2018ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்!

Top 10 Best Movies of 2018

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வருடத்திற்கு நூறு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அசால்ட்டாக இருநூறு படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதிலும் இந்த வருடம் மார்ச் டூ ஏப்ரல் காலத்தில் படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகளுக்கு ஸ்ட்ரைக் சொல்லி இருந்த போதும் அசால்ட்டாக 181 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

ஜனவரியில் 14 படங்கள், பிப்ரவரியில் 21 படங்கள், மார்ச்சில் 1 படம், ஏப்ரலில் 5 படங்கள், மே வில் 19 படங்கள், ஜூனில் 19 படங்கள், ஜூலையில் 12 படங்கள், ஆகஸ்ட்டில் 25 படங்கள், செப்டம்பரில் 15 படங்கள், அக்டோபரில் 16 படங்கள், நவம்பரில் 17 படங்கள், டிசம்பரில் வரும் வெள்ளி (டிசம்பர் 28) வெளியாக இருக்கும் இரண்டு படங்களையும் சேர்த்து மொத்தம் 181 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன.

அவற்றில் நல்ல படங்கள் என்று பட்டியலிட்டால் நிமிர், ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம், படைவீரன், சவரக்கத்தி, நாச்சியார், மெர்க்குரி, சில சமயங்களில், இரவுக்கு ஆயிரம் கண்கள், ஒரு குப்பைக் கதை, கோலி சோடா 2, நடிகையர் திலகம், வஞ்சகர் உலகம், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மேற்குத் தொடர்ச்சி மலை, 60 வயது மாநிறம், அண்ணனுக்கு ஜே, யு டர்ன், பரியேறும் பெருமாள், 96, ராட்சசன், வட சென்னை, காற்றின் மொழி, துப்பாக்கி முனை, அடங்க மறு, கனா, இரும்புத்திரை, காலா, டிக் டிக் டிக், கடைக்குட்டி சிங்கம், இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம், சர்கார், 2. O என்று 35 படங்களே அடங்குகின்றன. வெளியான 181 படங்களில் 35 படங்களே ஓரளவுக்கு நல்ல படம் என்ற பெயரைப் பெறுகிறது. இந்த 35 படங்களில் மிகச் சிறந்த பத்து படங்களை அதன் தரத்தின் அடிப்படையில் வரிசைப் படுத்தப் பட்டுள்ளது.

10. படைவீரன், அண்ணனுக்கு ஜே, காற்றின் மொழி, யு டர்ன், துப்பாக்கி முனை, கனா, மெர்க்குரி, சில சமயங்களில் , இமைக்கா நொடிகள், செக்கச் சிவந்த வானம், காலா, இரும்புத் திரை, ஸ்கெட்ச், கடைக்குட்டி சிங்கம் ஆகிய 14 படங்களும் பத்தாவது இடத்தில் உள்ளன.

9. 60 வயது மாநிறம்.

இந்தப் படம் பெரிய அளவில் யாராலும் கண்டு கொள்ளப் படவில்லை. ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் வெற்றிப் படம் இல்லை என்ற போதிலும் சிறந்த படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

8. சவரக்கத்தி.

இயக்குனர் மிஷ்கின் மற்றும் இயக்குனர் ராம் கூட்டணியில் உருவாகி ஓரளவுக்கு வெற்றி பெற்ற படம். எளிமையான இனிமையான படத்தைப் பார்த்த உணர்வை தந்தது ஜி.ஆர். ஆதித்யாவின் இயக்கம். தமிழச்சி தங்க பாண்டியனின் அண்ணாந்து பார் பாடலும், மிஷ்கினின் தங்க கத்தி வெள்ளிக் கத்தி சவரக்கத்தி பாடலும் நம் மனதை வெகுவாக கவர்கின்றன.

7. நிமிர்.

மகஷிண்டே பிரதிகாரம் என்ற மலையாள படத்தின் ரீமேக். பிரிய தர்சன் இயக்கத்தில். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியானது. மகஷிண்டே பிரதிகாரம் பட அளவுக்கு இல்லையென்று பலர் கூறினாலும் இந்தப் படமும் சவரக்கத்தி படத்தைப் போல ஒரு இனிமையான படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வைத் தந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

6. ஒரு குப்பைக் கதை.

