- சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நீ மாறாத… உனக்கேத்த மாதிரி சூழ்நிலையவே மாத்து…
- இந்த உலகத்துல கொடுமையான விஷியம் ரெண்டு.
ஒன்னு அறியாமைல இருக்கறது… இன்னொன்னு அத அறியாம இருக்கிறது …
- கொலகார குப்பத்துல பொறந்தா கொலகாரனா தான் ஆவனும்னு அவசியம் இல்ல… நீங்க நினைச்சா என்ன வேணா ஆகலாம்…
- போன தலைமுறை வறுமைனாலும் பயத்தினாலயும் பொறுக்கி தனமா வாழ்ந்த வாழ்க்கைய இந்த தலைமுறை என்ஜாய் பண்ணி வாழ ஆரம்பிச்சிட்டான்…
- உழைச்சா தான் வாழ முடியுங்கற எண்ணத்தயே அழிச்சு தப்பு பண்ணா தான் வாழ முடியும்னு நம்ப வச்சிட்டான்…
- தேவையில்லாததுக்கு தான் காரணம் தேவை. தேவை இருக்கறதுக்கு காரணமே தேவையில்லை.
- என் ப்ராடக்ட வாங்கு வாங்குனு கெஞ்சி கெஞ்சி வாங்ங வைக்கறது hard work… அதே கஷ்டமருக்கு என்ன வேணும்னு தெரிய வச்சு அவனையே அத வாங்க வைக்கறது smart work…
- பிறந்த குழந்தைக்கு நிலாவ காட்டி அம்மா சோறு ஊட்றதல இருந்து செத்த அப்றம் ஒரு ரூபாய் வச்சு என் பொணத்த ஒழுங்கா பொதைடா பொதக்கறவன்ட சொல்றதும் ஒருவித மார்க்கெட்டிங் தான்…
- எங்க இதெல்லாம் நடந்துட்டா எங்க இதெல்லாம் கிடைச்சுட்டா நம்ம கைய மீறி போய்டுவானுங்க தயவில்லாம வாழ்ந்துடுவாங்கன்னு இப்ப வரைக்கும் எதுவும் கிடைக்காம பண்றாங்க…
- எல்லோரும் லைட் போட்டாங்கன்னா அவிங்களோட சேர்ந்து போராடுவேன்… யாருமே லைட் போடலனா தனி ஆளா நின்னு போராடுவேன்…
- மனுசனுக்கு ஆசைன்னு ஒன்னு இருக்கற வரைக்கும் நாம எது வேணாலும் வித்துட்டே இருக்கலாம்
- நாமெல்லாம் பொருள விக்கல… பொய்ய விக்குறோம்…
- இங்க எல்லாரும் தப்பான வேலைய செஞ்சிட்டு இருக்காங்கனு நினைச்சா இவிங்க எல்லோரும் வேலையவே தப்பா தான் செஞ்சிட்டு இருக்கானுங்க…
- நம்ம லோ கிளாஸ் தான் நம்மளால எதுவும் முடியாதுன்னு தெரிஞ்சி வாழ்ந்துட்டு இருக்கோம்… ஆனா மிடில் கிளாஸ் பாவம்… முன்னேறிடுவோம்னு நம்பி நம்பி ஏமாந்துட்டே இருக்காங்க…
- அடுத்தவன கொன்னா தான் கூலிப்படையா… அடுத்தவனுக்குத் தெரியாம அவன் பாக்கெட்ல 1 ரூபாய் எடுத்தாக்கூட அவன் கூலிப்படை தான்…
- சில கன்ட்ரிஸ்ல வளம் இருக்கும்… சில கன்ட்ரிஸ்ல முட்டாள்தனமான மக்கள் இருப்பாங்க… இது ரெண்டுமே இருக்கற நாடு இந்தியா…
- ஒருத்தன் வெறும் 8 மணி நேரம் தான் வொர்க்கர்… மீதீ இருக்கற 16 மணி நேரம் கன்ஸ்யூமர்…
- நாமெல்லாம் 200 வருசம் என்ன படிச்சிட்டு இருக்கோம்… மெக்காலே எஜூக்கேசன் சிஸ்டம்… பிரிட்டிஷ் காரன் எஸ் சார் எஸ் சார் போட்ற குமாஸ்தாவ உண்டாக்குறதுக்காக கண்டுபிடிச்சது…
- நாம வாங்குற சம்பளம் நாம செய்ற வேலைக்குத் தாண்டா… அது முதலாளிங்க செய்ற தப்ப மறைக்கறதுக்கான லஞ்சம் இல்ல…
- எந்தவொரு விஷியம் பண்ணாலும் 100% ஆளுங்கள திருப்தி படுத்தமுடியாது… 5% எதூக்க தான் செய்வானுங்க… அவிங்கள கன்வின்சும் பண்ண முடியாது… தவிர்க்கவும் முடியாது…
- இந்த முட்டாள் ஜனங்க கலாம் வந்தா மாறிடும்… கெஞ்ரிவால் வந்தா மாறிடும்… சகாயம் வந்தா மாறிடும்… யார் வந்தாலும் நாம மாறுனா தான் எல்லாமே மாறும்னு தெரிச்சிக்க இன்னும் 100 வருசம் ஆகும்…
Be the first to comment on "உலகின் தலைசிறந்த சொல் செயல் – வேலைக்காரன் வசனங்கள்!"