திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அங்கு இருந்த லெனின் சிலையை அகற்றினார்கள்
அங்கிருந்த பாஜக ஆதரவாளர்கள். உடனே சூட்டோடு சூடாக நாளை தமிழகத்திலும் இதே
போன்று பெரியார் சிலை அகற்றப்படும் என்று பிரச்சினைகளின் பிதாமகன் ஹெச்.ராஜா தனது
பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு எதிர்ப்புகள் பூதாகரமாக கிளம்பவே பழியை தூக்கி
அட்மின் மேல் போட்டுவிட்டார். உஷார் பார்ட்டியாம்!
இது கயவர்களுக்கே உண்டான குணம் தான். ஐம்புலன்களை அடக்கி வைத்துக்கொண்டு சும்மா
இருக்காமல் லூஸ் டாக் விட்டு பெரிய பிரச்சினையை இழுத்து வருவது. பிறகு அந்த பழியை
தூக்கி தன்னை விட குறைந்த பதவியில் இருப்பவர் மீதோ, எளியவர் மீதோ, எதாவது ஏமாந்தவர்
மீதோ தூக்கி போடுவதோ கயவர்களுக்கே உண்டான குணம் தான்.
யாருங்க அந்த அட்மின்?
இந்நிலையில் யாருங்க அந்த அட்மின் என்ற கேள்வியை நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய
பாணியில் கேட்டு வருகின்றனர். உண்மையில் அவருடைய முகநூல் கணக்கை நிர்வகிக்க
அட்மின் ஒருவர் இருக்கிறாரா என்பதற்கு விடையில்லை. இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில்
சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்த அய்யாக்கண்ணு மற்றும் பாஜக பெண் நிர்வாகிக்கு இடையேயான பிரச்சினை குறித்து ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
செத்தான் சேகரு என்பது போல அவருடைய பதிவுக்கு கீழே பலரும் சகட்டுமேனிக்கு அந்த
அட்மினை வாட்டி எடுத்து வருகிறார்கள். வாலை மீன், கெளுத்தி மீன், சுறா மீன், வாயக்
கொடுத்து வாங்கிக் கட்டிக்கும் இந்த அட்மின், நானும் எல்லா மீன் மார்க்கெட்லயும்
தொலவிட்டேன் கிரகம் இந்த அட்மின் பயல காணவே இல்ல, யாருங்க அந்த அட்மின் எனக்கே
பாக்கணும் போல இருக்கே, இவ்வாறு பலவிதமாக கலாய்த்து வருகிறார்கள்.
Be the first to comment on "“யாருங்க அந்த அட்மின்? எனக்கே பாக்கணும் போல இருக்கே” ஹெச். ராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!"