ஊழல் குற்றவாளியின் உருவ படத்தைச் சட்டமன்றத்தில் வைக்கலாமா கூடாதா?

ஊழல் குற்றவாளியின் உருவ படத்தைச் சட்டமன்றத்தில் வைக்கலாமா கூடாதா?

சட்ட சபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்த காலத்திலிருந்தே அது குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பியது. ஆனால், யார் என்ன பேசினாலும் சரி நாங்கள் எங்க இஷ்டத்துக்கு தான் இருப்போம் என்ற கணக்கில் அவருடைய உருவபடத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் திறந்துவைத்துள்ளது இன்றைய ஆளுமைகள்.

ஊழல் குற்றவாளி என்பதால் திறந்தது தவறு

ஆட்சியில் இருக்கும்போதே ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போன இந்தியாவிலயே முதல் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா. அவர் ஊழல் குற்றவாளி தான் என்பதை உச்சநீதிமன்றம் அவர் இறந்தபிறகும் கூட உறுதிபடுத்தியுள்ளது. இருந்தபோதிலும் அவருடைய உருவப்படத்தை அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராசர், அண்ணா, மகாத்மா காந்தியடிகள் போன்ற கலங்கமில்லாத தியாக தலைவர்களின் படங்களுக்கு அருகே இவர் உருவப்படத்தை வைப்பது கண்டனதுக்குரியது என்றும், இவர் உயிருடன் இருந்திருந்தால் சொத்துகுவிப்பு வழக்கில் இந்நேரம் தண்டனைக்குரிய குற்றவாளியாக வாழ்ந்திருப்பார், அவர் இறந்துவிட்டதால்  அவர் செய்த தப்பு சரியென்று ஆகிவிடாது, ஹிட்லர் கூட தான் இறந்துவிட்டார் அதற்காக அவர் செய்த தவறுகளை தவறு இல்லை என்று கூறமுடியுமா என்றும் இது தவறான முன்னுதாரணம் என்றும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிறந்த பெண் ஆளுமை என்பதால் திறந்தது மிகச்சரியே

தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கான தனி ஆளுமைக்குணமும் வெகுஜன ஆதரவும் கொண்ட ஒரே பெண் தலைவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவரை கடுமையாக சாடுபவர்கள் கூட எதையும் எதிர்த்து நிற்கும் அவருடைய துணிச்சலை கண்டு வியந்து பாராட்டிய தருணங்களும் உண்டு. ஆதலால் துணிச்சல் மிகுந்த ஒரு பெண் ஆளுமையின் உருவபடத்தை சட்டசபையில் திறக்காமல் இருந்தால் தான் தவறு என்றும், இதை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கக்கூடாது என்றும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டத்தை பொறுத்த வரை இது தவறு தான். மெரினா கடற்கரையில் “அரசின் செலவில்” ஜெயலலிதாவுக்கு சமாதி அமைக்க, அவருடைய இல்லத்தை நினைவு இல்லமாக்க, அனைத்து அரசு அலுவலகங்களிலும் அவருடைய உருவப்படத்தை திறக்க திட்டம் வகுத்திருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்திற்கும் எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வராமல் இருக்கிறது. ஆனால் அதற்குள் சட்டசபையில் அவருடைய உருவபடத்தை திறந்து வைத்திருப்பது ஆகச்சிறந்த விதிமீறல். ஜனநாயக நாட்டில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மதிப்பில்லாமல் போவதை என்னவென்று சொல்வது?

Related Articles

2019 சென்னை புத்தக திருவிழாவில் களமிறங்க... 2019 சென்னை புத்தக திருவிழா வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி கிட்டத்தட்ட இருபது நாட்களாக நடக்க இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழின் முக்கியமான பதிப்ப...
உடல் உறுப்பு மாற்றத்தில் தமிழக அரசு செய்... கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் உறுப்பு "தானத்தில்" தமிழக அரசு இந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அதற்காக மத்திய அரசின் விருதையும் கூட பெற...
பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எ... கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்க...
தமிழக அரசின் ஓராண்டு சோதனைகள் ! – ... 2016 டிசம்பர் 5 ம் தேதியில் இருந்து தமிழகம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. ஒரே ஒரு ஓட்டைப் போட்டுதற்கு மூன்று முதலமைச்சர்களை உருவாக்கி உலக வரலாற்று ...

Be the first to comment on "ஊழல் குற்றவாளியின் உருவ படத்தைச் சட்டமன்றத்தில் வைக்கலாமா கூடாதா?"

Leave a comment

Your email address will not be published.


*