எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்கு” ஒரு பார்வை!

Kadavulin Naaku book review

தின இந்து நாளிதழலில் தொடராக வந்த கடவுளின் நாக்கு கதைகளின் தாயகம், மனிதன் நல்லவனா?, அன்பின் அடையாளம், காட்டின் அரசன்!,சிலந்திப் பெண்!, கண் திறவுங்கள், வெங்காயத்தின் குரல்!, தேசங்களின் தலைவிதி,தேவையில்லாத கோபம்!, முதல் கண்ணீர்!, வான் நோக்கு!, எதில் போய் முடியும்?, தேடிச் சேர்த்த பணம்!, நாற்காலிக்கு கொம்பு உண்டு!, யாருக்கானது சட்டம்!,கவலையின் குரல்!, மழையை வரவழைப்பவர்கள்!,துரோகத்தின் நிழல்!, யானையின் கண்கள்!, பயத்தை சுமப்பவர்கள்!,தண்டனை மட்டுமா தீர்வு!,மரத்தில் காய்க்கும் அரிசி!,’ஒடோமி’ கதை, வெறும் கற்பனை!, ஆமையும் முரசும்!,வான் விருந்து!, இரும்பு மிருகம்!,ஈக்களும் சிலந்தியும்!, உப்பும் குற்றமும், வாயைக் கட்டுங்கள்!,உதவிக் குரல்!, சந்தையின் தந்திரம்!, அழகின் அடையாளம்!,சிறுகல் போதும்!, நிறம் மாறிய பறவை!, அறிவின் துணை!,வாழ்வின் வியப்பு!, உழைப்பின் உன்னதம்!, கோடையும் இனிதே!,மறதியின் தேவதை!, எச்சில் கோபம்!, குடித்த கழுதை!,இரக்கத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்!,சிந்திக்கும் விலங்கு!,சந்தேகத்தின் நிழல்!,நேர்மையின் அர்த்தம்!, மவுனக் காட்சிகள்!, வாழ்தலின் இனிமை!,எதிர்பாராத சந்தோஷம்!, பாடம் மட்டுமே போதுமா!, உண்மை சுடும்!, பயணியின் கோபம்!,நம்மில் ஒருவன், பெயரைக் கேளுங்கள்!, நிழலைப் புதைத்தவன்!, குறையும் நிறையும்!, கண்களைத் திருப்புங்கள்!, எதிர்காலம் எப்படியிருக்கும்?, காதலின் துயரம்!, உனக்குள்ளிருக்கும் புத்தன்!, மூடிய கைகள்! , வாளும் வித்தையும்!, அலட்சியமாகும் விதிகள்!, சொல் ஓர் ஆயுதம்!, கூடி உண்போம்! , ஏழு அதிர்ஷ்டங்கள்,வீட்டின் தூண்கள்! என்று 68 தலைப்புகள் உள்ளடக்கியது.  

ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஒரு நாட்டுப்புறக் கதையை பகிர்கிறார் எழுத்தாளர். நாட்டுப்புறக்கதை என்றால் இந்திய தமீழக நாட்டுப்புற கதைகள் மட்டும் அல்ல. உலக அளவிலான நாட்டுப்புற கதைகளை பகிர்கிறார். ஒவ்வொரு   கதையும் மனதை கவரும் வகையில் உள்ளன.

“தமிழ் இலக்கியத்தின் பீஷ்மர் என அழைக்கப்படும் எழுத்தாளர்கி.ராஜநாராயணன் கிராமப்புறங்களில் சொல்லப்பட்டு வந்த கதை களைத் தேடி, சேகரித்து நூலாக்கியிருக்கிறார். முல்லை முத்தையா, அ.லெ.நடராஜன்,நெ.சி.தெய்வசிகாமணி போன்றவர்களும் வாய்மொழிக் கதைகளைச் சேகரித்து தொகுத்திருக்கிறார்கள்

தற்போது கழனியூரன், பாரததேவி,எஸ்.எஸ்.போத்தையா. எஸ்.ஏ.பெருமாள், கம்பீரன் என பலரும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி பதிப்பித்து வருகிறார்கள்.உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான இதாலோ கால்வினோ, ஹெர்மன்ஹெஸ்ஸே மற்றும் கவிஞர்களான யேட்ஸ்,தாகூர் போன்றவர்களும் நாட்டுப்புறக் கதைகளைத் தேடி,சேகரித்து நூலாக்கியிருக் கிறார்கள்.” போன்ற மிக முக்கியமான தகவல்களையும் பகிர்கிறார். குழந்தைகளுக்காகன கதைகள் இந்தப் புத்தகத்தில் நிறைய கதைகள் உள்ளன. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.  

Related Articles

தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத... 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின...
#TN_welcomes_XiJinping #GoBackModi என்று... சீன நாட்டை சேர்ந்த ஜின்பிங்கை வரவேற்கும் தமிழர்கள் #Gobackmodi என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1.சீன ...
பர்சு பத்திரம் மக்களே! – அவனே ஸ்ரீ... சர்டிபிகேட் U/A , காலம் : 172.53 நிமிடங்கள் தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் & வெளியீடு : Screen scene entertainment  ராவணன் மற்றும் அனுமன...
அண்ணாவின் ” வேலைக்காரி ” நாட... கதாபாத்திரங்கள் : வேதாசல முதலியார் - வட்டியூர் ஜமீன்தார் சரசா - வேதாசல முதலியாரின் மகள் மூர்த்தி - வேதாசல முதலியாரின் மகன் அமிர்தம்...

Be the first to comment on "எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்கு” ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*