வைரமுத்துவுக்கு எதிரான விமர்சனங்களில் வரம்பு மீறிய வார்த்தைகள்! வைரமுத்து பேசியதில் தவறு இருப்பதுபோல் தெரியவில்லை! – உயர்நீதிமன்றம்!

ஆண்டாள் பற்றி கவிப்பேரரசு வைரமுத்துவின் பேச்சை எதிர்த்து வரும் விமர்சனங்களில் வார்த்தைகள் வரம்பு மீறிச் செல்கிறது. இந்த வரம்பு மீறும் வார்த்தைகள் ஏற்கனவே வன்முறை பூமியாக விளங்கும் தமிழகத்தில் மேலும் வன்முறையை தூண்டும் அரசியல் நோக்கமாகவே இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டாளைப் பற்றி வைரமுத்து உரையாற்றியிருந்தார். அவர் ஆண்டாளை பெருமைப்படுத்தும் நோக்கில் ஒரு வார்த்தையை உபயோகப்படுத்தியிருந்தாலும், அதை வேறுவிதமாக புரிந்துகொண்ட சிலர், வைரமுத்துவுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவித்து அவர் பேசிய வீடியோவை வைரலாக்கினர். தன்னுடைய வார்த்தை மற்றவர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று அடுத்த சில நாட்களில் அவர் பதிலளித்திருந்தாலும், ஒரு சிலர் அதை விடுவதாயில்லை.

சின்ன பிரச்சினையை பெரியதாக்கும் “வார்த்தைகள்”

அந்த ஒரு சிலரில் முதன்மையானவர் எச்.ராஜா. வைரமுத்துவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, இந்த பிரச்சினையை பூதாகரமாக மாற்றிய பெருமை அவருக்கே சேரும்.  அதையடுத்து பாரதிராஜா, வைரமுத்துவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார். உடனே, வைரமுத்து மீது இருந்த அவர்களுடைய கோபம், பாரதிராஜா மீதும் தாவியது. எஸ்.வி.சேகர், பாரதிராஜாவை கீண்டலடித்து பேசி, மேலும் இந்த பிரச்சினையை வலுவாக்கினார். அடுத்தது தமிழிசையும் தன் பங்குக்கு வேலை பார்க்க, இதற்கு மேல் சொல்லவா வேண்டும். இது போதாதென்று, “வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்” என்றும், “இந்து மதத்தை பற்றி யார் தவறாக பேசினாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் ” என்றும் நயினார் நாகேந்திரன் பேச, பிரச்சினை உச்சகட்டத்திற்கு சென்றது. இதையடுத்து, வைரமுத்து நேரில் வந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று உண்ணாவிரதம் தொடங்கிய சிலர் என்ன நினைத்தார்களோ போராட்டத்தை பாதியில் முடித்துக்கொண்டனர். இவர்கள்  போராட்டத்தை முடித்துக்கொண்டனர் என்பதால் இந்த பிரச்சினை இதோடு முடிந்தது என்று நினைத்தால் விடமாட்டோம் என்று சில வீடியோ பதிவுகள் மேலும் மேலும் இந்த பிரச்சினையை தீவிரமாக்கிக் கொண்டே போகிறது.

அதில் குறிப்பிடத்தக்க இரண்டு வீடியோக்கள் பற்றி…

முதலில் நித்யானந்தா ஆசிரமத்தை சார்ந்த பெண்கள் சிலர் வெளியிட்ட வீடியோவை பற்றி பார்ப்போம். அந்த வீடியோவில் இளம்பருவத்தினர். அவர்கள் வைரமுத்துவின் தரக்குறைவான பேச்சுக்கு எதிராக, தங்களுடைய கருத்தைப் பதிவு செய்கிறேன் என்ற பெயரில் முகம் சுளிக்கும் படியான சில வார்த்தைகளை பயன்படுத்தி தங்களை தாங்களே தரம் தாழ்த்திக்கொண்டனர். துறவு மேற்கொண்ட பெண்களின் கையில் விலையுயர்ந்த செல்போன், பேஸ்புக் லைவ்வில் முறையற்ற வார்த்தைகள் என்று தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்ளும் இந்த பெண்கள் யார்? இவர்களின் நிலை என்ன? குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், மனித உரிமை ஆணையம் இவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறதா? துறவு மேற்கொள்வது தனிப்பட்ட விருப்பம் என்றாலும் அவர்களின் நிலை துறவு மேற்கொள்வது போல் இல்லை. துறவு என்கிற பெயரில் சிலருக்கு அடிமை வேலை செய்பவர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள், இதை எதிர்த்து வழக்கு தொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவிக்க, மற்ற சிலரோ அவர்கள் முறையற்ற வார்த்தைகள் பயன்படுத்தினாலும் சுதந்திர மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று அந்த பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது போன்ற சீரியசான பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க, “இந்த ஆசிரமம் எங்க இருக்குன்னு சொல்லுங்கடா நான் சாமியாரா போய் லைஃப்ப என்ஜாய் பண்றேன்” என்று நெட்டிசன்கள் வழக்கம் போல வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.

