புர்ஜ் கலிபா பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க! 

கடந்த சில தினங்களுக்கு முன்பு யதர்ச்சையாக குறும்படம் ஒன்றை பார்க்க முடிந்தது. அந்த குறும்படத்தில் மீம் கிரியேட்டர் ஒருவர் இண்டர்வியூக்கு செல்வார். அவரிடம் புர்ஜ் கலிபா பற்றி கேட்பார்கள். ஆனால் அந்த இளைஞருக்கோ மியா கலிஃபா மட்டுமே தெரிந்திருக்கும். அந்த மாதிரி இல்லாமல் நாமும் இந்த புர்ஜ் கலிபா பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வோம். 

  1. உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் ம்துபாயில் உள்ள  புர்ஜ் கலிஃபா 828 மீட்டர் உயரம் கொண்டது. இந்த கட்டிடத்தில் சமீபத்தில் வெளியான நவரசா திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒளிபரப்பானது. அதில் விஜய் சேதுபதி போஸ்டரும் வந்தது. துபாயில் ஒரு காலத்தில் ஊழியராக வேலை பார்த்தார். இன்று அதே துபாயில் உள்ள மிகப் பெரிய கட்டிடத்தில் விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒளிபரப்பாகி உள்ளது என்று அவருடைய ரசிகர்கள் சிலாகித்தனர். இதுபோல அதிக அளவில் மிக உயரமான கட்டிடங்கள் எல்லாம் துபாயீல் தான் உள்ளன. புர்ஜ் கலீபா கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற கின்னஸ் சாதனையை அடைந்துள்ளது. 
  2. துபாயில் உள்ள இந்த கட்டிடத்தில் மொத்தம் 160 மாடிகள் உள்ளன. அதில் உள்ள 122வது மாடியில் ஓட்டல் அமைந்துள்ளது. இதில் இவ்வளவு மாடிகள் இருந்தாலும் 125 வது மாடி வரை தான் சாதாரண மனிதர்கள் அல்லது பார்வையாளர்கள் அனுமதிக்க படுகிறார்கள். 
  3. உலகின் மிக உயரமான கட்டிடத்தை 95 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே பார்க்க முடியும். இவ்வளவு பெரிய கட்டிடத்தை கட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் கட்டுமான பணியில் தினம்தோறும் 12 ஆயிரம் தொழிலாளிகள் பணி ஆற்றினர். இவ்வளவு கட்டுமான தொழிலாளர்கள் கலந்துகொண்ட போதிலும் இந்த கட்டிடத்தை 2004 ஆண்டில் கட்ட தொடங்கி ஆறு ஆண்டுகளாகி 2010ம் ஆண்டில் முடிவுபெற்றது. 
  4. இவ்வளவு உயரமான இந்த கட்டிடத்தில் உள்ள லிப்ட் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க கூடிய திறன் பெற்றது. ஒரு நொடிக்கு இரண்டு ப்ளோர்கள் என்பது அதன் வேகம். அதேபோல இந்த கட்டிடத்தில் உள்ள பெரிய பெரிய கண்ணாடி ஜன்னல்களை முழுவதுமாக ஒருவர் கிளீன் செய்ய மூன்று மாதங்கள் வரை ஆகும் என்று சொல்கிறார்கள். அதேபோல இந்த கட்டிடத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் இதைவிட உயரமான கட்டிடத்தை இப்போது ஜாத்தா நகரில் கட்டி வருகிறார்கள். 
  5. தரைப்பகுதியில் உள்ள வெப்பநிலையை விட புர்ஜ் கலிபாவின் உச்சியில் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்குமாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தக் கட்டிடத்தை பார்க்க வேண்டுமென்றில் முன் கூட்டியே 3500 ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் பார்வையாளர்கள் அங்கு செல்லலாம். முதலில் உங்களை லிப்ட்டில் நுழைத்து 125 மாடிக்கு அழைத்து செல்வார்கள். 

Related Articles

கூலி தொழிலாளியின் மகன் சினிமா துறையில் இ... பெரிய பெரிய தொழிலதிபர்களின் மகன்கள், மகள்கள் கைப்பிடியில் இருக்கிறது சினிமா துறை. கூலி தொழிலாளிகளுக்கு மகனாகப் பிறந்தவனும் வீட்டிற்கு ஒரே ஒரு பையனாக இ...
பாண்டிச்சேரி கடற்கரையில் கதறி அழுத மைக்ச... துப்பாக்கி முனை படத்தில் ஆஷாத் என்னும் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார் ஆர்ஜே ஷா.  இவரைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.  யூடியூப்  ...
ஓட்டு போடாதவர்களும் நோட்டாவுக்கு ஓட்டு ப... கவுண்டமணி தான் ஹீரோவாக நடித்த 490 படத்தில், நோட்டாவுக்கு ஓட்டு போடுபவர்கள், ஓட்டே போடாமல் இருப்பவர்கள், இந்திய தேசம் சாமானிய மக்கள் வாழ்வதற்கான தேசம் ...
நம் நாடு உருப்படாமல் இருப்பதற்கு இடஒதுக்... சாலைகளில் ஜாதிச்சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் நம் சமூகம் இப்போது சமூக வலைதளங்களில் கூட அந்த வேலையைத்தான் செய்துகொண்டு இருக்கிறது.ஒவ்வொரு ஜாதிக்கு...

Be the first to comment on "புர்ஜ் கலிபா பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க! "

Leave a comment

Your email address will not be published.


*