ராம், மிஷ்கின், பூர்ணிமா மூவரும் அறிமுகக்காட்சியிலயே சிக்சர் அடிக்கின்றனர். எப்போதும் பொய்யும் எகத்தாளமும் பேசித்திரியும் பிச்சையாக ராம். ஒரு காமெடி படத்திற்கு இவ்வளவு கடின உழைப்பு தேவையா ராம் என கேள்வி கேட்க வைக்கிறது ராமின் நடிப்பு. வயிறு குலுங்க ஓடும் காட்சி, வாயிக்குள் மண்ணை போட்டுக்கொள்ளும் காட்சி, “நீ ஓடு நான் துரத்தி பிடிக்கிறேன்” சீக்வன்ஸ், வலியுடன் சைக்கிள் ஓட்டிச்செல்லும் காட்சி, அப்பாவுக்கு சண்டை போட தெரியாதுடா என்று உருகும் காட்சி என்று ராமின் நடிப்பு செம. லவ் யூ ராம்!
எதுக்கெடுத்தாலும் கோபம் கொண்டு கூட இருப்பவனை அடித்துக்கொண்டு, டேய் என்று காட்டுக்கத்து கத்திக்கொண்டு, ராமை துரத்தும் காட்சியிலும், மண்தரையை வெட்டும் காட்சியிலும் மிஷ்கின் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக அவளை விட்ரு என்று கெஞ்சும்போது அதை தோளை உலுக்கி அலட்சியம் செய்யும் காட்சி செம. ஆமா ஐஸ் கிரீம் சாப்பிட்ட பொண்ண எதுக்கு அப்பிடி முறைச்சிங்க மிஷ்கின்? மஞ்ச கலர் ஷேரி கட்டியிருந்ததானலயா?
பூர்ணிமாவுக்கு இது பெயர் சொல்லும் படம். நிறைய பழமொழிகள் சொல்லி சிரிக்க வைக்கிறார். ஆங்காங்கே அவருடைய வசன உச்சரிப்பு சரண்யா பொன்வண்ணனை நினைவுக்கு கொண்டு வருகிறது.
அரோல் கரோலியின் இசை படத்தின் இன்னொரு ஹீரோ. மிஷ்கின் இருக்கும் படம் முழுக்க வெளிச்சமா? ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள். முதல் பாகத்தின் பல இடங்களில் சிரித்தாலும் சில இடங்களில் உச் கொட்டாமல் இருக்க முடியவில்லை. இரண்டாம் பாதி நல்ல சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட். பொய்யாமொழி தேனிர் கடை, பரிசுத்தம் மிதிவண்டி கடை, சாபம் கொடுத்துவிட்டு அவரே உதவும் காட்சி, கணவனை வெட்ட இருக்கும் கத்தியால் தொப்புள்கொடி அறுக்கும் காட்சிகளில் எழுத்தாளர் மிஷ்கின் நிற்கிறார்!
சுதந்திர போராட்ட தியாகி பிச்சையெடுக்கும் காட்சி, தமிழச்சியின் அண்ணாந்து பார் பாடல் காட்சிகளில் அழுகை வந்துவிடும். மொத்தத்தில் குறைவான பட்ஜெட்டில் எல்லோரும் ரசிக்கும் வகையில் எளிமையான படம் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா. அழகான காமெடி படம்!
Be the first to comment on "சுதந்திர போராட்ட தியாகி பிச்சை எடுக்கிறார்!"