லிஸ்ட் – பேஸ்புக்கின் புதிய அம்சம்

லிஸ்ட் - பேஸ்புக்கின் புதிய அம்சம்

புதிய பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டவும், ஏற்கனவே இருக்கும் பயனாளிகளை தக்கவைத்துக் கொள்ளவும் பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை நிறைய மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்காவில் குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் தரமற்ற பின்னூட்டங்களுக்கு டவுன்வோட் என்ற வசதியைச் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்து பார்த்தது. தற்போது லிஸ்ட் என்ற புதிய அம்சத்தை பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ளது.

தற்போது பேஸ்புக் கருத்து பெட்டியில் பரிந்துரைகள், கேள்விகள் கேட்கும் வசதி, கருத்துக் கணிப்புகள் நடத்தும் வசதி மற்றும் ஸ்டிக்கர், நிழற்படம் மற்றும் காணொளிகள் இணைக்கும் வசதி போன்ற பலவேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தரமான கருத்துக்களை, உள்ளடக்கத்தைப் பயனாளிகள் பதியும் விதமாக தற்போது லிஸ்ட் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உங்கள் கருத்துகளை தொகுத்து பட்டியலாக பதிவிட முடியும்.

சில உதாரணங்கள்

1 ) நீங்கள் வாங்க வேண்டிய பொருட்கள்

2 ) புத்தாண்டில் நீங்கள் மேற்கொண்ட தீர்மானங்கள்

3 ) நீங்கள் பார்க்கவேண்டிய இடங்கள்

போன்றவற்றை இனி பட்டியலாக தயாரித்து பேஸ்புக்கில் ஒரு பதிவாக பதிவிடலாம். குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் பேஸ்புக் நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்த வசதி உலகம் முழுக்க இருக்கும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அமெரிக்காவில் உள்ள இருபத்து ஐந்து வயதிற்கும் குறைவான 2 . 8 மில்லியன் பயனாளிகளை 2017 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் இழந்துள்ளது. இந்த ஆண்டு ( 2018 ) 2 . 1 பயனாளிகளை அந்த நிறுவனம் இழக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அதைத் தடுக்கும் விதத்தில் பேஸ்புக் நிறுவனம் இன்னும் நிறைய மேம்படுத்தல்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்க... தின இந்து நாளிதழலில் தொடராக வந்த கடவுளின் நாக்கு கதைகளின் தாயகம், மனிதன் நல்லவனா?, அன்பின் அடையாளம், காட்டின் அரசன்!,சிலந்திப் பெண்!, கண் திறவுங்கள், ...
ரொட்டி சாப்பிட்டுருப்பீங்க, ரோபோ கையால ச... இந்தியாவிலேயே முதல் முறையாக ரோபோக்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் வகையில் ஒரு உணவகம் வடிவகைப்பட்டுள்ளது. மொமொ (Momo) என்று பெயரிடப்பட்டுள்...
ஆர் ஜே பாலாஜி பற்றிய 10 தகவல்கள்!... இயற்பெயர் பாலாஜி பட்டுராஜ். இவருடைய பெற்றோர்கள் ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர்கள். பிறப்பு ஜூன் 20, 1985. உடன் பிறந்த சகோதரி(தங்கை) ஒருவர் இருக்கி...
இவருடைய கமெண்டுகளை கேட்க ஒரு கூட்டமே இரு... இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் நலன் குமாராசாமி, இயக்குனர் பாலாஜி மோகன், இயக்குனர் நித்திலன், இயக்குனர் ஸ்ரீகணேஷ் என்று தமிழ் சினிமாவுக்கு ...

Be the first to comment on "லிஸ்ட் – பேஸ்புக்கின் புதிய அம்சம்"

Leave a comment

Your email address will not be published.


*