ஹரியானா மாநிலத்தில் ஒரு பியூன் பணிக்கு 1850 பேர் போட்டி! – பட்டதாரிகள் உட்பட 15,000 பேர் விண்ணப்பம்!

job

தமிழ்நாட்டில் ஒரு அரசுப்பணிக்கு நூற்றுக்கணக்கான நபர்கள் போட்டி போட்டுகொண்டிருக்கிறார்கள். அதிலும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தகுதியுள்ள கால்நடை வளர்ப்பு உதவி பணியாளருக்கு எம்.பி.ஏ, பி.எச்.டி படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தான் இந்த நிலைமை என்றால் இந்தியா முழுக்க பெரும்பாலான மாநிலங்களில் இந்த நிலைமை தான் நிலவி வருகிறது.

ஹரியானா – நீதிமன்றத்தில் பியூன் பணி

ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் என்ற மாவட்ட நீதிமன்றத்தில் எட்டு பியூன் பணியிடங்களுக்கு பதினைந்தாயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், ஆய்வு படிப்பு படிப்பவர்கள் என்று விண்ணப்பித்தவர்கள் பலவகை. கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் ஜிந்த மாவட்ட அமர்வு நீதிமன்றம் எட்டு பியூன் மற்றும் ஒரு புரோசர்ஸ் சர்வர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் இந்த பணிக்கு. விண்ணப்பித்தவர்களை குற்றம் சொல்லி என்ன பயன். இந்திய கல்வி முறை அந்த லட்சணத்தில் இருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்தில் அவனுக்கு சல்யூட் அடித்து குமாஸ்தா வேலை பார்ப்பதற்காக அவன் உருவாக்கிய கல்வி முறை தான் இன்றும் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. அதிலும் பல்வேறு படிநிலைகள் வேறு.

இப்போது தமிழ்நாட்டிற்கு வருவோம். மாணவர்கள் தற்கொலையில் முதலிடம் வகித்து “பெருமை” பெற்று வருகிறது. பக்கத்து மாநிலமான கேரளா நம்மை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறது. நாமும் பே என்று வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.

கொக்கி குமார்களின் கையில் கல்வி நிறுவனங்கள்!

ரிலீசான பொழுது கடுமையாக விமர்சிக்கப்பட்டு புறந்தள்ளிவிட்டு இப்போது ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்பட்டு வரும் படம் பபுதுப்பேட்டை. அதில் கடைசி காட்சியில் கொக்கி குமார் தற்போது பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார் என்று டைட்டில் கார்டில் வரும். இது முற்றிலும் உண்மை. தமிழகத்தில் புற்றீசல்போல பொறியியல் கல்லூரிகள் பெருகியதற்கு காரணம் இந்த கொக்கி குமார்கள். மனிதனின் அடிப்படை உரிமை கல்வி பெறுவது. அதை இலவசமாக தரவேண்டும். ஆனால் இதை வியாபாரமாக்கி கொள்ளையடித்து வருகிறார்கள். நாமும் செம்மறி கூட்டமாய் அவர்கள் கல்லாவை நிரப்பி அவர்களின் பத்தாவது தலைமுறை சொகுசாக வாழ்வதற்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்!

இன்றைய நிலவரப்படி 30 சதவீதம் மாணவர்கள் கூட சேராத பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அத்தகைய கல்லூரிகளின் எண்ணிக்கை 142 – 177 ஆக அதிகரித்திருப்பதாக ஜனவரி 1 அன்று மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறைவான மாணவர்களைக் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடமும் உத்திரப்பிரதேசம் இரண்டாமிடமும் வகிக்கிறது.

இப்படியே போனால் 2020ல் அல்ல 2100ல் கூட இந்தியா வல்லரசாகாது.

Related Articles

நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும... Comparing one person with another is brutal ( ஒருத்தர நீங்க ஏன் மத்தவங்க மாதிரி இல்லைன்னு கேட்குறது மிகப் பெரிய வன்முறை ) - இயக்குனர் ராம் எழுதி இயக்...
இன்றைய தண்ணீர் விலை? – லிட்டருக்கு... மனிதர்களாகிய நாம், தனது சுயநலத்துக்காக இயற்கையை கொன்று வருவதோடு மட்டும் அல்லாமல் இன்றைய தண்ணீர் விலை? லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு? என்று கேட்கும் ...
ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் எங்களை கரு... கருவிலயே குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுங்கள் அல்லது இப்பகுதியில் வசிக்கும் எங்களை கருணைக்கொலை செய்து ...
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பிர... * பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன்; இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து - நடிகர் ஜி.வி...

Be the first to comment on "ஹரியானா மாநிலத்தில் ஒரு பியூன் பணிக்கு 1850 பேர் போட்டி! – பட்டதாரிகள் உட்பட 15,000 பேர் விண்ணப்பம்!"

Leave a comment

Your email address will not be published.


*