பேராண்மை – அரசு பணியும் ஆதி திராவிடர்கள் மீதான ஆதிக்கமும்!

Government job and Dominance over Adi Dravidians!

ஆதி திராவிடரும் அரசு வேலையும் என்ற தலைப்பில் தான் இந்தக் கட்டுரையை எழுத நினைத்தேன். பிறகு ஏனோ மாற்ற தோன்றியது. மாற்றிவிட்டேன். பேராண்மை படத்தில் அரசு வேலையில் இருக்கும் ஆதிதிராவிடர்களை உயர் அதிகாரிகள் எவ்வளவு மட்டம்தட்டி நடத்துகிறார்கள் என்பதை தெளிவாக காட்டி இருப்பார்கள். 

அப்படி ஆதிதிராவிட அரசு அதிகாரி துருவனை அவரது மேலதிகாரியும் துருவனிடம் பயிற்சி எடுக்க வந்த  ஐந்து பணக்கார பெண்களும் எப்படி மட்டம் தட்டி பேசுகிறார்கள் என்பதை விளக்கும் வசனங்கள் கீழே உள்ளன. 

“இங்க பாருங்கடி காட்டுமிராண்டிங்க கூட்டம்… நீங்க எப்பவுமே இப்படித்தான் ட்ரெஸ் பண்ணுவிங்களா… இவிங்களாம் காட்டுவாசிங்க சாதாரண மனுசங்க இல்ல… ஆமா நீங்களாம் மனுசங்கள திங்கற காட்டு வாசிங்க தான…”

“மாட்டுக்கார பயல போயி நம்ம தலைல டிரெயினரா கட்டுறாரு…” 

” இந்தியா இன்னும் எப்படி இருக்குங்கறத இவரையும் இவருடைய கிராமத்தையும் பாத்தாலே தெரிஞ்சிருக்கும்… படிப்பறிவே இல்லாம இன்னும் காட்டுமிராண்டியா வாழுறங்க ஜனங்க கிட்ட இருந்து இவரு ஒருத்தரு மேல வந்துருக்காரு… ரிசர்வேசன் கோட்டாவுல கிடைச்ச சீட்டுல வெறும் காராவிளக்குல படிச்சு மேல வந்துருக்காரு…”

“எங்களுக்கு டிரெயினராக வருவுதற்கு துருவனுக்கு தகுதி இருப்பதாக தெரியவில்லை… 

– தகுதி இல்லைனு எப்படி சொல்ல முடியும்… – அவன் சாதி என்ன நம்ம சாதி என்ன… அவன்லாம் எனக்கு டிரெயின் பண்ண கூடாது… ஏனா எனக்கு தெரியும் இந்தியாவோட பாரம்பரிய பெருமை…” 

“துருவா… இந்த மாதிரி லெட்டர் இன்னொன்னு பாக்ஸ்குள்ள விழூந்துது அத வச்சுக்கிட்டு நான் உன்ன என்ன வேணாலும் பண்ண முடியும்… அதுக்கப்புறம் இந்த அரசாங்க தொப்பி பெல்ட்டு எதுவுமே நீ போட முடியாது… – நீங்களும் தெரிஞ்சுக்குங்க… இந்த மாதிரி இடத்துல இருந்து வர்றவங்க காட்டுமிராண்டி தனமா தான் இருப்பாங்க… – நீ கொஞ்சம் வெளிய இருப்பா… துருவா போகும்போது சக்கரை இல்லாத காபி ஒன்னு சொல்லிட்டு போ…”

“துருவா… இந்தா இந்த ஷூவ கொடுத்து பாலிஷ் போட்டு எடுத்துக்கிட்டு வா… நீ கிட்ட இருந்து வாங்கிட்டு வாப்பா…”

“உனக்கு டூ டேய்ஸ் டைம் தரேன்… அதுக்குள்ள துப்பாக்கி கிடைக்கல உன்ன சஸ்பெண்ட் பண்ணுவேன்… அப்புறமும் கிடைக்கல தீவிரவாதிட்ட வித்துட்டனு சொல்லி வேலைய விட்டே தூக்கிடுவேன்…”

இந்த திமிருக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் வடிவேலு பேசும் வசனம் இது. 

