அப்துல்கலாம் பெயரை வைத்து அரசியல் செய்யாதீங்க!

kamal-politics-starts-from-abdul-kalam-house

மற்றவரின் புகழை வைத்து அரசியலை செய்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. எங்கள் ஆட்சி, அண்ணா ஆட்சி என்றும் , எம்.ஜி.ஆர் ஆட்சி என்றும், காமராசரை மிஞ்சிய ஆட்சி என்றும் பெருமை பேசி முன்னோர்களின் புகழை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் இறுதி ஊர்வல மாதிரியை வைத்தும், அப்பல்லோவில் அவர் சிகிச்சை பெற்று வந்த சர்ச்சைக்குள்ளான வீடியோ ஆதாரங்களை வைத்தும் கேவலமான அரசியல் நாடகம் அரங்கேறியது. இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் அப்துல்கலாம் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

இந்த அரசியல் பயணம்,அப்துல்கலாம் மறைவின்போதும், அப்துல்கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழாவின் போதும் தொடங்கியது. அவர் மறைந்த சில நாட்களில் அவருடைய பெயரில் கட்சி தொடங்க இருந்தது. ஆனால் அதற்கு கலாமின் குடும்ப உறுப்பினர் இடம் கொடுக்கவில்லை. அடுத்ததாக அவர் சிலை அருகே, திருக்குறள் தான் இருக்க வேண்டும், குர்ஆன் தான் இருக்க வேண்டும், பைபிளும் பகவத்கீதை இருந்தால் தப்பில்லை என்றும் ஆளாளுக்கு மோதிக்கொண்டு, புனிதமான இடத்திலும் கேவலமான செயல்களை செய்யத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக பலரும் பலவிதமாக அவருடைய பெயரை பலவிதமான செயல்களுக்கு பயன்படுத்துவது பலர் மனதை புண்படுத்துவது மட்டுமின்றி அப்பழுக்கற்ற கலாமை அவமதிப்பதாகவே அமைகிறது. கலாமின் பெயரில் இயங்கும் ஒருசில இயக்கங்கள் ஆக்கபூர்வமான பணியை செய்தபோதிலும், பல நிறுவனங்கள் வெளியே கலாம் பெயரை வைத்துக்கொண்டு உள்ளே மோசடி வேலை செய்து வருகிறது. இவற்றை அறவே தடுக்க வேண்டும்.

இப்போது இந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசனும் இணைந்துவிடுவாரோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. கமல் நேர்மையான மனிதர் என்று பலரால் பாராட்டப் பெற்றாலும், அவர் அப்துல்கலாமை பின்பற்றுபவராக இருந்தாலும், அப்துல்கலாமின் மறைவின் போது மனமுருகி நீண்ட கவிதை எழுதியிருந்தாலும், வருகிற பிப்ரவரி 21ம் தேதி கலாம் வாழ்ந்த இராமநாதபுர இல்லத்திலிருந்து என் அரசியல் பயணத்தை தொடங்குவேன் என்று கூறியிருப்பதை பலர் ஏற்கத்தயாராக இல்லை. எதிர்ப்புகள் தான் குவிந்து வருகிறது. கமலின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், நாளைக்கு வருகிற போகிற தராதரமற்ற மனிதர்கள் எல்லாம் [ கவண் படத்தில் வந்த “புறா”நானூறு  அமைச்சர்கள் போல சில மனிதர்கள் ]  கமலை சுட்டிக்காட்டி, கலாம் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யத் தொடங்கிவிடுவார்கள் என்பதே சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

Related Articles

நமக்கொரு பீடி தாத்தா கிடைத்தால் நம் வாழ்... சார்பட்டா படத்தில் இடம்பெற்றிருந்த எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதில் "நச்" என நிற்கின்றன. அதில் மிக முக்கியமான கதாபாத்திரம் பீடி ராயப்பன் கதாபாத்திரம...
பேட்ட – மரண மாஸ் பாடல் வரிகளும் இச... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. ரஜினி படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்பதாலும் அனிருத் இசை என்பதாலும் படத...
12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது ... 12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக...
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் க... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தச் சீசனில் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. இரண்டு ஆண்டுத் தடை காலத்துக்குப் பிறகு அண...

Be the first to comment on "அப்துல்கலாம் பெயரை வைத்து அரசியல் செய்யாதீங்க!"

Leave a comment

Your email address will not be published.


*