டெல்லி – மீரட் இடையே இந்தியாவின் முதல் 14 லேன்(Lane) திறக்கப்பட்டது

டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மீரட்டுக்கு செல்லும் அதிவேக சாலை பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. 149 கிலோ மீட்டர்கள் தொலைவு உள்ள இந்த இரு நகரங்களையும் இணைக்கும் திட்டம் 11000 கோடி செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் 14 வழிப்பாதை என்ற பெருமையை இந்த வழித்தடம் பெற்றிருக்கிறது. 30 மாதங்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் 18 மாதங்களிலேயே முடிக்கப்பட்டு இருக்கிறது. மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் வரைக்கும் இந்தச் சாலையில் செல்லலாம், இதனால் நாற்பத்து ஐந்து நிமிடங்களில் செல்லக்கூடிய தூரத்தை எட்டு நிமிடங்களில் செல்லலாம்.

841 கோடி செலவில் முதல் அலகான டெல்லி – மீரட் அதிவேகப்பாதை போட்டு முடிக்கப்பட்டு இருக்கிறது. மீரட் வரையிலும் ஆறு வழிப்பாதையாக்கவும், அதன்பிறகு எட்டு வழிப்பாதையாக்கவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சைக்கிளில் செல்பவர்களுக்காக 2.5 மீட்டர்களுக்கு தனியொரு தடமும், நடந்து செல்பவர்களுக்காக 1.5 மீட்டர்களுக்கு தனியொரு தடமும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வழித்தடம் முழுவதும் சூரிய மின் விளக்குகளும், மழை நீர் சேகரிப்பு வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

 

பல்வேறு வசதிகளைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலை

இந்தத் திட்டம் முழுவதுமாக நிறைவேறும் பட்சத்தில் தற்போது டெல்லி – மீரட் இடையேயான பயண தூரமான 4 – 5 மணி நேரம் என்பது குறைந்து 45 நிமிடங்களில் போய் சேரலாம் என்ற நிலை வரும். மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து இந்த வழித்தடம் கண்காணிக்கப்படும்.

இந்தத் திட்டத்தினால் டெல்லியின் மாசு அளவு 27 சதவீதம் வரைக்கும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூரிய மின் சக்தி விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு வசதிகொண்ட ஒரே தேசிய நெடுஞ்சாலை என்ற பெருமையை இந்த வழித்தடம் பெறும்.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட், உத்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் 50000  வாகனங்களை நாளொன்றுக்கு டெல்லியில் இருந்து  அனுப்பும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அப்படிச் செய்யும் அச்சத்தில் பெருமளவில் மாசு குறையும்.

Related Articles

பெங்களூரு விமான நிலைய பேருந்துகளில் இனி ... பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (BMTC) சார்பில் பல்வேறு வழித்தடங்களில் விமான நிலையத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது பயணிகளின் எண்ணிக...
செய்தி ஊடகங்களில் பணியாற்றுவது எவ்வளவு ச... 6 மெழுகுவர்த்திகள் என்கிற ஒரு படம். அந்த படத்தில் தன்னிடம் இருக்கும் உண்மைகளை எங்கே போய் சொல்வது என்று தெரியாமல் ஒரு ஜீவன் தவித்துக் கொண்டிருக்க அப்போ...
தானா சேர்ந்த கூட்டம் – சினிமா விமர... தயாரிப்பு: ஸ்டூடியோ கிரீன் இயக்கம்: விக்னேஷ் சிவன் மூலக்கதை: ஸ்பெசல்26 ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன் இசை: அனிருத் நடிகர்கள்: சூர்யா, கார்த்திக், க...
பாஜகவை வீழ்த்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்ச... 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக, பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்ச...

Be the first to comment on "டெல்லி – மீரட் இடையே இந்தியாவின் முதல் 14 லேன்(Lane) திறக்கப்பட்டது"

Leave a comment

Your email address will not be published.


*