் பரம்பரைலயே ரோஸ்கிட்ட இருக்கற கால்படம் வேற எவங்கிட்டயும் கிடையாது… ஸ்டைலா டான்ஸ் ஆடுறாப்லயே இருக்கும்… அதுனால தன் அவன் பேரு டான்ஸிங் ரோஸ்சு… ஆப்போனன்ட் ஜனங்களுக்கே அவன்தான் கெலிக்கனும்ங்கற எண்ணத்த கொடுத்துருவான்… அந்தளவுக்கு பெரிய வித்தைக்காரன்பா அவன்… பாக்சிங்க்கு கை எவ்வளோ முக்கியமோ கால்லு அவ்ளோ முக்கியம்… ஊர் சுத்தக் கூடாது… நல்லதா சாப்டனும்… பீடி சாராயம் கூடவே கூடாது… அவன் ஃபுட் மூமன்ட் பாஸ் பண்ற மாதிரி சும்மா அடிக்கடி ஜர்க் கொடுப்பான்… நீ பிசுறு ஆக கூடாது… உடம்ப லேசாக்கி அப்படியே பட்டாம்பூச்சி மாதிரி பறக்கனும்… ஆனா கொளவி மாதிரி கொட்டனும்…
- உன்ன மிஞ்சுனவன் அவன் கிடையாது… நல்லா மண்டைல ஏத்திக்கு…
- ரோஸ் எவ்வளவு பெரிய ஆட்டக்காரனா வேணா இருந்துட்டு போகட்டும்… இங்க வாய்ப்புங்கறது நமக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் கிடைச்சர்றது கிடையாது… இது நம்ம ஆட்டம்… எதிர்ல நிக்கறவன் கலகலத்து போகனும்… நீ ஏறி ஆட்றா கபிலா இது நம்ம காலம் பாத்துக்கலாம்…
- “கடல் எங்களுக்கு பல நாள் இரை கொடுத்தது இல்ல தான்… அதுக்காக நாங்க கடல பளிச்சது இல்ல…”, “உப்பு கடல்ல தான் இருக்குது… ஆனா அத எடுக்கனும்னா தண்ணிய உன் இடத்துக்கு எடுத்துட்டு வரனும்…”, “எது உன்ன தடுக்குது… ஏன் தடுமாற்ற… உன் மனசுல நம்பிக்கை இல்ல… உன்ன தோக்கடிச்சிடுவாங்கன்னு பயப்படுறியா நீ…
டேய் நீ எதுக்கு திரும்ப ஆடனும்னு நெனைக்குற… உன்ன வேணாம்னு சொன்னானே அந்த ரங்கன் வாத்தியாருக்காகவா… முதல்முறையா ஆடுன்னு சொல்லுச்சே உங்கம்மாக்காகவா… ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிடும்னு காத்துட்டு இருக்குற உன் பொண்டாட்டிக்காகவா… உன்ன அடிச்சே ஆகனும்னு வெறில இருக்குற வேம்புலிக்காகவா… நீ எழுந்திருக்கவே கூடாதுன்னு தடுக்கறானுங்களே அவனுங்களுக்காகவா… உன் வெற்றிக்காக காத்திட்டு இருக்குற ஜனங்களுக்காகவா… இல்ல உனக்காகவா…”,
“வீசுற வலைலலாம் மீன் மாட்டுறது இல்லப்பா… காத்துட்டு இருக்கனும்…”, “வெற்றிங்கறது ஒரு ஆட்டம் கெலிக்கறதுல இல்ல… ஆடினே இருக்கறதுல இருக்கு…”, “ஓடு ஓடு ஓடு… ஒருத்தரும் உன் கூட இல்லனாலும் ஓடு… கூட இருக்கறவனே தள்ளிவிட்டாலும் ஓடு… உன்ன வேணாம்னு ஒதுக்குனான்ல அவன் முன்னாடி ஓடு… உன்ன ஆடவே கூடாதுன்னு தடுத்தானுங்கள்ல அவனுங்களுக்காக ஓடு… உன்ன சுத்தியிருக்கற எல்லாத்தயும் மாத்தனும்னா நீ ஓடு… ஓடு ஓடு ஓடினே இரு…”
