இந்தி டிவி சீரியல், இந்திப் படங்கள், மணிரத்னம் படங்கள், கமல், சீமானுடன் படங்கள் என்று
படிப்படியாக உயர்ந்த நடிகர் மாதவன் இந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத முக்கிய நபர்.
அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், தம்பி, இறுதிச்சுற்று, த்ரி இடியட்ஸ் என்று அவர் பெயர் சொல்லும் படங்கள் பல.
அப்படிப்பட்ட மாதவனின் மகன் வேதாந்த். திடீரென்று மாதவனின் மகனைப் பற்றி பேசுவதற்கு
காரணம் அவர் இந்தியாவிற்காக சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
இவர் ஏன் நல்ல அப்பா?
டாக்டர் பையன் டாக்டராக தான் ஆக வேண்டும். ஆசிரியர் பையன் ஆசிரியராக தான் ஆக வேண்டும். கலெக்டர் பையன் கலெக்டராக தான் ஆக வேண்டும். இதே போல ஒரு கூலியின் பையன் கூலியாக தான் ஆக வேண்டும் என்று இந்த சமூக கட்டமைப்பு தவறான விஷியத்தை கட்டிக்கொண்டு கெட்டுக் குட்டிச்சுவராகி கிடக்கிறது. இவர்கள் வரிசையில் சினிமா நடிகர்கள் விதிவிலக்கல்ல.
விஜய், தனுஷ், சாந்தனு போன்றோர் இயக்குனர்களின் மகன்கள். சிபிராஜ், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் நடிகர்களின் மகன்கள். ரஜினி, கமலின் மகள்கள் இயக்குநர்களாக, இசையமைப்பாளர்களாக உள்ளார்கள்.
இப்படி சினிமாவில் அப்பாக்களின் புகழை அடையாள அட்டையாக வைத்துக்கொண்டு சினிமாவில் சாதித்தவர்கள். இவர்களைப் போலவே இன்னும் பலர் தங்களது பெற்றோரின் புகழை
வைத்து சினிமாவில் இடத்தைப் பிடித்துள்ளார்கள். அவர்களில் பாதி பேருக்கும் மேல் நடிக்கத்
தெரியாமல் பணக்கார திமிருடன் சுற்றித்திரிந்து, ரசிகர்களின் உயிரை வாங்கி கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஒருபுறமிருக்க அரசியலிலும் இதே போல தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.
அப்பா அரசியல்வாதியாக இருக்கிறார் என்பதால் பாமர மக்களின் வலி தெரியாமல் தமிழகத்தின் வரலாறு தெரியாமல் என் புருசனும் கச்சேரிக்கு போனான் என்ற கணக்கில் இம்சைககள் செய்து வருகிறார்கள்.
இவர்களிடமிருந்து நடிகர் மாதவன் முற்றிலும் மாறுபட்டு உள்ளார். அவர் நினைத்திருந்தால்
தனக்கு இருக்கும் புகழை வைத்து, இயக்குனர் மணிரத்னத்திடம் பேசி அவருடைய இயக்கத்தில்
நாயகனாக அறிமுகம் செய்திருக்கலாம்.
ஆனால் அவர் அப்படி செய்யாமல் தனது மகனுக்கு உண்மையிலயே எதில் ஆர்வம் என்பதை கண்டறிந்து முறையாக ஊக்குவித்து தனது மகனை பெரிய உயரத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.
த்ரி இடியட்ஸ் படத்தின் மையக்கதையே ” உனக்கு பிடித்ததை செய்” என்பதுதான். அதற்கேற்றார்
போலவே தனது மகனை வளர்த்துள்ளார். இனிமேலாச்சும் அப்பா போன பாதையிலயே போகாமல் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அந்தப் பாதையில் செல்லுங்கள்.
Be the first to comment on "அப்பான்னா இப்படி இருக்கணும்! – சாதித்த நடிகர் மாதவன் மகன்!"