அடுத்த வீடியோவில் பெரிய மனிதர் ஒருவர். இதற்கு முன் குறிப்பிட்ட வீடியோவிலாவது பக்குவம் இல்லாத சில பெண்கள் தான் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினர். ஆனால் இந்த வீடியோவிலோ, பார்ப்பதற்கு பெரிய மனிதராகவும் நாகரிகம் தெரிந்தராகவும் இருந்தவர், பாரதியார் பாடலை பாடத் தொடங்கினார். இவர் கொஞ்சம் தெளிந்தவர் போல என்ற எண்ணம் தோன்றுவதற்குள் சகட்டுமேனிக்கு வார்த்தைகளை அள்ளி இறைக்கத் தொடங்கிவிட்டார். இது அத்தனையும் அந்த பக்குவமில்லாத பெண்கள் பேசிய வார்த்தைகளைவிட மிக கொச்சையான சொற்கள். அவர் எதற்காக இது போன்ற தகாத வார்த்தைகளை பேசுவதற்கு முன் பாரதியார் பாடலை பாடினார் என்பது யாருக்கும் புரியவில்லை. எங்கெங்கு பாரதியார் பாடலை உபயோகிக்க வேண்டும் என்ற இங்கிதம் தெரியாமல் போய்விட்டது. முதலில் லட்சுமி குறும்படம்! இப்போது ஆண்டாள் விவகாரமா? என்று இந்த வீடியோவிற்கும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

வைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா, சீமான்!

வைரமுத்துவின் நாக்கை வெட்டுவியா, எங்கள மீண்டும் ஆயுதம் எடுக்க வச்சிராத, மறுபடியும் எங்கள குற்றம்பரம்பரை ஆக்காத என்று பாரதிராஜா உணர்ச்சிமிக்க பேசியுள்ளார். ஒரு பெரிய மனிதர் இப்படியா பேசுவது, வன்முறையை தூண்டும் வகையில் கத்தி எடுப்பேன் என்று பேசுகிறாரே என்று பாரதிராஜாவுக்கும் விமர்சனம் எழுந்து வருகிறது. இதையடுத்து, சீமானும் களத்தில் இறங்க, உடனே வைரமுத்துவின் மதத்தை உள்ளே இழுத்து வந்துவிட்டார்கள். வைரமுத்து கிறித்துவ மதத்தை சார்ந்தவர், இந்து மதத்தை கொச்சைப் படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆண்டாளை தரக்குறைவாக பேசியுள்ளார் என்று மீண்டும் இந்தப் பிரச்சினை அணையா நெருப்பாக எரிந்து கொண்டே இருக்கிறது.

எங்கு தொடங்கிய பிரச்சினை எதோடு முடிச்சு போட்டு எப்படி வந்து நிற்கிறது பாருங்கள், மொத்ததில் தமிழகம் கலவர பூமியாகவே இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவதால் தான் இத்தனை பிரச்சினையும், என்று பலரும் வருந்துகின்றனர்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் காரணம் இந்த வார்த்தை உபயோகம் தான். இடம், பொருள், ஏவல் பார்த்து பேச வேண்டும் என்பது பலருக்கு புரியாமல் இருப்பதால் தான் இத்தனை பிரச்சினையும்.

நாம் யார் என்பதை நாம் உபயோகிக்கும் வார்த்தைகள் சொல்லிவிடும் என்பதை இன்றைக்கு இருக்கும் இந்த பரபரப்பான சமூகம் உணர வேண்டும்!

குறிப்பாக, பேஸ்புக்கில் லைவ் போடும் உணர்ச்சிகர போராளிகளே, நீங்கள் நாவை சுழற்றுவதற்கு முன், “யாகவா ராயினும் நாகாக்க” என்ற வள்ளுவனின் வாக்கை நினைவில் கொள்ளுங்கள். ஏற்கனவே நம்மைப் பார்த்து அண்டை மாநிலங்கள் சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீங்கள் வேறு பேஸ்புக் லைவ் மூலமாக மானத்தை வாங்காதீர்கள்! இப்போது உயர்நீதிமன்றமும் வைரமுத்து பேசியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளது. இனியும் இந்த விஷியத்தை மேலும் பெரிதாக்க நினைப்பவர்கள் முட்டாள்களே!

Related Articles

பெண்களுக்கு ஸ்கூட்டி எவ்வளவு முக்கியத்து...  அந்த காலகட்டங்களில் சைக்கிள் வைத்திருப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.  அப்படி பட்ட காலத்தில் ஆண்கள் தான் பெரும்பாலும் சைக்கி...
பற்றி எரிவது பெற்ற தாயாக இருந்தாலும் வீட... செல்போன் ஆடம்பரம் என்று சொன்ன அதே படத்தில் செல்ஃபி புள்ள என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். செல்போன் தேவை ஆனால் அதன் பயன்பாடு முறையாக இருக்க வேண்டும் என்ப...
சோத்துக்கே வழி இல்லாத பசங்களாம் சோஷிலிசம... நாமெல்லாம் பாதைங்கறது போறதுக்கும் வர்றதுக்கும் உள்ள வழின்னு நினைச்சுட்டு இருக்கோம்... ஆனா இங்க ஒவ்வொரு பாதைக்கு பின்னாலயும் ஒரு வரலாறு இருக்கு......
1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் சிலை... 1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலைகள் மீட...

Be the first to comment on "வைரமுத்துவுக்கு எதிரான விமர்சனங்களில் வரம்பு மீறிய வார்த்தைகள்! வைரமுத்து பேசியதில் தவறு இருப்பதுபோல் தெரியவில்லை! – உயர்நீதிமன்றம்!"

Leave a comment

Your email address will not be published.


*