அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

How do people with Ulcer problems handles it_

அல்சர் முதலில் எப்படி ஏற்படுகிறது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளில் ஏற்படும் அமிலத்தன்மையின் அதிகமான செயல்பாடுகளால் அல்சர் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். இப்படி அமிலத்தன்மையின் மிகுதியான செயல்பாட்டால் குடலில் ஆரம்பிக்கும் புண், படிப்படியாக அந்த உணவுப்பாதை முழுக்க புண்களாக மாறி மாறி வாயின் உட்புறம் உள்ள நாக்கு வரை படர்ந்து வந்து விடுகிறது. இப்படி வாயின் உட்புறமும் நாக்கிலும் அல்சர் புண்கள் வந்த பிறகு நம்மளால் பச்சைத்தண்ணி கூட நிம்மதியாக குடிக்க முடிவதில்லை. பச்சை தண்ணியே அந்த புண்களை தாண்டி போக மறுக்கும்போது நம்மால் எப்படி மற்ற உணவுகளை எல்லாம் நிம்மதியாக சாப்பிட முடியும். 

இப்படிப்பட்ட சூழலில் இந்த அல்சர் நோயை குணப்படுத்துவது எப்படி? என்று நாம் இணையதளத்தில் தேடி ப் பார்த்தாலோ அல்லது மருத்துவரை நாடிச் சென்றாலோ எல்லா பக்கமும் ஒரே மாதிரியான தீர்வு தான் கிடைக்கிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம். அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும் எவற்றை சாப்பிடக்கூடாது என்று பட்டியலிடுகிறார்கள். 

எதை எதை சாப்பிட கூடாது என்று அவர்கள் போடும் பட்டியல்: 

  1. மசாலா மற்றும் காரமான பொருட்கள் அதாவது எண்ணெயில் பொறிக்கப்பட்ட சில்லி, சிப்ஸ், முறுக்கு, பானிபூரி,  மசால் பூரி, குருமாவுடன் சேர்ந்த பஜ்ஜி, பிரைடு ரைஸ்  போன்ற  உணவுகளையெல்லாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். 
  2. சூடான மற்றும் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடக்கூடாது என்கிறார்கள். சூடான பொருள் என்றால் ஆறிப்போன சமோசா மற்றும் பப்ஸ் போன்ற உணவுப் பொருட்களை பேக்கரிகளில் சூடு செய்து தரும்போது அந்த சூடான பொருட்களை சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அதே போல நீண்ட நாட்களாக ஐஸ் பெட்டிக்குள்ளேயே இருக்கும் ஐஸ் கிரீமை வாங்கி சாப்பிடக்கூடாது என்கிறார்கள். முந்தைய நாள் வைத்திருக்கும் குழம்பை அடுத்த நாள் சூடு பண்ணி சாப்பிடுவதையும், முந்தைய நாள் வைத்திருந்த குழம்பை பிரிட்ஜில் வைத்திருந்து அதை அடுத்த நாள் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கனும் என்கிறார்கள்.  அதிலும் குறிப்பாக மாமிச உணவுகளை அந்த மாதிரி பயன்படுத்தவே கூடாது என்கிறார்கள். 
  3. டீ, காபி மற்றும் பால் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். டீயைக் காட்டிலும் காபி மற்றும் பால் இரண்டையும் முடிந்தவரை தொடவே கூடாது என்று சொல்கிறார்கள். அதேபோல சாக்லேட் சாப்பிடக் கூடாது என்றும் சொல்கிறார்கள். 

மற்றபடி நேரத்திற்குச் சாப்பிடுங்கள், நேரத்திற்கு உறங்குங்கள், அதிக அளவிலான மன உளைச்சலுக்கு  ஆளாகாதீர்கள், கண்ட கண்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள், மது புகை போன்ற பழக்கங்களை தவிர்த்து விடுங்கள் என்றுதான் எல்லா பக்கமும் திருப்பி திருப்பி வேறு வேறு மொழிகளில் சொல்கின்றனர். ஆனால் இவர்கள் எந்த உணவை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்களோ அந்த உணவு தான் நம் அன்றாட வாழ்வின் மிக முக்கியமான உணவுப் பொருளாக மாறி இருக்கிறது. நாம் எவ்வளவு தான் அந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றும் முயன்றாலும் நம்மால் அதை கட்டுபடுத்த முடியவில்லை. 

