செருப்பு வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் இரண்டரை அடி உயரமுள்ள நாகேஷ்…
க்ளவுனிங் டாக்டர் மாயா…
தேசிய அமைப்பொன்றால் அங்கீகரிக்கப்பட்ட
கிப்ட் நிவேதா…
பார்வை இல்லாதபோதும் ஜூடோ பயிற்சியாளராக இருக்கும் மனோகரன்…
குழந்தை காவலன் தேவநேயன்…
சாலை சாப்ளின் வீரமணி…
புனித பயணம் மேற்கொள்ளும் மருத்துவர் அனுரத்னா…
மாற்றும் திறனாளி போராளி தீபக்…
பிச்சைக்காரர்களுக்கு ஆதரவு தரும் நவீன்…
விளிம்பு நிலை மக்களுக்காக அதிகாரத்தின் கதவுகளை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்கும் அருள்தாஸ்…
சிறப்பு குழந்தைகளின் இதயத்தில் இடம்பெற்றிருக்கும் வானதி…
பிரச்சினைகளை காதுகொடுத்து கேட்கும் அருண்…
எந்த உயிருக்கும் பசி இருக்கும் என்பதை உணர்ந்து தினமும் தெருநாய்களுக்கு சமைத்து தரும் ஜோதி…
நிழலை தேடி அலையக் கூடாது என்பதற்காக தொடர்ந்து மரக்கன்றுகள் ஊன்றி வளர்த்து வரும் ஜவுளி வியாபாரி ஏழுமலை…
300 பசங்கள படிக்க வைக்கும் கல்வித்தாய் உமா மகேஸ்வரி…
ஆள் இல்லா நூலகத்தை 67 இடங்களில் நடத்தி வரும் மகேந்திரகுமார்…
ஆதரவற்ற பல சடலங்களை புதைக்கும் ஜெய்சங்கர்…
ஏழைகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யும் பாரிகுமார்…
மாற்றுத் திறனாளிகளுக்கு job fair நடத்தி ட்ரெயினிங் கொடுக்கும் ராகவி…
சென்னை, காஞ்சிபுரம் உள்பட 61 இடங்களில் `அறிவுச்சுடர்’ என்ற பெயரில் மாலை நேரக் கல்விநிலையம் நடத்தி வரும் இளைஞர்கள்…
யார் இந்த மனிதர்கள்? இவர்களால் எப்படி இது முடிகிறது? என்று வியக்க வைக்கிறது ஆனந்த விகடனில் வெளிவந்த தமிழ்பிரபாவின் தெய்வத்தால் ஆகாதெனினும் தொடர். நம்பிக்கை அளிக்க கூடிய சுயமுன்னேற்ற புத்தகங்களை எவ்வளவோ படித்திருப்போம். ஆனால் தெய்வத்தால் ஆகாதெனினும் தொடர் சற்றே வித்யாசமாக இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த தொடரை வாசிக்க வேண்டும்.
Be the first to comment on "தமிழ்பிரபாவின் “தெய்வத்தால் ஆகாதெனினும்” தொடரை ஏன் படிக்க வேண்டும்?"