இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது! வைரமுத்துவும் எஸ்பி.பியும் வாழ்த்து தெரிவிக்க, கடுமையாக விமர்சிக்கிறார் பாரதிராஜா ! அரசியல் லாபத்திற்காக இளையராஜாவுக்கு இந்த விருது?

pandma bhushan

கடந்த ஜனவரி 25ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது வழங்க
இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனையடுத்து இளையராஜாவுக்கு பலர் வாழ்த்து
தெரிவித்து வந்தாலும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

வாழ்த்துக்களும் விமர்சனங்களும்

இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது என்றதும் கமல் முதல் ஆளாக முந்திக்கொண்டு, தாமதாக கிடைத்தாலும் வாழ்த்துக்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டார். ரஜினியும் போன் மூலமாக
வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார். இன்னும் பலர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தாலும், இந்த விருதை நியாயப்படி நீங்கள் நிராகரிக்க வேண்டும். எப்பவோ வந்து சேர்ந்திருக்க வேண்டிய விருது இப்போது உங்களை தேடி வருவதற்கு காரணம் அரசியல் லாபத்திற்காக மட்டுமே. உங்களுக்கு விருது கொடுப்பதன் மூலம் தமிழர்களின் மனதை கவர்ந்துவிடலாம் என்ற கணக்குப் போட்டுத்தான் உங்களுக்கு இந்த விருதை அறிவித்திருக்கிறார்கள் என்று சிலர் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் பொங்கி எழுந்தனர். இது போன்ற கருத்துக்கள் நிச்சயம் எழும் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. ஆனால் யாரும் வைரமுத்து, எஸ்.பி.பியின் வாழ்த்துக்களையும் பாரதிராஜாவின் விமர்சனத்தையும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

விஜயகாந்த் நடிப்பில் மனோபாலா இயக்கிய “சிறைப்பறவை” படத்தில்

‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்’ பாடல் தான் இளையராஜா, வைரமுத்து இருவரும்
கடைசியாக சேர்ந்து பணியாற்றிய பாடல். இருவரும் இணைந்து பணியாற்றி 31 ஆண்டுகள்
ஆகிறது. தற்போது இளையராஜா பத்மவிபூசண் விருது பெற்றதை அடுத்து, வைரமுத்து கவிதை
மூலமாக வாழ்த்தியிருப்பது இணைவரும் கூடியவிரைவில் இணைய இருக்கிறார்கள் என்பதை
உணர்த்துகிறது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும்

“மாமனிதன்” படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக்
கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு காப்பிரைட் பிரச்சினை காரணமாக பாடகர் எஸ்.பி. பிக்கும்
இளையராஜாவுக்கும் இடையே லேசான பிளவு ஏற்பட்டது. இருப்பினும் தற்போது

இளையராஜாவுக்கு விருது கிடைத்ததற்காக தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
எஸ்.பி.பி.

இப்படி ஜாம்பவான்களின் வாழ்த்துக்கள் ஒருபுறமிருக்க, ஆங்கில பத்திரிக்கை ஒன்று
இளையராஜாவின் ஜாதியை குறிப்பிட்டு எழுதியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த செய்தி
வருத்தத்தை உண்டாக்குவதாக இயக்குநர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
நடிகை கஸ்தூரியோ அந்த நாளிதழ் மேல் காரித்துப்பி கிழித்து எரிந்துவிட்டார். அந்த வீடியோ
சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவர்கள் எல்லோரும் இளையராஜா விருது விஷியத்தில்
கீழ்த்தனமாக நடந்துகொண்ட செய்தித்தாளை விமர்சிக்க, இயக்குநர் பாரதிராஜாவோ
இளையராஜாவை

“இளையராஜா ஐயராக மாற நினைக்கிறார். மூலத்தை மறந்துவிட்டு புதிய வேடமிடுவது தவறு”
என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது இளையராஜா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பாரதிராஜா, இளையராஜாவுக்கு
உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்றதும் காழ்ப்புணர்ச்சியில் கொந்தளிக்கிறார் என்றும்,
இளையராஜாவுக்கு விருது கொடுத்ததே வைரமுத்துவுக்கு எதிராக எழுந்த பிரச்சினையை
ஈடுகட்டுவதற்குத்தான் என்றும், இளையராஜாவுக்கு விருது கொடுத்து, கங்கை அமரனைப் போல
இளையராஜாவையும் தன் பக்கம் இழுத்துவிடலாம் என்று பா.ஜ.க அரசு நினைத்துள்ளது என்றும்
பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தத்தில்
இளையராஜாவுக்கு இந்த விருது மிகமிக தாமதம் என்பது மட்டும் உண்மை.

Related Articles

தியேட்டர் கிடைக்காததால் இணையத்தில் வெளிய... வருகிற 10 ம் தேதி ரஜினியின் பேட்ட மற்றும் அஜீத்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது நமக்கு தெரிந்த விஷியமே. இப்போது அந்தப் படங்களுடன் சேர்த்...
நமது மாநில மரமான பனை மரங்களின் சிறப்பம்ச... கோடை காலம் வந்துவிட்டது. சாலையோரங்களில் நுங்கு விற்பனையாளர்களை காண முடிகிறது. ஒரு நுங்கின் விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. இளம் பருவத்தில் நண்பர்கள...
இரா. பார்த்திபன் ஒரு பார்வை! – காந... இப்போது வரும் இளம் தலைமுறையினர் ஏதாவது ஒரு சின்ன விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டாள், ஏதோ அவர்கள் பெரிய சாதனையை படைத்து விட்டது போல், உடனடியாக அடுத்தவர்க...
உலக சினிமா “பெண் இயக்குனர்கள̶்... 1.Lee jeong hyang (The way home) 1964இல் தென்கொரியாவில் பிறந்தார்.  அங்கிருக்கும் ஜோன் பல்கலைக்கழகத்தில் பிரஞ்ச் இலக்கியம் படித்த பின் திரைப்பட கலைகள...

Be the first to comment on "இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது! வைரமுத்துவும் எஸ்பி.பியும் வாழ்த்து தெரிவிக்க, கடுமையாக விமர்சிக்கிறார் பாரதிராஜா ! அரசியல் லாபத்திற்காக இளையராஜாவுக்கு இந்த விருது?"

Leave a comment

Your email address will not be published.


*