#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரா மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்!

swami vijayendra saraswathi

நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்
ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி
விஜயேந்திரர்.

நேற்று சென்னையில் நடைபெற்ற பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை எழுதிய தமிழ்
– சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் உட்பட பலர் கலந்து
கொண்டனர். அப்போது ஒலித்த தேசிய கீதத்துக்கு அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால்
தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த,
விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல் என்று மண்டியிட்டு மன்னிப்புக்கேள் என்றும் விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு, ஆண்டாள் தாயை அவமதித்ததாக கூறி வைரமுத்துவுக்கு கண்டனம்
எழுந்தது. வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலர் குரலெழுப்பி வந்தனர்.  இப்போது
தமிழ்த்தாயை விஜயேந்திரர் அவமதித்தது வைரமுத்துவை அவமதிக்கும் நோக்கில்
வேண்டுமென்றே தமிழ்த்தாயை அவமதித்ததாக வலை தளங்களில் பேச்சு அடிபடுகிறது. ஆனால்
விஜயேந்திரர் தரப்போ, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது அவர் தியான நிலையில்
இருந்ததாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தின் போது சங்கராச்சாரியார்கள் எழுந்து நிற்கும் மரபு இல்லை என்றும் கூறுகிறது. இந்த பதிலுக்கும், நெட்டிசன்கள்,

“இது ஒரு காரணமா, தள்ளாத வயசுல இருக்குறவங்ககூட தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிச்சா
தன்னையறியாம எழுந்து நிப்பாங்க”

என்று தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

வைரமுத்து, ஸ்டாலின் கருத்து?

இது குறித்து வைரமுத்து,

தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை
மதிப்பது இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை என்று வைரமுத்துவும், தமிழ்த்தாய்
வாழ்த்தின்போது தியானம் இருந்த விஜேயந்திரர், தேசியகீதம் பாடும் போது ஏன்
தியானிக்கவில்லை என்று மு.க. ஸ்டாலினும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

தீண்டாமை

நிகழ்ச்சியில் விஜயேந்திரர் மற்றவர்களை தள்ளி வைக்கும் பொறுட்டு மேடை அமைத்து தனியாக அமர்ந்திருந்தார். இது தீண்டாமை சட்டத்தின்படி தண்டனைக்குரியது என்றும் அதை கவனிக்க வேண்டிய ஆளுநர் அதே மேடையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து,

“தீண்டாமை சட்டப்படி குற்றமெனில், அதை பகிரங்கமாகச் செய்யும் சங்கராச்சாரியை கைது செய் அரசே”  என்று விசிக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கருத்து கூறியுள்ளார்.

யாரை கைது செய்தது அரசு?

ஆனால் காவல் படையோ, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த பாலபெரியவா விஜயேந்திரருக்கு
எதிராக போராட்டம் நடத்தியவர்களை கோவையில் கைது செய்துள்ளது. தமிழ்த்தாயை
அவமதித்ததையொட்டி விஜயேந்திரர் மீது பலர் வழக்கு தொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்போதைய சூழலுக்கு தகுந்த,

“தாயைப் பழித்தவனை யார்  தடுத்தாலும் விடாதே. தமிழைத் பழித்தவனை தாயே தடுத்தாலும்  விடாதே!”

என்ற பாரதிதாசனின் வரிகளை மேற்கோளாக வைத்து மண்டியிட்டு மன்னிப்புக்கேள் என்கிறது
தமிழகம்.

Related Articles

தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்திய படங்கள்!... எங்க எந்த தப்பு நடந்தாலும் நான் தட்டிக் கேட்பேன்... கண்ணு முன்னாடி நடக்குற அநியாயத்த யார் தடுத்தாலும் தட்டிக் கேட்பேன்... மத்தவங்கள மாதிரி சுயநலமா என்...
தினேஷுக்கு தேசிய விருது கிடைக்குமா? இரண்... தயாரிப்பு : நீலம் புரொடக்சன்ஸ்தயாரிப்பாளர் : இயக்குனர் பா. ரஞ்சித்எழுத்து இயக்கம் : அதியன் ஆதிரைஇசை : டென்மாஒளிப்பதிவு : கிஷோர் குமார்...
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்!... இந்தியாவிலயே தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகித்து வருகிறது. உடல் தானம் அதிகம் செய்யும் மாநிலம்  என்பதற்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதற்...
Vikatan Awards – Zee Awards –... Zee Cine Awards Tamil 2020Best actor - Dhanush (Asuran) Favourite actor - Vijay (Bigil) Sridevi inspiring woman of indian cinema award - N...

Be the first to comment on "#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரா மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்!"

Leave a comment

Your email address will not be published.


*