37 ஆண்டுகளாகத் தினம் ஒரு மரம் நட்டுவரும் வனமனிதன்

Tree

காட்டை அழிப்பது இன்று லாபம் ஈட்டும் தொழில். கட்சி வித்தியாசம் இல்லாமல் பாரபட்சம் இன்றி  காடுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. ஆனால் முப்பத்து ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு மரம் வீதம் நட்டுவரும் ஒரு மனிதனை நீங்கள் அறிவீர்களா? தான் வாழும் பகுதியில் ஒரு பெரும் வனத்தையே உருவாக்கி அசத்தியிருக்கிறார் அந்த வனமனிதர்.

வனமனிதன்

பதின்ம வயதில் இருந்தே, அதாவது முப்பது  வருடங்களாக ஜாதவ் என்று அழைக்கப்படும் அவர் மரங்கள் நட்டு வருகிறார். இயற்கைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், வனவிலங்குகளுக்கான வாழ்விடம் உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கமும் சேர்ந்து அவரை ஒரு வனம் உருவாக்கும் அளவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. தான் பிறந்த அச்சாம் மாநிலத்தில் உள்ள வனாந்தரத்தில் மரங்கள் நட்டு வைக்கத் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் கொள்ளை லாபத்துக்காக மரங்கள் வெட்டுபவர்களையும் எதிர்த்து அவர் போராடி வருகிறார்.

வனத்துக்காக வாழ்வு அர்ப்பணம்

மரங்கள் நட்டு வைக்க வைக்க அது ஒரு பெரும் வனமாகக் கண் முன்னே உருவாகி வருவதைப் பார்த்த ஜாதவ், தன் ஒட்டுமொத்த வாழ்வையே அந்த வனத்தை உருவாக்கவும், பராமரிக்கவும் ஜாதவ் முடிவு செய்தார். அவர் முடிவின் படி முப்பத்து ஏழு ஆண்டுகளாகத் தான் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி வந்த வனத்துக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தும் இருக்கிறார். ஒரு புதிய சுற்றுச்சூழலையே உருவாக்கியும் இருக்கிறார். இப்போது அந்த வனம் 1360 ஏக்கர்கள் அளவுக்குப் பரந்து விரிந்து இருக்கிறது.

முன்கதை சுருக்கம்

ஜாதவ் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு அவரது பதினேழு வயதில் நடந்தது. ஒரு பெரு வெள்ளத்திற்குப் பிறகு, தன் வீட்டிற்கு அருகே இருக்கும் மணல் பகுதிகளில் நிறையப் பாம்புகள் செத்துக் கிடந்தன. நிறைய ஊர்வன இறந்து கிடந்தன. இந்தச் சித்திரத்தை பார்த்த ஜாதாவின் மனதில் சஞ்சலம். அவற்றிற்கான ஒரு வாழ்விடம், வசிப்பிடம் உருவாக்குவதென முடிவு செய்தார்.

‘பாம்புகள் இறந்து கிடந்தன, அவை மிதமிஞ்சிய சூட்டின் காரணமாக இறந்தன. நிழல் தர அங்கே மரங்கள் இல்லை. உயிரற்ற அந்த வடிவங்களின் முன்பு நான் அமர்ந்து அழுதேன். நிச்சயமாகச் சொல்ல முடியும். அது ஒரு படுகொலை. வனத்துறையை அணுகி அவ்விடத்தில் ஏதாவது மரம் வளர்க்க முடியுமா என்று கேட்டேன், அவர்கள் இந்நிலத்தில் எதுவுமே வளராது. வேண்டுமென்றால் மூங்கில் வைத்துப் பார் என்று முடித்துக்கொண்டனர். மூங்கில் வளர்ப்பது எளிதான காரியமாக இல்லை. ஆனாலும் நான் அதைச் செய்தேன்.யாருக்கும் இதில் ஆர்வம் இல்லை. யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை என்கிறார்’ ஜாதவ்.

சர்வ நிச்சயமாக அவர் சுற்றுச்சூழல் சொர்க்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும், சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணம் இது. இன்று ஜாதவ் உருவாக்கிய காட்டில் 115 யானைகள், காண்டா மிருகங்களும், மான்களும், இரண்டு புலிகளும் வசித்து வருகின்றன.

தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் எதிர்மறை செய்திகளையே வாசித்து வருகிறோம். நாட்டில் எந்த நல்லதும் நடக்காதது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. உண்மையில் ஜாதவ் போன்ற அசல் நாயகர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர் மீது வெளிச்சம் பாய்ச்சுவோம், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் அவரை கொண்டு சேர்ப்போம்.

Related Articles

செல்போன்களிடம் இருந்து குழந்தையை பாதுகாப... Nomophobia (No mobile phobia) என்ற புது விதமான மன நோய்,  இப்போது உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது. இந்த மாதிரியான மனநோய் குறைபாடு உள்ள குழந்தை...
தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந... கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான அற...
ராஜஸ்தானில் புழுதி புயலுக்கு 27 பேர் பலி... ராஜஸ்தான் மாநிலம் அல்வர், பரத்பூர் மற்றும் தோல்பூர் மாவட்டங்களை நேற்று (புதன்கிழமை) புழுதி புயல் கடுமையாகத் தாக்கியது. இதில் 27 பேர் பலியாகியும், 100 ...
உடம்பை விட்டு வெளியே வந்தாத்தான் பொம்பளை... முருகன், பார்வதி, மித்தாலி சட்டர்ஜி, பள்ளி முதல்வர் ஃப்ரான்சிஸ் தாமஸ், காயத்ரி, முகமது ரஸூல், நிக்கி, ரத்னம், வள்ளி, கான்ஸ்டபிள், ஓங்கே மொழிபெயர்ப்பாள...

Be the first to comment on "37 ஆண்டுகளாகத் தினம் ஒரு மரம் நட்டுவரும் வனமனிதன்"

Leave a comment

Your email address will not be published.


*