வீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் அமேசானை உங்களுக்குத் தெரியும், தூங்குபவர்களை அலாரம் வைத்து எழுப்பிவிடும் அமேசானை உங்களுக்குத் தெரியுமா?

Alexa

தொழில்நுட்பம் முன்பு மனிதர்கள் செய்துவந்த மிகக் கடினமான வேலைகளை எளிமையாக்கியது, பிறகு அவர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிப்போனது. இப்போது தொழில்நுட்பம் சக மனிதனின் அருகாமை போன்ற ஒன்றையே உருவாக்கத் தொடங்கியுள்ளது. உங்கள் குரலுக்கு கட்டுப்படும் மனிதர் அல்லாத திறமையான ஒரு தனி உதவியாளரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அமேசான் அலெக்ஸ்சா

மின் வணிகத்தில் உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனத்தின் அறிமுகம் தான் இந்த அலெக்ஸ்சா. குரலின் மூலம் கட்டுப்படுத்தப்படும் வகையில் இந்தத் தனி உதவியாளர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான பாடல்களை தேர்ந்தெடுத்துக் கேட்பது, செய்யவேண்டியதைப் பட்டியலிட சொல்லிக் கேட்பது, வானொலி கேட்பது, இணையத்தில் தேடுவது, வானிலை அறிக்கைகளைத் தெரிந்து கொள்வது, இணையத்தில் பொருட்கள் வாங்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம், குறிப்பாக இந்தக் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் உங்கள் குரல் மூலம் மட்டும் உங்கள் தனி உதவியாளரான அலெக்ஸாவுக்கு தெரியப்படுத்தலாம்.

அலெக்ஸ்சாவில் அலாரம்

அலெக்ஸ்சா பயன்படுத்தி வந்த அமேசானின் பெரும்பான்மை வாடிக்கையாளர்களுக்கு அதில் காலையில் துயில் எழுப்பும் அலாரம் வசதி இல்லாதது பெரும் குறையாக இருந்து வந்தது. அலாரம் வைத்துக்கொள்ளும் வசதியையும் இப்போது அமேசான் அலெக்ஸ்சாவில் இணைத்துள்ளது. இதன்மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை நீங்கள் அலாரம் ஒலியாக அமைத்துக்கொள்ள முடியும். இந்த வசதியை இணைத்ததன் மூலம் பெரும்பான்மை வாடிக்கையாளர்களின் அலாரம் என்ற தேவையை அமேசான் நிவர்த்தி செய்து வைத்துள்ளது.

அலாரம் வசதியைப் பயன்படுத்துவது எப்படி?

அலாரம் வைப்பதற்கான கட்டளையை உங்கள் குரல் மூலமாக மிக எளிமையாக அலெக்ஸ்சாவிற்கு தெரியப்படுத்தலாம். உதாரணத்திற்கு

“Alexa, set an alarm for [time] to [song]”

இதுபோன்றதொரு கட்டளையை நீங்கள் அலெக்ஸ்சாவிற்கு தரும் பட்சத்தில், அது நீங்கள் சொன்ன நேரத்தில், உங்கள் விருப்ப பாடலில் உங்களைத் துயில் எழுப்பும்.

அலுவலக சூழலுக்கும் அலெக்ஸ்சா

அமேசானின் இந்தத் தொழில்நுட்பம் இதுவரை வீட்டு உபயோகத்திற்கும், வீட்டிலிருக்கும் பொருட்களை குரல் மூலம் கட்டுப்படுத்துவதற்குமே பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. மிகச் சமீபத்தில் அமேசான் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் அலெக்ஸ்சாவை இனி அலுவலக சூழலிலும் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அலுவலகத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, கூட்டு அழைப்புகள் மேற்கொள்வது, முக்கியமான நாட்களைக் குறித்து வைத்துக்கொள்வது போன்ற அலுவல்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் நம்மை தேவையற்றவர்களாக ஆக்காத வரைக்கும் அதை அனுபவிப்போம்.

 

Related Articles

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்! ... இயக்குனர் மணி ரத்னம் மற்றும் இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து லக்ஷ்மி, மா என்று இரண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவன...
பள்ளிப்பருவத்தில் வருவது காதலா? வெறும் இ... 96 (Tamil Movie) IMBD Rating - 9.4/10இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரு...
பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத,... இயக்குனர் ராம் பத்திரிக்கையாளர் ஜெயராணி கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஜோதிமணி இசை தமிழ்நதி ஆதவன் தீட்சண்யா தமயந்தி ஜி. ...
வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை மிஞ்சிய... கபடி உருவான கதையில் ஜல்லிக்கட்டுக்காக உருவான கபடி, 32 நாடுகளில் விளையாடாப்படும் கபடி பற்றி தகவல்கள் சொல்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் தகவல்கள் சுருக்க...

Be the first to comment on "வீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் அமேசானை உங்களுக்குத் தெரியும், தூங்குபவர்களை அலாரம் வைத்து எழுப்பிவிடும் அமேசானை உங்களுக்குத் தெரியுமா?"

Leave a comment

Your email address will not be published.


*