சமீபத்தில் நடந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பராசக்தி படம் திரையிடப்பட்டது. பல ஆண்டுகள் ஆனாலும் பேசக்கூடிய வியக்ககூடிய படமாக இருக்கும் இந்தப் படத்தின்
மூலக்கதை – M.S. பாலசுந்தரம் எழுத
திரைக்கதை வசனம் – மு. கருணாநிதி எழுதியுள்ளார். சில வசனங்கள் இங்கே :
வசனங்கள்:
- கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது? சொந்த நாட்டிலே வாழ முடியாமல் அயல்நாட்டிற்குச் சென்று வாழும் மக்கள் அழுது அழுது சேர்த்த கண்ணீரால் தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.
- மதராசுல மனுசன் மிருகமா தான் இருக்கான்… முதுகெலும்பு ஒடிய மூட்டை வண்டி இழுக்கிறானே… குதிரைக்குப் பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்சா இழுத்து கூனிப்போயிருக்கிறானே… நாயைப் போல சுருண்டு நடைபாதையில் குடும்பத்தோடு தூங்குகிறானே… அந்த நல்லவனை நாதியற்றவனை நாலுகால் பிராணியாய் மாற்றப்பட்ட மனிதனை சொன்னேன்… சென்னை புனிதமான நகரம்… இங்கே மனிதன் மிருகம்…
- பைத்தியக்கார உலகம்… இந்த உலகத்தில் ஏமாற்றுக்காரன் தான் பிழைக்க முடியும்… வயிற்றுக்கு இல்லாமல் வாடும்போது ஒரு பழத்தை எடுத்தேன்… அதற்குப் பரிசு அடி உதை. பைத்தியக்காரன் ஒரு சீப்பு பழத்தை திருடுகிறான்… உலகம் அவனுக்குப் பயப்படுகிறது…
- பெரிய மனுசன் வீட்டு அந்தப்புரத்துல தொழிலாளி மொதலாளி பிரச்சினைக்கு இடமே கிடையாது…
- ஏழைக்குப் பிரசாதம் கேக்குதா…
- உஷ்ன்னா ஓடுற பசங்க இப்ப உதைக்கற அளவுக்கு வந்துட்டாங்களா…
- இரக்கமற்ற மனுச சாதிய பகுத்தறிவாளர்னு சொல்றது தப்பு தான்…
- பிச்சைக்காரனாய் திரிந்தாய் வெட்கமில்லை… திருடனாக மாறினாய் அப்போதும் வெட்கமில்லை ஆனால் உன் ஏமாற்றத்தை வெளியில் சொல்ல வெட்கப்பட்டிருக்கிறாய்… வேடிக்கையான மனிதன்!
- சமுதாயமே பிச்சைக்கார மடம் தான் ஆனால் அதில் நீ திருவோடு இல்லாத பரதேசி… சமுதாயம் பைத்தியக்கார விடுதிதான் ஆனால் அதில் நீ கல்லெறிய தெரியாத பைத்தியம்… சமுதாயம் திருடர் குகை தான் ஆனால் அதில் நீ கண்ணுக்குள் பிடிக்கத் தெரியாத திருடன்…
Be the first to comment on "கலைஞர் கருணாநிதி எழுதிய பராசக்தி திரைப்பட வசனங்கள்!"