- hey kabila… did you really do it bugger? You really did it man… அடிச்சு காலி பண்ணிட்டியாமே… எப்படி மேன்… என்னால யோசிச்சே பாக்க முடியல… wish I was there… show me your hand bugger… you found a path man… you found a path kabila… இனி அப்டியே போய்கினே இருக்க வேண்டியதுதான்… இதுக்கலாம் கவலபடாத… உங்கம்மாக்குலாம் கவலயேபடாத… ஓல்ட் லேடி… அழுதினே இருக்கும்… You have to do this bugger… நான் இருக்குறேன் உன் பின்னாடி. Daddy is there. Hey come on you bugger… You are a boxer like me…
- ஆட்டம்னா என்னானு பாப்ப… அவன் மேல எனக்கு அவ்வளவு நமக்கு இருக்கு…
- கபிலன்: Daddy நான் ஆடுறேன்…
Daddy: go on… Tell them…
கபிலன்: டேய்… என்னாங்கடா ஆளாளுக்கு என் வாத்தியார பல்லு புடிச்சு பாக்குறிங்களா… டேய் வேம்புலி உன்ன அடிச்சு நான் தூக்குறன்டா…
- காலத்துக்கும் பாக்ஸிங் தான் கதின்னு இருக்குறவன ஒரு தடவ சண்ட போட விட்டா தான் என்னாவாம்… எவன் எவன் மேலயோ உள்ள பாசம் ஏன் பெத்த புள்ள மேல இல்ல…
- தப்பு பண்ணவன் மன்னிப்பு கேட்டான்னா அதோட விட்றனும்னு பைபிள்ல சொல்லிருக்கு…
- சின்னக்கல்லுல பீய தொடச்சா கையெல்லாம் பூசிக்கும் மேன்…
- டேய் நில்றா… நான் ஒருத்தி இருக்குறேன்… நியாபகம் இருக்குதா உனக்கு… என்னாடா நினைச்சிகினு இருக்குற நீ… நான் உங்கூட தான வாழ்ந்துனு இருக்குறேன்… நீ ஒன்னும் என்னைய கொஞ்சி கிழிக்க வேண்டாம்… என் கூட மூஞ்சு கொடுத்து பேசு… தினத்துக்கும் வரது தூங்குறது பாக்ஸிங் போறது… வரது தூங்குறது பாக்ஸிங் போறது… இதயே தானடா ரெண்டு மாசமா பண்ணிட்டு இருக்குற… இந்த துணி நீ பாக்கனும்னு தான நான் கட்டுறேன்… இந்த பூ, பொட்டு எல்லாம்… ஆனா நீ ஒன்னத்தயும் பாக்க மாட்டல்ல… மவனே இன்னிக்கு மட்டும் நீ வெளிய போன… மனசார சொல்லு, பாக்ஸிங் தான் வேணும்னா என்ன என்னாத்துக்குடா கல்யாணம் பண்ணிக்குன நீ… நானும் என் மாமன் கூட வாழப் போறன்னு ஆசஆசயா வந்தேன்… என்னானு திரும்பி பாக்குறயா நீ… எனக்கு பசியெடுக்குது… போ… போயி சோறு எடுத்துனு வந்து ஊட்டிவிடு…
- அவன் ரோஸ கெலிச்சது நம்ம பரம்பர காரங்களாலயே ஏத்துக்க முடியல… வேம்புலிய அடிச்சு காலி பண்ண உடனே ஸ்டேஜ் மேல ஏறி எல்லார் முன்னாடியும் சார்பட்டா பரம்பரை வெட்டி பரம்பரை வகையறாடானு கத்தி சொல்லனும்… அந்த நிமிசமே உயிர் போனாக்கூட நிம்மதியா போகும்டா…
- கழகத்தோட உடன்பிறப்பு நான்… யாருக்கும் பயப்பட மாட்டேன்…
- இதோட வாய் பாரேன்… வண்ணாரபேட்டை வரை நீளுது… ஜஸ்ட் லைக் பாக்கியம்…
- மூக்குமுட்ட குடிச்சிட்டு படுத்திருந்தா சின்ன குழந்த கூட மூஞ்சி மேல ஏறி மூத்திரம் போகும்டா…
- என்னைக்கும் அம்மா கைய கெட்டிமா புடிச்சினு மேல வந்துரனும்…
- உன் பரம்பரைலயே ரொம்ப நல்லது ரோஸ்… அவன் தோல்விய ஒத்துக்கிட்டான்… நீ புலி இல்ல மேன்… மூக்குல வர்ற சளி…