“செருப்பு தைக்கறவன் புள்ள செருப்பு தான் தைக்கனுமா… துணி துவைக்கறவன் புள்ள துணிய தான் துவைக்கனுமா… முடி வெட்றவன் புள்ள முடிய தான் வெட்டனுமா… பழங்குடி மக்கள்ல ஒருத்தன் பெரிய அதிகாரி ஆக கூடாதா…” 

இந்த சாதி அரசியலை தைரியமாக திரையில் காட்டியதற்காகவே படத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். 

அதேபோல அரசியல் பொருளாதாரத்தையும் இந்தப் படத்தில் நன்கு விளக்கி இருப்பார்கள். அதற்கு முன்பு இரண்டு தேசப்பற்று வசனங்களை பார்த்துவிடுவோம். 

  1. உயிரை கொடுத்தேனும் இந்திய தேசத்தை பாதுகாப்போம். 
  2. சீமைக் கருவேல மரமெல்லாம் ஜனங்களுக்கு தெரியாம நம்ம நாட்டுக்குள்ள திட்டம்போட்டு பரப்பின அந்நிய நாட்டு விதைங்க… அது நம்ம நாட்டையும் நிலத்தையும் நாசம் பண்ணுது… அத அழிக்கறது ரொம்ப கஷ்டம்… ஆனா அழிச்சே ஆகணும்… இது விவசாய தேசம்… விவசாயத்தயும் விவசாயியயும் கவனிக்காம நாட்ட வல்லரசு ஆக்க முடியாது… முட்டை போட முடியாத மலட்டுக் கோழி… குஞ்சு பொரிக்க முடியாத மலட்டு முட்டைங்கற மாதிரி மறுபடியும் விதைக்க முடியாத ஏராளமான மலட்டு விதைய மட்டும் விதைச்சா நம்ம தாய்நாடு மலடு ஆயிடாதா… நம்ம தாய்நாடு மலடு ஆனா அது நம்ம தாய் மலடு ஆன மாதிரி… அதிக மகசூல நம்பி நிலத்துல செயற்கை உரமா அள்ளிக் கொட்டி பூச்சி மருந்த ஊத்தி ஊத்தி நம்ம நிலமெல்லாம் நோய் வந்த மாதிரி ஆயிடுச்சு… நம்ம நிலத்துக்கு நோய் வந்தா அது நமக்கு நோய் வந்த மாதிரி இல்லையா… நம்ம நாட்டோட பாரம்பரிய நெல்லு செத்தா கூட அது நான் செத்தா மாதிரி…”
  3. அரசியல் பொருளாதாரம்… முதல்ல சமூகத்துல ஏற்பட்ட தேவைகள ஒட்டி மக்கள் ஒரு பண்டத்த கொடுத்துட்டு அவிங்களுக்கு தேவையான இன்னொரு பண்டத்த வாங்கிகிட்டாங்க… கம்மாடட்டி டூ கம்மாடட்டி… அதாவது உப்பு கொடுத்து சக்கரய வாங்கிக்கிட்டாங்க… இல்ல மிளகாய கொடுத்து அவிங்களுக்கு தேவையான அரிசியோ பருப்போ வாங்கிக்கிட்டாங்க… இந்த பரிமாற்றம் கஷ்டமா இருந்ததால நடுவுல வந்ததுதான் பணம்… அப்புறம் சரக்க கொடுத்துட்டு பணத்த வாங்கிக்கிட்டாங்க… தேவைனா அதே மதிப்புள்ள பணத்த கொடுத்துட்டு சரக்க வாங்கிக்கிட்டாங்க… கம்மாடட்டி டூ மணி டூ கம்மாடட்டி… மக்களின் தேவைக்கு தான் பரிவர்த்தனையே நடந்தது… ஆனா பணத்தோட ரோல் மாறி அதுக்கப்புறம் பணத்த கொடுத்து சரக்க வாங்கி பதுக்கி வச்சுக்குட்டாங்க.. அப்புறம் டிமான்ட் அதிகம் ஆன உடனே சரக்க கொடுத்துட்டு பணத்த வாங்கி சேத்துக்குட்டாங்க… மணி டூ கம்மாடட்டி டூ மணி… இங்க தான் அதிக பணம் அதாவது சர்க்கள்ஸ் மணி… நம்ம சமூகத்தயே ஆட்டிப் படைக்க ஆரம்பிச்சுது… இங்க இருந்து தான் காலாகாலமா உழைக்கறவங்க கிட்ட இருந்து எல்லாமே உழைக்காதவங்க கிட்ட போய் சேர ஆரம்பிச்சுது… 

