Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது BSNL!

BSNL Internet Calling through Wings App

இந்தியாவிலயே முதன் முறையாக இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது பிஎஸ்என்எல்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விங்க்ஸ் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு இந்தியாவின் எந்த ஒரு தொலைபேசி எண்ணுக்கும் அலைபேசி எண்ணுக்கும் இணைய தொலைபேசி வசதியை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை விங்ஸ் செயலி மூலம் யார் விங்ஸ் செயலியை வைத்திருக்கிறார்களோ அவர்களுடன் மட்டுமே பேச முடியும் என்ற நிலை பிஎஸ்என்எல் பயனாளர்களுக்கு இருந்து வந்தது.

தற்போது விங்ஸ் செயலி மூலம் எந்தவொரு தொலைபேசி எண்ணுக்கும் அலைபேசி எண்ணுக்கும் பேச முடியும் என்ற கூடுதல் வசதியை நாட்டிலியே முதல் முறையாக ஏற்படுத்தி தந்து இருக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

இதனை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்கா தொடங்கி வைத்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக முன்பதிவினை இந்த வாரம் தொடங்கி உள்ளது பிஎஸ்என்எல். பதிவு  செய்தவர்களுக்கு வரும் இருபத்தி ஐந்தாம் தேதி முதல் இணைய வழி தொலைபேசி சேவை தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளது பிஎஸ்என்எல்.

Related Articles

தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6 .4 என்று பதிவாகி இருக்கும் நில நடுக்கம் தைவானில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு தைவானின் சுற்றுலா நகரமான ஹுவாலியனை இந...
சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?... நாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத...
டெல்லியில் ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் பா... டெல்லி காவல்துறையின் தரவுகளின் படி, 2018 ஆம் ஆண்டின் முதல் 3.5 மாதங்களில் ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார...
உலகிலயே மிகப்பெரிய செல்போன் ஃபேக்ட்ரியை ... உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உலகிலயே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க இருக்கிறது சாம்சங் கம்பெனி.சாம்சங் நிறுவனத்தி...

Be the first to comment on "Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது BSNL!"

Leave a comment

Your email address will not be published.


*