காரமான பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில்லி, பானி பூரி, பிரைடு ரைஸ், பஜ்ஜி இந்த உணவுகளில் ஏதோ ஒன்றை வாரத்தில் ஒரு நாளாவது நம்மை மீறி நாம் சாப்பிட்டு விடுகிறோம்.  நம்மை மீறி அந்த உணவுப் பொருள் நம் வயிற்றுக்குள் போக என்ன காரணம்? சரியான நேரத்தில் சரியான உணவை எடுத்துக்கொள்ள முடியாததே அதற்கு காரணம். வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களிலும், வீட்டிற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத நாட்களிலும், கையில் பணம் குறைவாக இருக்கும் மாத கடைசி நாட்களிலும் எவ்வளவு முயன்றாலும் நம்மால் சரியான உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி பட்ட நாட்களில் நாம் அருகே இருக்கும் பேக்கரி அல்லது தள்ளுவண்டி கடை இந்த இடத்திற்கு தான் செல்கிறோம்.  அங்கு போனால் டாக்டர்கள் எதை சாப்பிடக் கூடாது என்று சொல்கிறார்களோ அதுதான் குறைவான விலைக்கு நல்ல சுவையுடன் பசியாற்றும் விதத்தில் கிடைக்கிறது. அந்த விதத்தில் ஆறிப்போன பப்ஸை சூடாக்கி எடுத்துக் கொடுக்கிறார்கள்.  சமோசாவை அதேபோல் எடுத்துக் கொள்கிறார்கள். 

வேலை செய்யும் இடங்களில் அல்லது வேலை செய்யும் நபர்கள் உடன் சென்று நாம் டீ அல்லது பாலோ காப்பியோ இவற்றில் ஏதோ ஒன்றை நாம் அருந்திதான் ஆக வேண்டும். அவர்கள் குடிக்கும் போது அல்லது அவர்களுக்கு கம்பெனி பொறுப்பில் இருந்து அவை கிடைக்கும்போது நாம் வெறுமனே அவற்றை புறக்கணித்து கொண்டு உட்கார்ந்து இருக்க முடியாது. அது மட்டுமன்றி உடல் சோர்வில் இருந்து நீங்கி புத்துணர்ச்சியாக வேலை செய்ய, அந்த சூடான பானத்தை நாம் குடித்தே ஆக வேண்டும் என்கிற ஒரு நிலைமை வந்துவிட்டது. 

அதுமட்டுமில்லாமல், என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிட்டாலும் அல்லது விசேஷ வீடுகளில் சாப்பிட்டாலும்… அந்த  சாப்பாட்டுக்குப் பிறகு செரிமானத்திற்காகவோ அல்லது இதமான உணர்வுக்காகவோ நாம் நம்மை மீறி அங்கு இருக்கும் டீயை, காபியை பருகத் தொடங்குகிறோம். இரவு நேரங்களில் தோசை சாப்பிட்டாலோ பரோட்டா சாப்பிட்டேன் இட்லி சாப்பிட்டால் கூட நடு இரவில் தூக்கம் கெட்டு போய் நெஞ்சு எரிய ஆரம்பித்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு  உணர்வு வரக்கூடாது என்பதற்காக ஒரு சிலர் இரவு  தூங்கப் போகும் முன் மாத்திரை விழுங்குவது போல, ஹால்ஸ் விக்ஸ்  போன்ற சாக்லெட்டுகளை முழுங்குகிறார்கள். அவற்றை மீறியும் நடு இரவில் தூக்கம் கெட்டுப் போனால், அப்போதும் அந்த சாக்லேட்களை பிரித்து விழுங்கிக் கொள்கிறார்கள். இப்படி தொடர்ந்து சாக்லெட்டை எடுத்துக் கொள்வதாலும் அல்சர் மேலும் முற்றிப் போகிறது. இதைப்போய் தெரிந்த நண்பர்களிடம் சொன்னால், நீ ஹால்ஸ், விக்ஸ்… இந்த மாதிரி கெமிக்கல் மிட்டாய் வாங்காத… மெடிக்கல்ல விக்குற தூதுவளை, துளசி, வல்லாரை, சின்னபசங்களோட சீரக மிட்டாய் இந்த மாதிரி மிட்டாய்களை வாங்கி சாப்பிடு  என்று அறிவுரை கூறுவார்கள். 

