காலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்ட சத்யராஜ்!

காலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்ட சத்யராஜ்!

கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிக முக்கியமான படம் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான கனா திரைப்படம்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் வெற்றி விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப் பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட சத்யராஜ் வழக்கம் போல நக்கலும் நைய்யாண்டியுமாகப் பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.

அப்போது சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவை நிகழ்ச்சி தொகுப்பாளர் ட்யூட் விக்கி மேடைக்கு அழைக்க மேடை ஏறிய மகளை சத்யராஜ் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொன்னார். அப்பா சொன்னதை கேட்டு ஆராதனாவும் சத்யராஜ் காலில் விழ சத்யராஜோ ஆராதனாவை அடிக்க செல்லமாக கை ஓங்கினார். பிறகு ஆராதனாவை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டார். இந்த இடத்தில் நின்னுட்டார் மனுசன்!

ஒரு மனிதன் சக மனிதனின் காலில் விழுவது முட்டாள்தனம் என்ற கொள்கையுடன் ஏராளமானோர் சினிமாவில் இருக்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், சூர்யா, அமீர், அனிருத் போன்றோர். பல இடங்களில் காலில் விழுந்த மனிதர்களை திட்டியும் அடித்தும் இருக்கிறார்கள்.

காலில் விழுவது முட்டாள் தனம், அது ஒரு பாசாங்கான வேலை என்று சாதாரண மக்களும் எப்போது நம்பத் தொடங்குவார்களோ! அரசியல்வாதிகளா நீங்கள்! எதற்கெடுத்தாலும் தொப் தொப் என காலில் விழ… சத்யராஜிடம் இருந்து சிவகார்த்திகேயன் கற்றுக் கொள்ள வேண்டிய விசியம் அது. பொது மேடையில் சிக்கல் இல்லாமல் நக்கலாகப் பேசுவது எப்படி என்பதை சத்யராஜிடம் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் கற்றுக் கொள்ள வேண்டும்.

Related Articles

மலம் அள்ளுபவர்களுக்கு எதற்கு மரியாதை? மல... "ராணுவத்தில் இறந்து போகிறவர்களை மரியாதையாக பார்க்கும் இந்த சமூகம் மல குழிக்குள் இறங்கி மரணம் அடைபவர்களை ஏன் கேவலமாக பார்க்கிறது கண்டுகொள்ளாமல் இருக்கி...
48 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்... கௌரி சிங்வி என்ற பதினான்கு வயது பெண் கர் தண்டா முதல் கேட்வே ஆப் இந்தியா வரை உள்ள நாற்பத்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்க இருக்கிறார். ராஜஸ...
சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு ... சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அதற்கான தண்டனை பற்றிய விவரங...
மும்பை இந்தியர்கள் (MI) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி மும்பை இந்தியர்கள் போட்டிகள் நேரம் இடம்1 1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 7...

Be the first to comment on "காலில் விழப் போன ஆராதனாவை தடுத்து இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்ட சத்யராஜ்!"

Leave a comment

Your email address will not be published.


*