காலா டீசர் – நெருப்புடா என்றது கபாலி… கருப்புடா என்கிறது காலா…

kaala movie teaser

மார்ச்1ம் தேதி காலை பதினொரு மணிக்கு காலா டீசர் ரிலீஸ் என்ற அறிவிப்பை வெளியிட்டது காலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ். அதனைத்தொடர்ந்து  ரஜினி மற்றும் ரஞ்சித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதியின் இறப்பு காரணமாக திடீரென டீசர் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். சமூகவலைதளங்களில் சகட்டுமேனிக்கு வறுத்து எடுக்க தொடங்கிவிட்டனர். இதனையடுத்து நள்ளிரவு பண்ணிரண்டு மணி அளவில் காலா டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

காலா – என்ன பேருய்யா இது?

டீசரின் தொடக்கமே போராடுவோம்… போராடுவோம்… என்ற வசனம். இதுவும் ரஞ்சித்தின் இயக்கத்தில் ஒரு ரஜினி படம்  என்பதை சொல்லியடிக்கிறது இந்த வசனம். சில மாதங்களுக்கு முன்பு காலா படத்தின் டைட்டில் வெளியான போது, காலாவா? என்ன பேரு இது என்று பலரும் புலம்பித்தள்ளினர். அப்போதே அந்தப் பெயருக்கான விளக்கத்தை கொடுத்தது படக்குழு. இப்போது டீசரிலும்   காலான்னா கருப்பு… காலன்… கரிகாலன்… சண்டைபோட்டு காக்குறவன்… என்ற சமுத்திரகனியின் குரலில் அதற்கான விளக்கம் மீண்டும் கிடைத்துள்ளது.

கபாலி போன்று அனல் பறக்குதா?

நெருப்புடா என்றது கபாலி. கருப்புடா என்கிறது காலா. கபாலி டீசரில் நெருப்புடா… மகிழ்ச்சி… போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தனர். இந்த டீசரில் கருப்பு நிறத்தின் மகிமையை சொல்லியிருக்கிறார்கள். கபாலியில் மலேசிய தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினையை பேசினார் ரஞ்சித். இதில் மும்பை தாராவியில் வாழும் தமிழர்களின் பிரச்சினையை பேசுகிறார். கபாலி டீசரில் அருண்ராஜா காமராஜ் அடிவயிற்றிலிருந்து நெருப்புடா என்று கத்தினார். இதில் யோகி. கபாலியில் சைரன் தீம். காலாவில் விசில் தீம்.

செட்டிங்கா… வேங்கை மகன் ஒத்தைல நிக்கேன்… தில்லிருந்தா மொத்தமா வாங்களே…, இந்த கரிகாலனோட முழு ரவுடி தனத்த பார்த்ததில்ல இல்ல… பார்ப்பீங்க போன்ற பஞ்ச் வசனங்கள், வேங்கை மகன் விசில் தீம் போன்றவை ரஜினி ரசிகர்களுக்கென்றே வைக்கப்பட்டுருக்கிறது. மொத்தத்தில் காலாவும் கபாலியை போன்றே தெறிக்கவிடுகிறது.

 

 

 

Related Articles

” வேகம் மட்டும் போதாது, விவேகம் வே... சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது. சிஎஸ்கே ரசிகர்கள்...
பிளாஸ்டிக் தடையை மதிக்காத தமிழக மக்கள்!... இந்த ஆண்டு முதல் தமிழகம் முழுக்க பிளாஸ்டிக் தடை உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு. அதன் படி வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாக நிறுத்...
சாவுக்கிதார் என்றால் மக்கள் காவல்காரன் எ... சுதந்திர தின உரையின்போது, நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல; தலைமை காவல்காரன் என்று குறிப்பிட்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.அதை அடுத்த கட்டத்திற்க...
சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?... நாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத...

Be the first to comment on "காலா டீசர் – நெருப்புடா என்றது கபாலி… கருப்புடா என்கிறது காலா…"

Leave a comment

Your email address will not be published.


*