அந்த மாதிரி மிட்டாய்களை வாங்கி சாப்பிட்டால் மட்டும் அஜீரண கோளாறு, அல்சர் பிரச்சனை போன்றவை சரியாகிவிடுமா? அப்போதும் அந்த நோயின் தன்மையை அதிகமாகத்தான் செய்யும். காரணம் அது மிட்டாய். பச்சை தூதுவளை இலையோ அல்லது அதன் சாறோ கிடையாது.  அதனுடன் இணைந்த கெமிக்கல்களை சேர்த்த மிட்டாயைத் தான் நாம் உண்ணுகிறோம். இப்படி தொடர்ந்து ஏற்படும் வாய்ப் புண்கள், நாக்குப் புண்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் நபர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வெத்தலை பாக்கு போடுவது, புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை அறவே நிறுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் அவர்களை பாராட்ட வேண்டும். 

இப்போது அல்சர் நோய் உள்ளவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அந்த இணையதள வாசிகளும் மருத்துவர்களும் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். முதலில் அவர்கள் சாப்பிட சொல்வது  நுங்கு, இளநீர், தயிர் மூன்று பொருட்களும் தான்.  அதைத்தொடர்ந்து நார்ச்சத்து மிகுதியாக உள்ள பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய், முட்டைக்கோஸ்  போன்ற காய்கறிகளையும், பருப்புடன் கீரையை சேர்த்து வேக வைத்த  கூட்டையும் நாம் அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகள் இளநீர் தயிர் முட்டை, கீரைகள்  இவை அதிக அளவில் கிடைக்கும். நொங்கு நமக்கு சீசனில் மட்டுமே கிடைக்கும். அதேபோல  இளநீரும் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது, ஆனால் இளநீரில் விலைக்கேற்ற நீரும் அந்த தேங்காயும்  சரியாக கிடைப்பதில்லை இதை கடைக்காரரிடம் சொன்னால் கவுண்டமணி டயலாக் சொல்கிறார்கள்.  அவர்களுக்கும் வேறு வழியில்லை மொட்டை வெயிலில் நின்று கொண்டு ஏனெனில் இவர்கள் அந்த விலைக்கு விற்கவில்லை என்றால் அவர்கள் குடும்பம்  அல்சர் நோயால் வாட வேண்டிய நிலைமை வந்துவிடும்.  இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். வாய் புண் அதிகமாக இருக்கும் சமயங்களில் நீங்கள் சாக்லேட், பாணி பூரி, சிப்ஸ், மிக்சர், மசால் கடலை போன்ற உணவுகள் அத்தனையும் தவிர்த்து விடுங்கள்.  அதாவது பொரித்த உணவை தவிர்த்துவிட்டு அவித்த உணவை எடுங்கள். பனங் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்ற பொருட்கள் அவித்து தள்ளுவண்டி கடைகளில் சைக்கிள் கடைகளில் விற்கப்படுகின்றன. இப்படி அவித்த கிழங்குகளை வாங்கி சாப்பிடுங்கள். ஆனால் அளவாகச் சாப்பிடுங்கள். விடிந்ததும் முதல் வேலையாக டீ, பால், காபி இவற்றையெல்லாம் குடிப்பதை நிறுத்திவிட்டு  வெறும் வயிற்றில் ஒரு பாக்கெட் தயிர் வாங்கி அல்லது உங்கள் ஊர் பால்காரர் இடம் வாங்கிய பால் கெட்டி தயிர் போட்டு அதை சுற்றி நிறைய தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து  வெண்ணையை எடுத்து விட்டு அந்த குண்டா  நிறைய இருக்கும் மோரில் இரண்டு டம்ளர் மோரை எடுத்து குடியுங்கள்.  இப்படியும் ஓர் குடிப்பது எனக்கு சரிவராது என்பவர்கள் மோரைப் ஒதுக்கிவைத்துவிட்டு சத்துமாவு கஞ்சி இருக்கும் அதை வைத்து அல்லது உளுந்தங்கஞ்சி வாங்கி குடியுங்கள். அதை தொடர்ந்து வேலை இடைவேளைகளில் கம்மங்கூழ் அழுது நீர் மோர் போன்றவற்றை பருகுங்கள். டீ கடைகளுக்குச் சென்றால் டீ குடிப்பதை நிறுத்திவிட்டு ஆசைக்கு ஒரு உளுந்து வடை அல்லது இரண்டு உளுந்து வடை வாங்கி சாப்பிடுங்கள். அதைப்போல  ஹோட்டல்களில் சாப்பிட்டால் அதிலும் குறிப்பாக ஃப்ரைட் ரைஸ்,  எண்ணெயில் பொரித்த மாமிசங்கள் மசாலா மாமிசங்கள் போன்றவற்றை சாப்பிடும் போது  சிறிதளவு வெங்காயத் துண்டுகளை கேட்டு வாங்கி ஒவ்வொரு வாய் மாமிசம் எடுத்து சாப்பிடும் போதும் சிறிதளவு சிறிதளவு வெங்காயத்தை அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். 