- நீ குடிக்கலனா நம்ம குடும்பம் தான மாமா நல்லா இருக்கும்… இந்த சனியம்புடிச்ச குடிய தூக்கி தான் போடு மாமா…
- அவன பத்தி தெரியாது உனக்கு… அவங்காட்டி பழைய மாதிரி ஏறி வந்தான்னு வச்சுக்கு எல்லாரையும் ஏறி மிதிச்சிட்டு போயிகிட்டேன் இருப்பான்…
- துட்டு கொடுத்தா நான் வாய பொளந்துட்டு வந்துருவேன் பாரு…
- என்ன கபிலா இன்னும் எத்தன நாளைக்கு இப்படியே இருக்க போற… நம்ம ரேவ்ல இருந்து ஒருத்தன் வெளிய போயி பெரிய ஆளு ஆவுறது எவ்வளவு கஷ்டம்னு உனக்கு தெரியாது…
எப்போதுமே இயக்குனர் பா ரஞ்சித் படத்தில் உள்ள வசனங்கள் நெஞ்சில் கத்தி பாய்வது போல அவ்வளவு கூர்மையாக இருக்கும் வசனங்களை அவர் மட்டும் தனியாக அமர்ந்து மற்றவர் கூடவே இரண்டு மூன்று எழுத்தாளர்களை சேர்த்துக் கொண்டுதான் தன்னுடைய படத்திற்கு வசனம் எழுதுவார். குறிப்பாக காலா படத்திற்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவருடன் சேர்ந்து வசனம் எழுதினார் பா ரஞ்சித் அந்த வசனங்களில் மிகச் சிறப்பாக இருந்தது குறிப்பாக ஆனந்த விகடனின் விருதை வென்றன. இந்த முறை பா. ரஞ்சித்துடன் எழுத்தாளர் தமிழ் பிரபா கூட்டணி சேர்ந்துள்ளார். இவர் பேட்டை என்கிற நாவல் எழுதியுள்ளார் இந்த நாவலில் தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியமான நாவலாக கருதப்படுகிறது தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியமான எழுத்தாளர் சாருநிவேதிதா இந்த நாவலைப் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய நாவல் என்று பாராட்டி இருந்தார். அப்படிப்பட்ட மிகச்சிறப்பான எழுத்தாளர்கள் தமிழ் பிரபகர் அவர் இதற்கு முன்பு விகடனில் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர் அவர் தமிழகம் முழுக்க உள்ள சிறப்பான வித்தியாசமான மனிதர்களைப் பற்றி ஒரு தொடராக ஆனந்த விகடனில் எழுதி வந்தார். அப்படிப்பட்ட தமிழ் பிரபா சார்பட்டா படத்தில் பங்காற்றியது தான் இந்த படத்தில் உள்ள வசனங்கள் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளன. அந்த எழுத்தாளர் சார்பட்டா படத்தில் “வானம் விடிஞ்சிடுச்சு காய்ச்சுடு மேளத்த…” என்ற பாடலின் தொடக்கத்தில் நீல கலர் சட்டை போட்டுக்கொண்டு ஆட்டம் ஆடியிருப்பார் பாருங்கள்… அவ்வளவு சிறப்பான நடனம் அது. சரி அதை விடுங்கள்… இந்தப் படத்தில் உள்ள அத்தனை வசனங்களையும் இங்கு தொகுத்துள்ளோம். உங்களுக்கு மிகவும் பிடித்த வசனம் எது என்று கமெண்ட் செய்யுங்கள்.
Be the first to comment on "சார்பட்டா வசனங்கள் – உங்களுக்கு பிடித்த வசனம் எது? "