குறிப்புகள் இல்லாமல் பதினைந்து நிமிடங்களுக்குப் பேச முடியுமா? ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால்

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். பிஜெபி புயலின் மத்தியில் கர்நாடகம் இருப்பதாக அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து இருக்கிறார்.

மைசூர் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் ‘கர்நாடகாவின் நம்பிக்கையாக எடியூரப்பா திகழ்கிறார். நாட்டின் அடுத்த முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார்’ என்றார்.

‘கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நம் இந்திய நாடு ஒரு சரித்திர சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களும் மின்சார வசதியை பெற்று இருக்கின்றன. இந்தச் சரித்திர சாதனையை நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் நான் சமர்ப்பணம் செய்கிறேன்’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

 

ராகுல் காந்திக்கு சவால்

பிரதமரின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி என்ற அறிவிப்பை ‘மற்றுமொரு பொய்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுலின் இந்த விமர்சனத்துக்குப் பதில் கூறும் வகையில் தனது தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் ‘2005 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங், 2009 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்படும் என்று அறிவித்தார். ஆனால் நடந்தது என்ன? கேள்வி கேட்பதற்கு முன்பு ராகுல் காந்தி இந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

மேலும் பேசிய அவர் ‘ராகுல் காந்தி தொடர்ந்து 15 நிமிடங்களுக்குப் பேசினால், என்னால் அவர் முன்னாள் நிற்க கூட முடியாது என்று தெரிவித்து இருக்கிறார். அவர் சொல்லியிருப்பது சரிதான். அவர் பேசுபவர் மட்டும் தான், ஆனால் நாங்கள் வேலை செய்பவர்கள். அதனால் நாங்கள் உங்கள் முன்பு அமர்வதற்குக் கூடத் தகுதி பெற்றவர்கள் தான்’ என்றார்.

மேலும் ‘காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் பற்றி நீங்கள் ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ அல்லது உங்கள் தாய் மொழியிலோ எந்தக் காகித குறிப்புகளும் இல்லாமல் தொடர்ந்து 15 நிமிடங்களுக்குப் பேச முடியுமா?’ என்று ராகுல் காந்திக்கு பிரதமர் எதிர் சவால் விடுத்துள்ளார்.

மே 8 ஆம் தேதி வரை பிரதமர் 12 தேர்தல் பேரணிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். மே 12 ஆம் தேதி கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் பத... கடந்த 2015ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் 2016ம் ஆண்டு 73 நகரங்கள், 2017ஆம் ஆண்டு 434 நகரங்கள், 2018ஆம் ஆண்டு 4 ஆய...
உங்களுக்கு விருப்பமான ஐபிஎல் வீரர்களை நீ... ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கிரிக்கெட் விரும்பிகளுக்குக் கொண்டாட்டம் தான். குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியர்களின...
மூன்றாம் உலகப் போர் எப்பவோ ஆரம்பிச்சிடுச... கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, படங்களைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார் விக்ரம் பிரபு. கனக்கச்சிதமான தோற்ற...
அற்புதம்மாள் வாழ்க்கையை படமாக எடுக்கிறார... பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என்று தொடர்ந்து வெற்றிப் படங்களையும் விருது படங்களையும் தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். அவ...

Be the first to comment on "குறிப்புகள் இல்லாமல் பதினைந்து நிமிடங்களுக்குப் பேச முடியுமா? ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால்"

Leave a comment

Your email address will not be published.


*