ஆந்திர பிரதேச கோயில்களில் திருடுப் போகும் பக்தர்களின் தலைமுடிகள்! – தலைமுடிக்கும் தனி மதிப்பு உண்டு!

சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான திருப்பதி கோயிலில் உள்ள தலை  முடிகள் பல கோடிகளுக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. திருப்பதியில் ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கில் பக்தர்கள் முடி காணிக்கை செய்கிறார்கள். அது கோவில் நிர்வாகத்தால் சேகரிக்கப் பட்டு நல்ல விலைக்கு ஏலம் விட்டு கோவில் வருமானத்தை கோடிகளில் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதே போல ஆந்திராவின் மற்றபிற பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்களின் காணிக்கை முடிகள் அவ்வப்போது திருடுப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

 

தலைமுடிக்கு தனிமதிப்பு

உலக அளவில் இந்த தலைமுடி வியாபாரம் பிரபலமாக உள்ளது. அப்படி தலைமுடி வியாபாரம் அதிக அளவில் செய்வதில் இங்கிலாந்து முதல் இடமும், அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடிக்கின்றன. 1960ம் ஆண்டிலிருந்து தலைமுடி ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா. அதிலும் குறிப்பாக திருப்பதியில் இருந்துதான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரணம் திருப்பதி கோவிலில் உள்ள பக்தர்களின்  நீள முடி 1 கிலோ 8,500 ரூபாய்க்கும், குட்டை முடி 1 கிலோ 50 ரூபாய்க்கும் வியாபாரம் ஆகிறது.

இந்த தலைமுடிகளையும் சில நிறுவனங்கள் விலைக்கு வாங்கி பதப்படுத்தி அதை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு நானூறு கோடிக்கும் மேல் இந்தியாவிற்கு வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தலைமுடிகளை வைத்து  அமினோ அமிலங்கள் உற்பத்தி செய்யலாம் என்பதாலும் கேன்சர் நோயாளிகளுக்கு இது பேருதவி புரியும் என்பதாலும் முடியின் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது. தலைமுடிகளில் இரண்டு வகை முடிகள் வியாபாரத்திற்கு என்று உள்ளது. ஒன்று முழுவதுமாக கோவில்களில் கிடைக்கும் முழுநீள முடிகள். மற்றொன்று வீடு வீடாகச் சென்று குரவர்கள் சேர்க்கும் அரைகுறை முடிகள்.இவற்றில் கோவில் முடிகளுக்கே அதிக மதிப்பு.

இங்கே எத்தனை பேர், நடிகர் விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை படம் பார்த்திருக்கிறீர்கள். அதில் தலைமுடி வியாபாரம் பற்றி சில கட்சிகள் இருக்கும். அந்தப் படத்தை பார்த்தால் இந்தக் காட்சியை கூர்ந்து கவனியுங்கள். இங்கு எல்லாவற்றிலும் காசு இருக்கிறது என்பது புரியும்.

Related Articles

கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... பஞ்ச தந்திரம்இயக்கம்: கே. எஸ். ரவிக்குமார்கதை: கமல்வசனம்: கிரேசி மோகன்இசை: தேவாகதை: பிளேபாயாக சுற்றித்திரிந்த கமல் திருமணமான...
கடந்த பத்தாண்டுகளில் வெளியான டாப் 10 சிற... 2010 ல் வெளியான படங்கள்:  2010 ம் ஆண்டில் மொத்தம் 143 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அவற்றில் ஆயிரத்தில் ஒருவன், நாணயம், கோவா, தமிழ் படம், விண்ணைத் தாண்டி...
சோத்துக்கே வழி இல்லாத பசங்களாம் சோஷிலிசம... நாமெல்லாம் பாதைங்கறது போறதுக்கும் வர்றதுக்கும் உள்ள வழின்னு நினைச்சுட்டு இருக்கோம்... ஆனா இங்க ஒவ்வொரு பாதைக்கு பின்னாலயும் ஒரு வரலாறு இருக்கு......
தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுக... தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 7 ஒருநாளில் போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதே தனியொரு சுழற்பந்து வீச்சாளரின் அதிகபட்ச சாதனையாக இருந்து வந்தது. அ...

Be the first to comment on "ஆந்திர பிரதேச கோயில்களில் திருடுப் போகும் பக்தர்களின் தலைமுடிகள்! – தலைமுடிக்கும் தனி மதிப்பு உண்டு!"

Leave a comment

Your email address will not be published.


*