மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராம்குமார் என்ற பார்வையற்ற வக்கீல் திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரெய்லி வடிவில் வெளியிட வேண்டுமென்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
உலகின் மிகத்தொன்மையான நூல் திருக்குறள். உலக அளவில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது திருக்குறள். இது வரை 107 க்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் பார்வையற்றோர் படிக்கும் வகையில் பிரெய்லி வடிவில் இதுவரை எந்த மொழியிலும் திருக்குறள் புத்தகம் வெளிவரவில்லை. இதனால் உலகம் முழுக்க உள்ள 250 மில்லியன் பார்வையற்றோர் மற்றவர் துணையின்றி திருக்குறளை படிக்க முடியாத சூழலில் உள்ளனர்.
இதையடுத்து, ராம்குமார் தொடர்ந்த வழக்கில், ” திருக்குறளை பிரெய்லி வடிவமைப்பில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் புத்தகமாக வெளியிட்டால் உலகம் முழுக்க 250 மில்லியன் பார்வையற்றோர் பயனடைவார்கள். கல்வி உரிமைச் சட்டபடி பார்வையற்றோரும் திருக்குறளை கற்றறிந்து பயனடையும் வகையில் பிரெய்லி புத்தகம் வெளியிடுவது அதிகாரிகளின் கடமை, ஆனால் அவர்களோ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் நீதிமன்றம் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் ” எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் எம். சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் தமிழ் மொழி மற்றும் கலாச்சார துறை முதன்மைச் செயலர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர், தமிழ்நாடு பார்வையற்றோர் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்குப் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 13க்குத் தள்ளிவைத்தனர்.

Be the first to comment on "பிரெய்லி வடிவ புத்தகமாகத் திருக்குறள் வெளிவந்தால் 250 மில்லியன் பார்வையற்றோர் பயனடைவார்கள்!"