சர்கார் சந்தித்த பிரச்சினை என்னென்ன என்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் அதன் ரிலீஸ்
தேதியில் சில குழப்பங்கள் எழுந்துள்ளது. நவம்பர் 2ம் தேதி ரிலீஸ் ஆனால் படம் நல்ல வசூல்
அள்ளும் என்று ரசிகர்களே அந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என வேண்டுகோள்
வைக்க தொடங்கி உள்ளனர். நவம்பர்2 ம் தேதி வெளியானால் நவம்பர் 6ம் தேதி வெளியாக
இருக்கும் திமிரு பிடிச்சவன் படத்தால் சில தியேட்டர்கள் இழக்க நேரிடும் என்பதால் சன் பிக்சர்ஸ்
குழப்பத்திலே இருந்தது. இந்நிலையில் திமிரு பிடிச்சவன் படம் பின் வாங்கிவிட்டது. ஆதலால்
சர்கார் ரிலீஸ் தேதியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பிரச்சினை ஒருபுறம் இருக்க சர்கார் படம் யாருக்கு சமர்ப்பணம் என்ற கேள்வியும் விஜய்
ரசிகர்களிடம் எழுந்துள்ளது. வழக்கமாக ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் குறிப்பிட்ட மக்களுக்கு
சமர்ப்பணம் செய்யப்படுவதாக இருக்கும்.
ஏழாம் அறிவு படம் உலகத் தமிழர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. துப்பாக்கி படம்
இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. கத்தி படம் விவசாயிகளுக்கு சமர்ப்பணம்
செய்யப்பட்டது. இந்நிலையில் சர்கார் படம் யாருக்கு சமர்ப்பணம்? என்ற கேள்வியும்
எழுந்துள்ளது.
ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொள்வது தான் புத்திசாலித் தனம் என்று நினைக்கும் செம்மறி
ஆடுகளுக்கு மத்தியில் ஓட்டுக்குப் பணம் வாங்காத சில நேர்மையான மனிதர்களும்
இருக்கிறார்கள். அந்த வகையில் சர்கார் படம் ஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான
வாக்காளர்களுக்கு சமர்ப்பணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே சமயம் இந்தப் படம் மிகப் பெரிய ஆளுமையை எதிர்க்கும் தனிமனிதப் போராளிகளுக்கு
சமர்ப்பணமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. காரணம் சேலம் எட்டுவழிச்சாலை
திட்டத்திற்கு எதிராகப் போராடிய தனிமனிதப் போராளி யான பரவலாக அறியப்பட்ட சமூக
ஆர்வலர் பியூஷ் மனுஷ் இந்தப் படத்தில் நடித்து உள்ளார். அதே போல் நீட் தேர்வுக்கு எதிராகவும்
மாணவிகள் அனிதாவுக்கும் மாணவி ராஜலட்சுமிக்கும் நீதி கேட்டு போராடும் சமூக ஆர்வலர்
சபரிமாலாவும் இந்தப் படத்தில் நடித்து உள்ளார்.
சமீபத்தில் விஜய்யின் அப்பா சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றுப்
படத்தில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல சர்கார் படத்திலும்
வெளிநாட்டில் இருந்து திரும்பும் விஜய் தனக்கு நேர்ந்த அவமானத்தால் தனிமனிதப்
போராளியாக மாறி பின் மக்களை தன் பக்கம் திருப்பி தனக்கென சர்கார் உருவாக்குகிறார். ஆக
இந்தப் படம் தனிமனிதப் போராளிகளுக்கு சமர்ப்பணம் என்று கூறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
Be the first to comment on "ஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான குடிமகன்களுக்கு சமர்ப்பணமா சர்கார்?"