பெண் பிள்ளைகளின் பெற்றோர் செய்யக் கூடியவை, செய்ய வேண்டாதவை
- தாய் தந்தையை தவிர வேறு யாரும் குழந்தையை தீண்ட அனுமதிக்க கூடாது.
- குழந்தைகள் தனியாக இருக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடாது.
- மிகவும் தெரிந்தவர்கள் உறவினர்கள் தானே என்று யாரிடமும் பெற்றோர் இன்றி குழந்தைகளை தனியாக அனுப்புவதை பலமுறை பரீசீலனை செய்து அனுப்புங்கள்.
- பள்ளியிலிருந்து அழைத்து வருபவர் மூன்றாம் நபராகவோ தனியார் வாகன ஓட்டிகளாகவோ இருந்தால் அவர்களை கண்காணியுங்கள். அவர்களின் முழு விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்ளூங்கள்.
- குழந்தைகள் பயிலும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் குணங்களையும் நடவடிக்கைகளையும் அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
- பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தைகளிடம் பள்ளியில் நடந்ததை பற்றி மனம் விட்டு பேசி தெரிந்துகொள்ளுங்கள்.
- குழந்தைகளை மிரட்டி விஷியங்களை தெரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள்.
- குழந்தைகளோடு அதிகமாக நேரத்தை செலவிடுங்கள். ஏனென்றால் பல இடங்களில் பாசம் கிடைக்காத பிள்ளைகள் அந்நியர்களால் சுலபமாக ஈர்க்கப்படுகிறார்கள். பெற்றோரின் அன்பு, அரவணைப்பு பாசம் இல்லாத குழந்தைகளே அதிகமாக ஆபத்து வளையத்திற்குள் சிக்க வாய்ப்பு உண்டு.
- ஆசை வார்த்தை கூறி அன்பாக பழகும் யாருடனும் குழந்தைகளை தனித்து விட கூடாது.
- தொலைக்காட்சி தொடர்கள், மொபைல் போன்கள் போன்றவற்றை நல்ல அறிவை வளர்க்கும் பட்சத்தில் குழந்தைகள் அவற்றை பார்க்க பயன்படுத்த அனுமதிக்கலாம்.
- குழந்தைகள் வளரும் பருவத்தில் இருப்பதால் அதிகமாக கேள்வி கேட்பார்கள். கேள்வி கேட்கிறார்களே என்று எரிச்சலைடந்து குழந்தைகளிடம் கோபமாக பேசாதீர்கள். குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க பழகுங்கள்.
- குழந்தைகள் நிறைய பேசுவார்கள். பேசும்போது தான் அவர்கள் மனநிலையை அவர்கள் பிரச்சினையை புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளை பேச அனுமதியுங்கள்.
- சில குழந்தைகள் பேசுவதே அரிதாக இருக்கும். தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள். பெரியவர்களை கண்டு அச்சப்படுவார்கள். அவர்களின் பயத்தை போக்க இயல்பாக பேசி பழகுங்கள். அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துங்கள்.
- பிரச்சினைகளை சந்திக்கும் குழந்தைகள் அதிகம் பயப்படுவார்கள். பயப்படும் குழந்தைகள் எதோ பிரச்சினையை தாக்குதலை சந்தித்திருக்க வாய்ப்புகள் அதிகம். எங்கிருந்து பயம் வந்தது என்று கண்டறிந்தால் எங்கிருந்து பிரச்சினை தொடங்கியது என எளிதில் கண்டறியலாம். தேவையெனில் மனநிலை நிபுணர்களை நாடலாம்.
- குழந்தைகளுக்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அதற்கு பயந்து பிரச்சினையை மூடி மறைக்க முயலாதீர்கள். தைரியமாக காவல் நிலையத்தை அணுகுங்கள். முடிந்தால் வழக்கறிஞரோடு செல்லுங்கள்.
- குழந்தைகள் விரும்பாத விஷியங்களை போட்டு திணிக்காதீர்கள்.
- ஆண் பிள்ளைகளை அடித்து வளர்க்குனும் பெண் பிள்ளைகளை மிரட்டி வளர்க்கனும் என்ற பழைய பஞ்சாங்குத்தை ஒரங்கட்டுங்கள்.
Be the first to comment on "பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்!"