சாப்பிட்டு முடித்ததும் ஹோட்டலில் இருந்து வெளியே வரும்போது பில் கவுண்டர் பக்கம் இருக்கும் அந்த சீரக டப்பாவில் இருந்து குறைந்தபட்சம் ஒரு ஐம்பது சீரகத்தை அள்ளி வாயில் போட்டு மென்று அதன் சாறை நன்றாக உள்ளே விழுங்குங்கள். ஒரு சில பெரிய ஹோட்டல்களில்,  சாப்பிட வருபவர்களுக்கு  சீரகத்தை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரையும் மூலிகை வேர்களை போட்டு கொதிக்க வைத்த நீரையும் பருக கொடுக்கிறார்கள். அந்தக் ஓட்டல்களில் அந்த நீரை எவ்வளவு கேட்டாலும் அவர்கள் பாரபட்சமில்லாமல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரியான ஹோட்டல்களை தேடி சாப்பிடுங்கள். வாரத்திற்கு இரண்டு நாள்கள், நல்லதாக ஒரு தேங்காயை உடைத்து நன்கு அரைத்து அந்தத் தேங்காய்ப் பாலை பொறுமையாக குடியுங்கள். வீடுகளில் குடிக்கும் நீர் எப்போதும் சீரக நீராக இருக்கும்படி செய்து கொள்ளுங்கள்.  இரவு நேரத்தில் அஜீரண கோளாறு ஏற்படும் போது மிட்டாய் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்த நீரைப் பருகி விட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு பிறகு தூங்குங்கள்.

Related Articles

#TN_welcomes_XiJinping #GoBackModi என்று... சீன நாட்டை சேர்ந்த ஜின்பிங்கை வரவேற்கும் தமிழர்கள் #Gobackmodi என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1.சீன ...
” வேகம் மட்டும் போதாது, விவேகம் வே... சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது. சிஎஸ்கே ரசிகர்கள்...
251 ரூபாய்க்கு உலகின் மலிவான திறன்பேசி த... நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மோஹித் கோயெல் உட்பட மூன்று பேரை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்த...
கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... பஞ்ச தந்திரம்இயக்கம்: கே. எஸ். ரவிக்குமார்கதை: கமல்வசனம்: கிரேசி மோகன்இசை: தேவாகதை: பிளேபாயாக சுற்றித்திரிந்த கமல் திருமணமான...

Be the first to comment on "அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?"

Leave a comment

Your email address will not be published.


*