உழைப்பு இல்லாம இங்க எதுவுமே மாறுனுது இல்ல… இந்த மேஜை உழைப்பால தான் மாறுச்சு… இந்த சாக்பீஸ் உழைப்பால தான் மாறுச்சு… இந்த மேஜைல இருந்து உழைப்ப கழிச்சுட்டா வெறும் மரம் தான் மிஞ்சும்… இந்த சாக்பீஸ்ல இருந்து உழைப்ப கழிச்சுட்டா வெறும் சுண்ணாம்பு பவுடர் தான் மிஞ்சும்… இந்த கட்டிடத்துல இருந்து உழைப்ப கழிச்சுட்டா வெறும் செங்கலும் சிமெண்டும் தான் மிஞ்சும்… அந்த செங்கல்ல இருந்து உழைப்ப கழிச்சுட்டா வெறும் களிமண்ணு தான் மிஞ்சும்… இந்த உலகம் பூராவும் உழைப்பால தான் மாறியிருக்கு… ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி உழைச்ச உழைப்பாளிக்கு எதுவுமே கிடைக்காம உழைக்காம சொகுசு வாழ்க்கை வாழறவனுக்கு மட்டுமே எல்லா சுகமும் பணமும் எப்படி போய் சேர்ந்துச்சு… இத தெரிஞ்சுக்க அரசியல் பொருளாதாரம் படிக்கனும்… 

பெரிய பெரிய பொருளாதார அறிஞர்களே இத தேடி தான் அலைஞ்சாங்க… ஆடம் ஸ்மித், ரிகார்டோ, அவிங்களுக்கலாம் அப்புறம் கார்ல் மார்க்ஸ் தான் இத கண்டு சொன்னாரு… 

வெறும் துப்பாக்கிய வச்சுக்கிட்டு போர் தந்திரம் தெரிஞ்சுகிட்டு எந்த நாட்டையும் காப்பாத்த முடியாது… நாடுங்கறது உழைக்கும் மக்கள் தான்… அரசியல் பொருளாதாரம் தெரியாம நம்ம இனம் மொழி கலாச்சாரம் இலக்கியம் எதையுமே காப்பாத்த முடியாது… “

இவ்வாறு வேறு எந்தப் படமும் விளக்காத  அரசியல் பொருளாதாரத்தை விளக்கியுள்ளது பேராண்மை. 

Related Articles

ஆரோக்யமாக எடை குறைக்க ஐந்து வகையான பானங்... இன்றையகாலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் அதிக எடை காரணமாக அவதிப் படுகின்றனர். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், அமைதியற்ற வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மையற்ற மன...
பொறியியல் கல்லூரிகளுக்கு ஆயுசு முடியப் ப... கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறியியல் கலந்தாய்வு நடைபெறத் தொடங்கியது. அப்போது இருந்தே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து உள்ளது...
சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்த பிரபலங்கள... Ada pongada !!! Well played Mumbai !!! And yes தோத்தாலும் ஜெய்ச்சாலும் #CSK4Life  - ஆர் ஜே பாலாஜி CSK !! WATSON -#respect .. millio...
உங்களுக்கு விருப்பமான ஐபிஎல் வீரர்களை நீ... ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கிரிக்கெட் விரும்பிகளுக்குக் கொண்டாட்டம் தான். குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியர்களின...

Be the first to comment on "பேராண்மை – அரசு பணியும் ஆதி திராவிடர்கள் மீதான ஆதிக்கமும்!"

Leave a comment

Your email address will not be published.


*