வேலைக்காரன் இது உழைப்பாளிகளின் படம்!

VelaikaranVelaikaran

யாருக்கு இந்த படம்?

ஓடி ஓடி உழைத்துவிட்டு அதற்குத்தகுந்த பலனை பெறாமல் காலங்காலமாக அறியாமையால் ஏமாந்துகொண்டு வறுமையின் வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் உழைப்பாளிகள் தங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய படம். படத்திற்குள் அவ்வளவு விஷியம் இருக்கிறது.

எழு வேலைக்காரா இன்றே!

உழைக்கும் வர்க்கமே உஷாரா இரு என்று சிவகார்த்திகேயன் மூலமாக பெரிய மணி அடித்து பாமர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் மோகன்ராஜா.

வறுமை

பீச் ஓரம் நின்றுகொண்டிருக்கும் விலையுயர்ந்த காரில் சிறுவன் ஒருவன் நீளமான கீறலை போட, அந்த கீறலில் இருந்து படம் துவங்குகிறது. அந்த கீறல் தான் வறுமைகோட்டிற்கு மேல் வாழ்பவன், வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்பவன் என்ற இருதரப்பட்ட மனிதனை எடுத்துரைக்கிறது.

வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்பவன் உடலை உருக்கி சென்னையை உருவாக்கியவன். உழைத்து உழைத்து கருத்துப்போனவன். ஆனால் அவனை இந்த சமூகம் ஒதுக்குப்புறத்தில் வைத்திருக்கிறது வாழும் இடத்திற்கு பட்டாகூட பெறமுடியாத கூலியாளாக!

அதிகாரம்

கூலிக்கு பிறந்தவன் கூலியாகத் தான் சாக வேண்டும் என்று அடித்து அடிமையாக்கும் அதிகாரம் நம்மிடம் வேலைவாங்கிவிட்டு நம்மையே ஏமாத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் அதை அறியாமல் ஏமாளியாகவே வாழ்ந்து வருகிறோம். இதற்கு என்ன காரணம் என்பதை,

” உலகத்துல ரொம்ப கொடுமையான விஷியங்கள் இரண்டு இருக்கு… ஒன்னு அறியாமையோட இருக்கறது! இன்னொன்னு அந்த அறியாமைய அறியாம இருக்கறது! ” என்ற வசனம் உணர்த்திவிடுகிறது.

எப்படி ஏமாறுகிறோம்?

நாம் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் மாசக்கடைசியில் வெறுங்கையுடன் தான் உட்கார்ந்திருக்கோம். அதற்கு காரணம், ஆடம்பரத்திற்காக  தேவையற்ற பொருள்கள் வாங்குவது, நஞ்சுமிக்க உணவுகளை வாங்கித்தின்னுவிட்டு மாங்கு மாங்கு என்று உழைத்து சம்பாதித்த பணத்தை மருத்துவர்களுக்கு கொடுப்பது போன்ற அறிவற்ற செயல்கள் தான். இது தெரிந்த விஷியம் தானே என்று அலட்சியம் செய்யவும் முடியாது. கட்டுப்பாடாக இருக்க முயன்றாலும் இருக்க முடியாது. இந்த மார்க்கெட்டிங் நம்மளை நிம்மதியாக இருக்கவிடாது. தொலைக்காட்சிகளில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து நஞ்சுமிக்க உணவுகளை வாங்கி உண்டு உழைக்கும் உடலை கெடுத்துக்கொள்கிறோம். சிவனேன்னு பஸ்ஸில் அமர்ந்திருக்கும் வடிவேலுவிடம், தம்பி ராமையா பேப்பர்பந்தை மதுர மல்லியாக விற்பாரே அதுபோல!

நாம் திருந்துவோமா?

இதுபோல சமுதாயத்திற்கு தேவையான பல நல்ல விஷியங்களை படத்தில் சொல்லியிருக்கிறார்கள். சொல்லியும் என்ன பயன்? தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோர்கள் இண்டர்வெல்லின்போதும் படம் முடிந்து வெளியே வந்த பிறகும் தங்கள் குழந்தைகளுக்கு  பாய்ஸன் நிரம்பிய பானங்களையும், லேசி ஆக்கும் லேய்ஸையும் வாங்கித்தந்தார்களே! இவர்களை என்னவென்று சொல்வது? படத்தில் இன்னொரு வசனம் வரும்,
” நாட்ட திருத்தி நமக்கு நல்லது செய்ய கலாம் வரணும், கெஜ்ரிவால் வரணும்னு சொல்லிட்டு இருக்கோம்… ஆனா நம்மள நாம திருத்திக்கிட்டா மட்டும்தான் நாடு முன்னேறும்னு இந்த முட்டாள்ஜனங்க புரிஞ்சுக்க இன்னும் நூறு வருசம் ஆகும் ” என்று. இது நூறு சதவீதம் உண்மை தான்!

நம்மை நாம் திருத்திக்கொள்ள முற்படலாமே! நாடு தானாக முன்னேறும்!

Related Articles

சு. தமிழ்ச்செல்வியின் கீதாரி புத்தக விமர... இயக்குனர் சமுத்திரக்கனியின் கிட்ணா படம் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை கதை என்று அங்கும் இங்குமாக அரசல்...
தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந... கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான அற...
உடல்நிலை சரியில்லாத போதும் ரயில் விபத்தை... பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற கடவுள் வருவாரா? என்பது சந்தேகம் தான். ஆனால் கடவுள் போல் வந்து காப்பாற்ற ஒரு சாமானியன் இருப்பான் என்பதற்கேற்ப கர்...
தமிழ் நாட்டின் முதல் பெண் டைரக்டர் டி. ப... ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் 1911 ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். சொந்த ஊர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு. தந்தை பஞ்சாபகேச அய்யர், கிராம கணக்க...

Be the first to comment on "வேலைக்காரன் இது உழைப்பாளிகளின் படம்!"

Leave a comment

Your email address will not be published.


*