இந்தியாவில் பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்தானுக்கு உதவும் சீனா

bunker

குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் நிரந்தர பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்துவருகிறது. இந்தியாவை எரிச்சலூட்டச் செய்யும் இந்நிகழ்வை ஆஜ் தக் என்ற இந்தி செய்தி நிறுவனம் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

கண்டுபிடிப்பது கடினம்

சீனா உதவியுடன் ஏற்கனவே 350 பதுங்குகுழிகள் இந்திய எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கண்களுக்குத் தெளிவில்லாத கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்தக் கட்டமைப்புகள் கண்டுபிடிப்பதற்கு மிகவும் கடினமானவை என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றிய உளவுத்துறை தகவலை கேள்விப்பட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் இடங்களுக்கு மூன்றுமுறை நேரில் சென்றுபார்த்து பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்துள்ளார்.

எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்

பாகிஸ்தான் ஏற்கனவே பாதுகாப்பு கால்வாய்கள் மற்றும் சாலை போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகிய கட்டுமான பணிகளை உள்நோக்கத்துடன் மேற்கொண்டு வருகிறது. தூதரக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ள சீனா மற்றும் பாகிஸ்தான் தங்களை எல்லாக் காலத்திற்குமான நண்பர்கள் என்று அறிவித்துக்கொண்டுள்ளன. இந்திய எல்லையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்களுடன் கணிசமான அளவுக்குச் சீன வீரர்களும் கலந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு அருகில் சீனா விமான நிலையங்களைக் கட்டி வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் இரண்டு விமான நிலையங்கள் கட்டப்பட்டு விட்டதாகவும், மேலும் இரண்டு கட்டப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விமானத்தளம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் ஒரு விமானத்தளம் இந்திய எல்லையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் கட்டி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் எதிர்வினை

சீனாவின் இந்த அத்துமீறல்களை எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் விதத்தில் துறைமுகங்கள், ரயில்வே மற்றும் மின் நிலையங்களை நேபாளம், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கட்டி வருகிறது.

சீனா-பாகிஸ்தான் நடைபாதையில் ரயில் தடங்கள் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டு வருகின்றது. இந்தியாவுடனான ஒரு கூட்டத்தில், சீனாவைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் நன்மைக்காகவே விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் மற்றும் கடல் வழியாக ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களை இணைக்கும் சீனாவின் ஒரு சாலை திட்டத்தின் மீது இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சட்ட விரோதமாகவும், இறையாண்மைக்கு எதிராகவும் ஆக்கிரமித்துக்கொண்ட கில்ஜித் – பலுசிஸ்தான் வழியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த முனைவதை எதிர்த்து பெய்ஜிங்கில் அறுபது நாடுகள் பங்கேற்ற மிகப் பெரிய கூட்டத்தை இந்தியா புறக்கணித்தது.

சீனா இராணுவ வீரர்கள் அடிக்கடி ராஜஸ்தான் மாநில எல்லையில் தென்படுவதாக உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மேலும் சீனா இராணுவ வீரர்கள் பாகிஸ்தானின் பல்வேறு விமான தளங்களை மேம்படுத்தித் தரும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் பூட்டான், சிக்கிம் மற்றும் திபெத் இடையேயான மூன்று வழி சந்திப்பு சர்ச்சை உள்ளிட்ட பல காரணங்களால் இந்திய சீனா உறவு சரிந்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையிலுள்ள பங்காளி சண்டையைப் பயன்படுத்தி சீனா நன்றாகக் குளிர் காய்கிறது.

 

 

 

Related Articles

ஜெயகாந்தனிடம் பத்து கேள்விகள்!... எழுத்து துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் வரவில்லை. எங்கோ போய்க்கொண்டிருந்த வழியில் எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதி பத்தி...
பூமிகா திரைவிமர்சனம் – பூமிய மனுசங... இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பூமிகா.  நேரடி ஓடிடி ரிலீசாக இந்த படம் வெளியாகியுள்ளது. ஒ...
பிரபல யூடியூப் சேனல்கள் வைக்கும் தலைப்பை... கடந்த  நான்கு வருடங்களாக தான் இந்த யூடியூப் உலகம் இவ்வளவு பிரபலமாக இருக்கிறது.  அப்போது முதல் இப்போது வரை ஒரே ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை.  அது என்...
ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருக்கும் ... முதலில் இந்த படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். இவர் கலைஞர் டிவியில் நடைபெறும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்பாளரா...

Be the first to comment on "இந்தியாவில் பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்தானுக்கு உதவும் சீனா"

Leave a comment

Your email address will not be published.


*