இந்த ஆண்டு முதல் தமிழகம் முழுக்க பிளாஸ்டிக் தடை உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு. அதன் படி வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்து கடைகளுக்குச் செல்லும்போது வீட்டிலிலுள்ள துணி பையையும், பாத்திரங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியது.
அறிவுறுத்தி என்ன பயன் ?
தமிழகத்தை பொறுத்தவரை எதற்கு தடை விதித்தாலும் அது வீண் தான். எதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்து தடைவிதிக்கப்பட்ட செயல்களை மீண்டும் சட்டவிரோதமாக செய்வது தமிழர்களுக்குப் பழக்கப் பட்ட ஒன்று.
தற்போது பிளாஸ்டிக் தடை விவகாரத்திலும் அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. தடை விதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருந்த பொதுமக்கள் அடுத்த சில நாட்களிலயே பழையபடி மாறிவிட்டனர். அரசும் கெடுபிடி போட்டு பார்த்தது. ஆனால் நம் மக்களிடையே எதுவும் பலிக்கவில்லை.
சட்டத்தை, அரசு விதித்த தடையை (நியாயமான தடை) மதிப்பது நம் கடமை. அவற்றை பின்பற்றாமலிருப்பது நமக்கான மரியாதையை நாமளே குறைத்துக் கொள்வதற்குச் சமமானது என்பதை எப்போது தான் தமிழக மக்கள் உணர்வார்களோ என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் இணையதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Be the first to comment on "பிளாஸ்டிக் தடையை மதிக்காத தமிழக மக்கள்!"