குப்பை அள்ளும் மனிதரின் கதையை மையமாகக் கொண்டு எடுத்த படம். அவர்கள் படும் துன்பத்தை இதற்குமுன் எந்த சினிமாவும் காட்டிராத வகையில் அப்பட்டமாக காண்பித்து வியக்க வைத்திருந்தார் இந்தப் படத்தின் இயக்குனர். பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் தமிழின் மிக முக்கியமான படங்களில் இந்தப் படம் தனக்கென ஒரு இடம் பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

5. 96.

காதலே… காதலே… என்ற வரிகள் இந்தாண்டில் பலருடைய வாயில் முணுமுணுக்க பட்ட வரிகள். கோவிந் வசந்தாவின் இசை அப்படியொரு மேஜிக் செய்து எல்லோரையும் அந்தப் பாடலுக்கு அடிமையாக்கி வைத்திருந்தது. ஜெஸ்ஸிக்குப் பிறகு திரிஷாவை ஜானு கதாபாத்திரத்தில் அதிகம் ரசிக்க முடிந்தது. இந்த ஆண்டின் சிறந்த காதல் படம் என்றால் நிச்சயம் 96 என்று சொல்லலாம்.

4. ராட்சசன்.

17 நடிகர்களின் புறக்கணிப்பு, 20 தயாரிப்பாளர்களின் புறக்கணிப்பு என்று பல வலியை சுமந்துகொண்டு இயக்குனர் ராம் குமார் இயக்கிய இரண்டாவது படம். கிறிஸ்டோபர் கதாபாத்திரம் சர்ச்சைக்கு உள்ளானாலும் வில்லனை காட்டிய விதம் பார்வையாளர்களை மிரள வைத்தது. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வந்து பெரிய வெற்றியைத் தட்டிச் சென்ற படம்.

3. பரியேறும் பெருமாள்

எழுத்தாளர் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம். கருப்பி… கருப்பி… பாடல் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. சாதி ஆணவப் படுகொலையை வலியுடன் கூறிய சமத்துவம் காப்போம் என்பதை ஏக்கத்துடன் கூறிய மிக முக்கியமான படம். ஒவ்வொரு காட்சியும் ரசித்து ரசித்து எடுத்திருந்தார் இயக்குனர்.

2. மேற்குத் தொடர்ச்சி மலை

பல வருடங்கள் இந்தப் படக்குழுவினர் மிகுந்த சிரமத்தை அனுபவித்து செதுக்கிய படம். பல இடங்களில் ரிலீஸ் ஆகாமல் இருந்து பத்திரிக்கையாளர்களின் ஆதரவால் பிக்கப் ஆன நல்ல படம். காட்சிக்கு காட்சி யதார்த்தம் நிரம்பி வழிகிறது. ஹீரோயிசம் என்பதே துளியளவும் இல்லாத இந்தப் படம் நாவல் படிப்பது போன்ற உணர்வை தந்தது.

1. வட சென்னை.

வட சென்னை பகுதி மக்கள் மற்றும் வட சென்னையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர்களின் மனக்கசப்பை சம்பாதித்த படம். ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு டீடெய்லிங். ஏகப்பட்ட லைவ் மூமொண்ட்கள். வெகுஜன மக்களை இது போன்ற படைப்புகளை ரசிக்க வைக்கும் வகையில் படம் எடுப்பது என்பது சிரமமான காரியம். எப்படித் தான் எடுத்தாரோ என்று வியக்க வகையிலான அற்புதமான மேக்கிங். இது போன்ற படைப்பை தயாரிக்க முன் வந்த நடிகர் தனுஷ் பாராட்டுக்குரியவர்.

Related Articles

டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிக... காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே. நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம் நேர...
பூ ராமு” – நம் மனதில் நீங்கா... " இவர் தான் உன் அப்பாவா... "" ஆமா சார்... ""இப்படியொரு அப்பாவியான அப்பாவ வச்சிக்கிட்டு ஆள மாத்தி கூட்டி வந்துருக்கியேடா... "" உனக்கொரு விஷ...
காலா டீசர் – நெருப்புடா என்றது கபா... மார்ச்1ம் தேதி காலை பதினொரு மணிக்கு காலா டீசர் ரிலீஸ் என்ற அறிவிப்பை வெளியிட்டது காலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ். அதனைத்தொடர்ந்...
“சைக்கோ பெண்களுக்கான படம்!”... கடந்த ஜனவரி 24ம் தேதியன்று ரிலீசான மிஷ்கினின் சைக்கோ படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படத்திற்கான நேர்மறை எதிர்மறை விமர்சனங்க...

Be the first to comment on "2018ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*